தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோரை பற்றிய அரசியல் பேச்சுக்கள் அவ்வப்போது எழும்.
ஆனால் இவர்கள் இருவரும் வழக்கம்போல அமைதியாக இருந்துவிடுவார்கள்.
அடுத்த மாதம் ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனது ஆதரவு யாருக்கும் இல்லை என தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.
எனவே விஜய்யின் நிலைப்பாடு என்ன? ரசிகர்கள் கேட்கத் தொடங்கினர்.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி பேட்டி ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதில்…. சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர ஆர்வம் காட்டினேன்.
அவர் புகழ்பெற்ற நடிகர் என்பதால், அரசியலில் மாற்றம் கொண்டு வர முடியும் என நினைத்தேன்.
ஆனால் காலம் செல்ல செல்ல, அரசியல் என்பது ஒரு சுத்தப்படுத்த முடியாத சாக்கடை என்பதை உணர்ந்தேன்.
தற்போது உள்ள அரசியலை நான் பார்த்தது இல்லை.
இந்த சூழலை தமிழக மக்களும் அறிவார்கள்.
எனவே, என் மகன் விஜய் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை.
எனவே, விஜய்யின் மக்கள் இயக்கம், யாருக்கும் ஆதரவு அளிக்க போவதில்லை’ என்றார்.
SA Chandrasekar explains Vijays status in Politics