‘தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை’… கஸ்தூரிராஜாவிடம் இப்படி சொன்னது யார்?

‘தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை’… கஸ்தூரிராஜாவிடம் இப்படி சொன்னது யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush dont have hero look who said this to Kasthuri RajaJVDM கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘துணிகரம்’.

கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் பாலசுதனும் கதைக்கு திருப்பமான முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படம் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இசைக்கு ஷான் கோகுல் மற்றும் பின்னணி இசைக்கு தனுஜ் மேனன் என இரண்டு இசையமைப்பளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கஸ்தூரிராஜா, பேரரசு, ஆர்.கே.வித்யாதரன் நடிகர்கள் போஸ் வெங்கட், விஜய் டிவி சீரியல் புகழ் அமித் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் (கில்ட்) ஜாக்குவார் தங்கம் ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது, “மும்பையிலே ரோஹித் ஷெட்டின்னு ஒரு டைரக்டர் இருக்கிறார். அவர்தான் சும்மா ஜிம் பாடியெல்லாம் வச்சுக்கிட்டு படம் டைரக்ட் பண்ணுவாரு.

அவருக்கப்புறம் தமிழ் சினிமாவுல அப்படி ஒரு ஜிம் பாடி டைரக்டரா இந்த படத்தோட இயக்குனர் பாலசுதன் தெரியுறாரு. இந்த குழுவினருக்கு ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

வெற்றிக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி வந்தால், அதுவரை பொறுமையாக இருங்கள். நானும் அப்படி காத்திருந்து, இன்று கவண்’ படம் மூலம் அப்படி ஒரு வெற்றி அங்கீகாரத்தை பெற்று, அதன்பின் இப்பொது இந்த மேடையேறி பேசும்போது கிடைக்கும் சந்தோசமே புதிதாக இருக்கிறது” என கூறினார்.

விழாவில் பேசிய கஸ்தூரிராஜா, ஒரு நபர் இயக்குனராக மாறி புகழ்பெறுவதற்காக என்னனென்னவெல்லாம் இழக்கிறான் என நெகிழ்ச்சியாக பேசினார்.

“துணிகரம் என டைட்டில் வைத்ததிலேயே படக்குழுவினரின் துணிச்சல் தெரிகிறது.. இந்த சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டுமுறை நான் கோமாளியாக கண்ணுக்கு தெரிஞ்சிருக்கிறேன். இப்போ கூட அப்படித்தான் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன்.

முதல் தடவையா என்னோட படத்தை டைரக்ட் பண்ண தயாரிப்பாளர் தேடி அலைஞ்சபோது. இரண்டாவது துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியபோது. அப்போ தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை.

அதனால் படம் எடுக்க பணம் கொடுத்த பைனான்சியர், ‘அப்பனும் மகனும் கேமராவ வச்சு விளையாடிட்டு இருக்காங்க’ன்னு விமர்சனம் பண்ணார்.

அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துதான் இங்கே வந்துள்ளோம்.. எனக்கு ராஜ்கிரண்னு ஒரு கடவுள் கிடைச்சார். இந்த உயரத்துக்கு வர முடிஞ்சது”. என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “இன்னைக்கு கொஞ்சம் சினிமா ஆரோக்கியமா இருக்கு. ஒரு ஆடியோ ரிலீஸுக்கு டிஸ்ட்ரிபியூட்டர் வர்றதே ஆரோக்கியமான விஷயம் தான். சின்னப்படம் வந்தாலும் மூணு நாள் தான். சூப்பர்ஸ்டார் படமும் மூணு நாள்.

இன்னைக்கு உலகம் பூரா பேசப்படுற பாகுபலி கூட பத்து நாட்கள் தான். அதுனால இன்னைக்கு நிறைய படங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கு” என்றும் இன்றைய சினிமா சூழலை விவரித்தார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது, “உதவி இயக்குனராக இருந்து இயக்குனராவதற்காக, இந்த புகழை அடைவதற்காக இளமையெல்லாம் தொலைக்க வேண்டி இருந்தது. தீபாவளி, பொங்கல், திருவிழா, நல்லது கெட்டது என எந்த விசேஷத்திற்கும் ஊருக்கு போனது இல்ல. ஊருக்குப்போய் ரெண்டு

நாள் தங்கினா, என்னப்பா இன்னும் டைரக்டர் ஆகலைன்னு கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க பையன் 2௦ வருஷமா சும்மா சுத்திக்கிட்டு இருப்பான்.

