நான் பெர்ஃபெக்ட் இல்ல.; என்னை ஸ்டாராக்கி வீட்டீர்கள் .. தனுஷ் அறிக்கை

Actor Dhanushதனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படம் கடந்த 2002ம் ஆண்டு மே 10ம் தேதி வெளியானது.

இப்படம் வெளியாகி 17 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் தளுஷ்.

அதில்… ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகி விட்டது. என்னால் நம்பவே முடியவில்லை.

எதுவும் தெரியாத சின்ன பையனாக இருந்த எனக்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறீர்கள்.

நடிகனாகக்கூட முடியாது என்று நினைத்த என்னை ஒரு ஸ்டாராக மாற்றி இருக்கிறீர்கள், எல்லாம் நேற்று நடந்தது போலவே உள்ளது.

என்னுடைய வெற்றி தோல்வி எல்லாவற்றிலும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். நான் சரியான மனிதன் கிடையாது ஆனால் உங்களுடைய அளவுகடந்த அன்பு, என்னை பண்படுத்தியுள்ளது.

இந்த அன்பு எப்போதும் வேண்டும், அன்பை பரவச் செய்யுங்கள் அன்பு மட்டும் உலகத்தை உருவாக்கும்” என தனுஷ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Overall Rating : Not available

Related News

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல்…
...Read More
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டு தயாரிப்பாளர்கள்…
...Read More

Latest Post