டிராப்பான பட பர்ஸ்ட் லுக்கை வைரலாக்கும் தனுஷ் ரசிகர்கள்

டிராப்பான பட பர்ஸ்ட் லுக்கை வைரலாக்கும் தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டைரக்டர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணிக்கு என்றுமே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

இந்த நிலையில் புதுப்பேட்டை படம் வெளியான 2006ஆம் ஆண்டில் இவர்கள் கூட்டணியில் உருவாகவிருந்த படம் திருடன் போலீஸ்.

இந்த படம் அறிவிக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அந்த சமயத்தில் வெளியானது.

இப்படத்தை தனுஷின் சகோதரியே தயாரிக்கவிருந்தார்.

ஆனால் இப்படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இதை இப்போது ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே என தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

சூர்யாவுக்கு ஜோடியாக ‘முகமூடி’ நடிகையை செலக்ட் செய்த ஹரி

சூர்யாவுக்கு ஜோடியாக ‘முகமூடி’ நடிகையை செலக்ட் செய்த ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mugamoodi fame Pooja Hegde to be paired with Suriya in Aruvaமிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

அந்த படம் படு தோல்வியை தழுவியதால் இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

சில வருடங்களுக்கு பிறகு மகரிஷி படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ‘அல வைகுண்டபுரம்லு’ என்ற படத்திலும் நடித்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக ‘அருவா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்பட படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் கொரோனா வைரசால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மூலம் 6-ஆவது முறையாக ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் இந்த கூட்டணி இதற்கு முன் இணைந்திருந்தது.

Mugamoodi fame Pooja Hegde to be paired with Suriya in Aruva

மீண்டும் கண்களை காட்டி மிரட்ட வரும் ‘ராகவன் IPS’ கமல்

மீண்டும் கண்களை காட்டி மிரட்ட வரும் ‘ராகவன் IPS’ கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Menon confirms Kamals Vettaiyadu Vilayadu Sequel ராகவன் ஐபிஎஸ் என்ற கேரக்டரில் போலீஸ் கமிஷ்னராக கமல்ஹாசன் மிரட்டியிருந்த படம் “வேட்டையாடு விளையாடு”.

கௌதம் மேனன் இயக்கிய இந்த படத்தில் ஜோதிகா, கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைந்திருந்த இப்படம் 2006ல் வெளியானது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் என் கண்ணை எடுத்துடுவேன் சொன்னியாமே எங்கே எடு என தன் கண்களை காட்டி மிரட்டியிருப்பார் கமல். இந்த காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்பட 2ஆம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

இப்படம் தொடர்பான பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக கவுதம் மேனன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் மாஸான இன்ட்ரோ சீன் வைக்கவுள்ளதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Gautham Menon confirms Kamals Vettaiyadu Vilayadu Sequel

தன் மகள் பிறந்தநாளை முன்னிட்டு 100 மூட்டை அரிசி வழங்கிய அம்ரீஷ்

தன் மகள் பிறந்தநாளை முன்னிட்டு 100 மூட்டை அரிசி வழங்கிய அம்ரீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amrish celebrated his daughter birthday by helping Poor peoplesகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் இந்திய மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

தினக்கூலியை நம்பியுள்ள ஏழை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இருந்தபோதிலும் இந்த கொடி நோயை எதிர்க்க வீட்டில் தங்களை தனிமைப்படுத்த வருகின்றனர்.

பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகாவின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை என 100 மூட்டை அரிசி வழங்கியுள்ளார்.

பிரபல நடிகை Dr. ஜெயசித்ரா அவர்களின் புதல்வனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரீஷ் வழக்காமாகவே தனது பிறந்த நாள் மற்றும் முக்கியமான நல்ல நாட்களை முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று (31.03.2020) மார்ச் 31 தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை,வெகு வித்தியாசமான வகையில் கொண்டாடியுள்ளார் அம்ரீஷ்.

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் காரணமாக அனைவரும் வீட்டிற்குள் தனிமைப்பட்டிருப்பதால தன் குழந்தையின் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று கொண்டாட முடியாத காரணத்தால் எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை அரிசி வழங்கி கொண்டாடியிருக்கிறார்.

இவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் பிரபுதேவா நடிகர் லாரன்ஸ் முதலான பிரபலங்கள் இவரது செயலை பாராட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Amrish celebrated his daughter birthday by helping Poor peoples

முதல்வர் கொரோனா நிவாரண நிதி; முதல் ஆளாக சிவகார்த்திகேயன் கொடுத்த தொகை

முதல்வர் கொரோனா நிவாரண நிதி; முதல் ஆளாக சிவகார்த்திகேயன் கொடுத்த தொகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan donated 25 Lakhs for TN CM relief fundஉலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் அவரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ரூ- 25 லட்சம் நிவாரண நதி கொடுத்துள்ளார்.

இவர் ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவால் சூட்டிங்கை இழந்து தவிக்கும் பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ. 10 லட்சம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன் திரையுலகில் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் ரூ. 2 லட்சம் நிதி கொடுத்திருந்தார். நடிகர்களில் சிவகார்த்திகேயன் தான் முதல் நபர்.

Sivakarthikeyan donated 25 Lakhs for TN CM relief fund

‘கொரோனா டூட்டி இல்லையா.?’ என்று கேட்டவருக்கு ஜூலி கொடுத்த பதில் இதோ…

‘கொரோனா டூட்டி இல்லையா.?’ என்று கேட்டவருக்கு ஜூலி கொடுத்த பதில் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss Julees reply to her fan in Corono Prevention duty கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவரும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.

இதனால் திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகை ஜூலி.

அவரிடம் ஒரு ரசிகர்கள் நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் உங்கள் நர்ஸ் பணிக்கு திரும்பவில்லையா என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜூலி, “பெரும்பாலானோர் இதே கேள்வியை என்னிடம் கேட்கின்றனர். நான் இப்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நர்ஸ் பணி என்பது ஒரு புனிதமான வேலை. அதற்கு முழு அர்ப்பணிப்பு தேவை. பார்ட் டைம் வேலையாக அதை செய்ய முடியாது.

ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் (நர்ஸ் அண்ட் நடிப்பு) செய்வது மிகவும் கடினமானது.

படப்பிடிக்குச் செல்வதால் நர்ஸ் பணிக்கு செல்வதில் பிரச்சினை வரும் . நேரம் தாமதமாகலாம்.

அப்போது நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வரும். நோயாளிகளின் உயிரை என்னால் பணயம் வைக்க முடியாது என்று தன் பதிலை பதிவிட்டுள்ளார் ஜூலி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பு நர்ஸ் ஆக பணிபுரிந்தவர் ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வட இந்திய நடிகை ஷிகா மல்ஹோத்ரா என்பவர் சூட்டிங் இல்லாத சமயத்தில் நர்ஸ் ஆக பணி புரிந்து வருகிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Bigg Boss Julees reply to her fan in Corono Prevention duty

 

More Articles
Follows