தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று (ஜீன் 16) இரவு மிகச்சரியாக 8 மணிக்கு ரஜினியின் கபாலி நெருப்புடா பாடல் டீசர் வெளியானது.
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் இது வெகுவாக கவர்ந்துள்ளது.
எனவே வெளியாகி 3 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை இது பெற்றது.
இந்நிலையில் இந்த டீசர் குறித்து பிரபல காமெடி நடிகரான ரோபா சங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…
“நெருப்புடா டீசரை நான் பார்க்க ஆரம்பிக்கும் போது, 70% சார்ஜ் என் மொபைல் போனில் இருந்தது.
ஆனால் தற்போது சார்ஜ் முடியும் தருவாயில் உள்ளது. அத்தனை முறை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
இந்த டீசருக்கு அடிமையாகி விட்டேன். தலைவா” என்று தெரிவித்துள்ளார்.