ஆனா அது அவங்களுக்கு பெரிசா தெரியாது. சினிமாவுக்கு போனா உடனே சாதிக்கணும் அப்படிங்கிறது அவங்க நினைப்பு. ஆனா சினிமாவுல வெற்றிக்காக நிறைய இழக்கணும். ரொம்பநாள் காத்திருக்கணும்.

திருப்பாச்சி ரிலீஸான அன்னைக்குதான் ஊர்ல பொங்கல் கொண்டாடுனேன். சிவகாசி வெளியான அந்த தீபாவளி தான் நான் ஊர்ல கொண்டாடுனேன்.” என்று படக்குழுவினருக்கு தனது வாழ்க்கை அனுபவத்தை பாடமாக எடுத்தார் பேரரசு.

மேலும் இன்றைக்கு இயக்குனர்களாக முதல் படம் எடுக்கும் இயக்குனர்கள் எப்படி இருக்கவேண்டும் என ஒரு குட்டிக்கதை மூலமும் விளக்கினார் பேரரசு.

“ஒரு ராஜா. அவருக்கு மூன்று மகன்கள். தனக்குப்பின் யார் நாட்டை ஆளவேண்டும் என முடிவு செய்ய தனது மூன்று மகன்களையும் அழைத்து ஒரு போட்டி வைத்தார்.

காட்டிற்கு சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவை கொண்டுவந்து மூவரும் ஆளுக்கொரு ஒரு ஏழைக்கு கொடுக்கணும். ஆனால் அந்த மூட்டையை என்னிடம் பிரித்துக்காட்ட தேவையில்லை என உத்தரவிட்டார்.

மகன்கள் மூவரும் காட்டிற்கு சென்றனர். முதலாமவன் மரத்தில் ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டை கட்டினான். இரண்டாமவன் சோம்பல் பட்டுக்கொண்டு கீழே விழுந்த அழுகிய பழங்களே போதும் என மூட்டை கட்டினான். மூன்றாமவனோ ஏழைக்குத்தானே கொடுக்கப்போகிறோம் என அலட்சியத்துடன் கீழே கிடந்த குப்பைகளை அள்ளி மூட்டை கட்டினான்.

மூவரும் ராஜாவிடம் வந்து நிற்க, ராஜாவோ நீங்கள் இதை கொடுக்கவேண்டிய அந்த ஏழை வேறு யாருமில்லை.
நீங்கள் தான் அந்த ஏழைகள். இரண்டு வாரங்களுக்கு நீங்கள் கொண்டு வந்ததை நீங்களே சாப்பிடுங்கள் என கூறி ஆளுக்கொரு அறையில் தள்ளி பூட்டிவிட்டார்.

நல்ல பழங்களை கொண்டுவந்தவன் நன்றாக சாப்பிட்டு சுகமாக இருந்தான். மற்ற இரண்டு பேரின் நிலையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இப்படித்தான் முதல் பட வாய்ப்பு கிடைக்கும் இயக்குனர்கள், ஏனோ தானோவென்று அந்த நேரத்திற்கு வேலைபார்த்தால் அது அவர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும். நல்ல கதையாக தேர்வு செய்து படங்களை இயக்கினால் உங்களுக்கும் வாழ்வு.

தயாரிப்பாளருக்கும் லாபம்” என அடுத்ததாக படம் இயக்கவரும் இயக்குனர்களுக்கு பொட்டில் அடித்தாற்போல் அறிவுரையும் கூறினார் பேரரசு.

வழக்கம்போல திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜாக்குவார் தங்கம் இந்த மேடையிலும் தனது கருத்தை பதிவு செய்தார்.

மேலும் விஷால் வரும் மே-3௦ முதல் ஆரம்பிக்க இருக்கும் போராட்டம் குறித்து பேசிய அவர் அது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என தெரியவில்லை. பார்க்கலாம்” என தனது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினார்.

படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பாலசுதன் பேசும்போது, இது தனது பனிரெண்டு வருட கனவு என்றார். படத்தின் ஹீரோவாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன், இந்தப்படத்தின் ஆடிசனுக்காக சென்றபோது சட்டையின் கை மடிப்பை எல்லாம் மடித்துவிட்டு கெத்தாக சென்றாராம்.

ஆனால் இயக்குனரின் பாடிபில்டிங் தோற்றத்தை பார்த்ததுமே, ஆட்டோமேட்டிக்காக சட்டையை இறக்கிவிட்டாராம். ஆனால் டைரக்டர் தான் ஹீரோவாக நடிப்பாரோ என சந்தேகப்பட்டவருக்கு, ஹீரோ சான்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி அடைய வைத்துவிட்டாராம் இயக்குனர் பாலசுதன்.

சமீபத்தில் வெளியான ‘இலை’ படத்தை வெளியிட்ட ஆக்சன்-ரியாக்சன் நிறுவனம் தான் இந்தப்படத்தையும் வெளியிடுகிறது.

Dhanush dont have hero look who said this to Kasthuri Raja

Thunigaram audio launch

அஜித்தின் 3வது காதலிதான் ஷாலினி; ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்

அஜித்தின் 3வது காதலிதான் ஷாலினி; ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith interview bayilvan and paanduகடந்த மே 1ஆம் தேதி அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனையொட்டி ஒரு பிரபல இணையத்தளத்தில் அஜித் பிறந்தநாள் சிறப்பு பேட்டியில் நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன் மற்றும் பாண்டு கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது…

தனக்கு கீழே வேலை பார்த்தவர்களை உயர்த்தி பார்த்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி, சிவகுமார் போல அஜித்தும் தன் மேனேஜரை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர்.

அவர் வான்மதி படத்தில் நடித்தபோது, அப்பட நாயகியை மணக்க விரும்பினார்.

அதன்படி அவரது அம்மாவிடம் சென்று பெண் கேட்டார். ஆனால் தன் மகள் இப்போது நடிக்க வேண்டும் என அவரது அம்மா மறுத்துவிட்டார்.

அதன்பின்னர் தொடரும் படத்தில் நடித்தபோது, நடிகை ஹீராவுக்கு காதல் கடிதம் எழுதினார். அதுவும் தோல்வியில் முடிந்தது.

ஆனால் அதன்பின்னர் உறுதியாக நின்று ஷாலினியை காதலித்து கரம்பிடித்தார்.

இந்திய நடிகர்களில் இந்து, கிறிஸ்து, முஸ்லீம் ஆகிய 3 முறைப்படி திருமணம் செய்துக் கொண்டவர் அஜித் ஒருவர்தான்” என்று பேசினார்.

வான்மதி, தொடரும், வில்லன் ஆகிய படங்களில் பயில்வான் ரங்கநாதன் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.

தேசிய விருதுபெற்ற காதல்கோட்டை மற்றும் வில்லன் ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் பாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith had 2 love failure then he married 3rd lover Shalini – Bayilvan Ranganathan open talk

ajith 2nd lover heera and 1st love swathi

கமலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை

கமலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanஒரு தனியார் டிவி பேட்டியில் ஒரு உதாரணம் பற்றி கூறும்போது, மகாபாரதம் பற்றி பேசியிருந்தார் கமல்ஹாசன்.

பெண்களை ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றும், மகாபாரதத்தின் சூதாட்ட படலத்தை விட்டே நாம் வரவில்லை என்றும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இது மகாபாரதத்தை இழிவு படுத்துவதாகக் கூறி மனுத்தாக்கல்

இது தொடர்பான வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.

எனவே, கமல் நேரில் ஆஜராக வேண்டும் என நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரியும் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும் நடிகர் கமல்ஹாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடைவிதித்ததுடன் அவர் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.

தன் முதல் மாத சம்பளத்தில் அம்மாவுக்கு பரிசளித்த சூர்யா

தன் முதல் மாத சம்பளத்தில் அம்மாவுக்கு பரிசளித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriyaசினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையில் ரசிகர்களிடையே நற்பெயரை கொண்டவர் நடிகர் சூர்யா.

இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பே, ஒரு துணி எக்ஸ்போர்ட் கம்பெனியில்தான் பணிபுரிந்தார்.

இவரின் முதல் மாத சம்பளத்தில் தன்னுடைய தாய்க்கு ஒரு சேலையை வாங்கினாராம். அதன் மதிப்பு ரூ. 800.

அதை பெற்றுக் கொண்ட இவரது தாய், அன்றே அணிந்துக் கொண்டு கோயிலுக்கு சென்றாராம்.

பின்னர் அந்த வேலையைவிட்டு விட்டு சினிமாவில் சேரும்போது, மற்றவர்கள் சூர்யாவை தடுத்தார்களாம்.

ஆனால், இவரது அம்மாவே இவருக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளார்.

சூர்யாவின் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் விரதம் இருநது கடவுளிடம் வேண்டிக் கொள்வாராம் அம்மா.

அனுஷ்காவை தொடர்ந்து வாள்வீச்சு பயிற்சியில் ஸ்ருதி

அனுஷ்காவை தொடர்ந்து வாள்வீச்சு பயிற்சியில் ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shruti Haasans learns Sword fighting for Sangamitra movieஅண்மையில் வெளியான பாகுபலி 2 படத்தில் வாள் வீசி எதிரிகளை துவம்சம் செய்தார் இளவரசி தேவசேனாவாகிய அனுஷ்கா.

தற்போது இவரது வழியில் ஸ்ருதிஹாசனும், வாள் வீச்சில் லண்டனில் பயிற்சி பெற்று வருகிறாராம்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் சுந்தர் சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்திற்காகத்தான் இந்த வாள் பயிற்சியாம்.

இவரும் இப்படத்தில் இளவரசியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து படக்குழுவினர் கூறியதாவது,

“வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்வதாகவும், அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்” என்றனர்.

பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் அடுத்தடுத்த கட்டங்களையும் கற்று வருகிறார்.

இந்த பயிற்சியின் மூலம் திரையில் ஸ்ருதிஹாசன் சண்டையிடும் காட்சிகள் தத்ரூபமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Shruti Haasans learns Sword fighting for Sangamitra movie

Shruti Haasans learns Sword fighting for Sangamitra movie

ஆர்.கே.சுரேஷ் சூட்டிங்கில் விபத்து; கொதிக்கும் வெந்நீரில் விழுந்தார்

ஆர்.கே.சுரேஷ் சூட்டிங்கில் விபத்து; கொதிக்கும் வெந்நீரில் விழுந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh admitted in Hospital due to fire accident in Vettai Naai shooting spotவிநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ க்குப் பின் வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இப்போது தனி நாயகனாக ‘தனி முகம் ‘ ‘பில்லா பாண்டி” வேட்டை நாய்” போன்ற படங்களிலும் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

‘வேட்டை நாய் ‘ கதை சொல்லி ஆர்.கே. சுரேஷைக் கவர்ந்தவர் தான் எஸ்.ஜெய்சங்கர்.

இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி ‘மன்னாரு’ இயக்கியவர்.

‘வேட்டை நாய் ‘இவரது இரண்டாவது படம்.

நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார்.

ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி , ‘என் உயிர்த் தோழன் ‘ ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள் . இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு மதுரை பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது.

ஆர்.கே.சுரேஷ் மற்றும் அறிமுக வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் இருவரும் மோதிக் கொள்வது போல சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.

நாக் அவுட் நந்தா சண்டைக் காட்சிகளை இயக்கிக் கொண்டிருந்தார். ஒளிப்பதிவாளர் முனீஸ்வரன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்.

அடுப்பில் பானைகளை வைத்து தீ எரிவது போன்ற இடத்தில் படமானது.

அடுப்பில் வெந்நீர் பானைகள் கொதித்துக் கொண்டிருந்தன.

சண்டைக் காட்சி படமான போது அடுப்பில் சரிந்து விழுந்த ஆர்.கே.சுரேஷ் மீது வெந்நீர் பானை விழுந்து வெந்நீர் கொட்டித் தீக்காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

RK Suresh admitted in Hospital due to fire accident in Vettai Naai shooting spot

More Articles
Follows