தனுஷ் பட பாணியில் அடல்ட் படம்; RK சுரேஷ் இயக்கும் ‘காலண்டர்’

தனுஷ் பட பாணியில் அடல்ட் படம்; RK சுரேஷ் இயக்கும் ‘காலண்டர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)விநியோகஸ்தர், தயாரிப்பாளர், வில்லன், என பன்முக திறமை கொண்டவர் ஆர்.கே.சுரேஷ்.

அண்மையில் வெளியான பில்லா பாண்டி படத்தின் மூலம் ஹீரோவானார்.

மேலும் சில மலையாள படங்களில் முக்கிய கேரக்டரிலும் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் இயக்குனராக இருக்கிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க ‘காலண்டர்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த படம் தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’ மாதிரி அடல்ட் கண்டன்ட் படமாக இருக்கும் என அவரே சொன்னார்.

இதனை ரீல் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்

பிகில் படத்தில் விஜய்யுடன் இணையும் ஐ.எம்.விஜயன்

பிகில் படத்தில் விஜய்யுடன் இணையும் ஐ.எம்.விஜயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)விஜய்யின் பிகில் படத்தில் நயன்தாரா, இந்துஜா, கதிர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

அட்லி இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இதில் ஹாலிவுட் படங்களில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ள எமி மெக்டனெல் என்பவர் இணைந்து பணியாற்றி வருகிறார்.

தற்போது கேரளாவைச்சேர்ந்த ஐ.எம்.விஜயன் என்பவரும் இணைந்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே திமிரு, கொம்பன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்காக காத்திருக்கும் பாலிவுட் புரொடியூசர்; மௌனம் காக்கும் தல

அஜித்துக்காக காத்திருக்கும் பாலிவுட் புரொடியூசர்; மௌனம் காக்கும் தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’. படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணி இணையவுள்ளது.

ஆனால் இதே கூட்டணி 3வது முறையாக இணையவுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், அதை தயாரிப்பாளர் போனி கபூர் மறுத்துள்ளார்.

“’நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு ஒரு ஆக்ஷன் படம் தயாரிக்க உள்ளோம். ஒரு ஹிந்திப் படத்தில் நடிப்பதற்காக அவரிடம் கேட்டுள்ளோம், ஆனால், அவர் இன்னும் சம்மதிக்கவில்லை,” என தெரிவித்துள்ளார்.

ஆனால் அஜித் எப்போது சம்மதிப்பார்? என்பது அவருக்கே வெளிச்சம்.

அஜித்-விஷாலை தொடர்ந்து விஜய்யுடன் இணையும் அர்ஜூன்

அஜித்-விஷாலை தொடர்ந்து விஜய்யுடன் இணையும் அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்த அர்ஜூன், சமீபகாலமாக டபுள் ஹீரோ சப்ஜெக்டிலும், வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார்.

அஜித்துடன் மங்காத்தா, விஷாலுடன் இரும்புத்திரை, விஜய் ஆண்டனியுடன் கொலைகாரன் படங்களிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின்ன் 64-வது படத்தில் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ராசிகண்ணா, ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

கடாரம் கொண்டான் படத்தில் கமலுடன் இணைந்து மகிழ்ச்சி – லேனா

கடாரம் கொண்டான் படத்தில் கமலுடன் இணைந்து மகிழ்ச்சி – லேனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)மலையாள சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் நடிகைகளில் ஒருவர் லேனா.

நாயகி வேடம் இல்லை என்றாலும் அதற்கு இணையான வேடம் இவருக்கு வழங்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் டாக்டராக நடித்திருந்ர் இவர்.

தற்போது கமல் தயாரித்துள்ள விக்ரமின்ள கடாரம் கொண்டான் படத்திலும் நடித்துள்ளார்.

கமல் தயாரித்துள்ள படத்தில் நடித்தது தன்னுடைய பாக்கியம் என கூறியுள்ளார் லேனா.

கடாரம் கொண்டான் இசை விழாவில் கமலுடன் நின்று புகைப்படமும் எடுத்து ஒரு ரசிகையாக மகிழ்ந்துள்ளார்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே

சர்வதேச அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு ராமசாமி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு சிறந்த குணத்தைக் கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் மிகவும் யதார்த்தமான கதை முன்னுரை மற்றும் இயற்கையான கதாபாத்திரங்களுடன் நேட்டிவிட்டி அழகை வெளிப்படுத்தும் விதம் அவரது திரைப்பட உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது அவரை நம் ஊரில் மட்டுமல்லாமல், பல்வேறு பிராந்திய சினிமா துறைகளிலும் பிடித்த இயக்குனராக ஆக்கியுள்ளது. இப்போது, அவரது சமீபத்திய படமான “கண்ணே கலைமானே” இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த இந்த திரைப்படம் 2020ஆம் ஆண்டின் மும்பை தாதா சாஹேப் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி ரிவியூவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்கத்தா சர்வதேச வழிபாட்டு திரைப்பட விழாவின் 30வது சீசனில் ‘சிறந்த சாதனை விருதை’ வென்றிருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, “இது நம் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட சகோதரத்துவத்திற்கும் கிடைத்த வெற்றியாக நான் உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட, இது ஒரு அறிவூட்டும் செயல்முறையாக நினைக்கிறேன். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எவரையும் தொட்டு விடும் ‘மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள்’ என்ற புதிய வகை சினிமாவை இதன் மூலம் நான் கண்டு கொண்டிருக்கிறேன். இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு முன்பே, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடையே படத்துக்கு கிடைத்த விமர்சன வரவேற்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விருதுகளை வென்ற படங்கள் ‘கலைப்படங்கள்’ என்று அழைக்கப்பட்ட காலங்களும், அவற்றிற்கு பொதுமக்களிடையே சரியான அங்கீகாரம் இருக்காது என்றும் பேசப்பட்ட காலங்கள் இருந்தன. ஆனால் ‘கண்ணே கலைமானே’ இரண்டையும் பெற்றிருப்பதை பார்க்கும் போது, எதிர்காலத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்க எனக்கு அதிக தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.

More Articles
Follows