விவசாயிகள் போராட்டம் தெரிகிறது; எங்க உயிர் பிரச்சினை தெரியலையே? தனுஷ் தந்தை ஆதங்கம்

விவசாயிகள் போராட்டம் தெரிகிறது; எங்க உயிர் பிரச்சினை தெரியலையே? தனுஷ் தந்தை ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and kasthuri rajaதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து டிவிக்களில் புதுப்படங்களின் பாடல்கள் மற்றும் காட்சிகளை பயன்படுத்தக்கூடாது என உத்தரவை அண்மையில் பிறப்பித்தது.

இதுபற்றி பிரபலஇயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா பேசுகையில்….

நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் தெரிகிறது. உயிருக்குப் போராடும் சினிமா தயாரிப்பாளர்கள் முகங்கள் தெரிவதில்லை.

ஒருத்தருக்கு சொந்தமான பொருளை அவருடைய அனுமதி இல்லாமல் வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் குற்றமே.

அதைத்தான் இன்று நிறைய டிவி சேனல்கள் செய்கின்றன.

நான் தயாரித்த ‘நாட்டுப்புற பாட்டு’ ‘துள்ளுவதோ இளமை’ என்று என்னுடைய எல்லா படங்களுக்கான சாட்டிலைட் உரிமையை குறிப்பிட்ட சேனலுக்கு மட்டுமே விற்று இருக்கிறேன்.

ஆனால் என் படங்களின் எந்தவித உரிமைகளையும் பெறாத இன்னொரு டி.வி என் படங்களை ஒளிபரப்புகிறது. இது எப்படி நியாயம்? ” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் கட்சி பற்றி அறிவிப்பு வெளியாகும் தேதி

ரஜினியின் கட்சி பற்றி அறிவிப்பு வெளியாகும் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகடந்த 20 நாட்களாக காலா படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த், தற்போது சென்னையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

வருகிற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்டமாக தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கவிருக்கிறார்.

தற்போது ஓய்வில் இருக்கும் சமயத்தில் மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் தன் நலம் விரும்பிகளை சந்தித்து அரசியல் பற்றி ஆலோசனை செய்து வருகிறாராம்.

இதன்படி வருகிற டிசம்பர் 12ஆம் தேதி தன் பிறந்தநாளில் தனிக்கட்சி மற்றும் கொடி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஞ்சலியை வாழ்த்தி காதலை கன்பார்ம் செய்த ஜெய்

அஞ்சலியை வாழ்த்தி காதலை கன்பார்ம் செய்த ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai anjaliஎங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்த பிறகு எங்கேயும் எப்போதும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர் ஜெய்-அஞ்சலி ஜோடி.

தற்போது பலூன் என்ற படத்திலும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஞ்சலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அதற்கு அஞ்சலியை வாழ்த்தி ட்விட்டரில் ஜெய் தான் எழுதிய ஒரு கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

நீ எனக்கு எப்படி ஸ்பெஷலோ அதுபோல் இந்த பிறந்தநாள் உனக்கு அமையட்டும் என வாழ்த்தியுள்ளார்.

அதற்கு அஞ்சலியும் நீ என்னுடன் இருப்பதற்கு நன்றி என பதிலளித்துள்ளார்.

Jai confirms his love on Anjali on her Birthday

Anjali‏ @yoursanjali

Anjali Retweeted Jai

Thanks fr being with me J ,, I wish you always wll ,, thanks fr this special note on my special day

jai letter to anjali

தளபதியின் தைரியத்தை பாராட்டித் தள்ளும் தல ரசிகர்கள்

தளபதியின் தைரியத்தை பாராட்டித் தள்ளும் தல ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajith thala thalapathyகத்தி படத்தில் கத்தி கத்தி சொன்ன விவசாயிகள் பிரச்சினை தற்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.

இதுதொடர்பான தனது கருத்தை அண்மையில் தெரிவித்து இருந்தார் நடிகர் விஜய்.

நம் நாடு வல்லரசு ஆவதை விட தற்போது விவசாயிகளின் நலன் காக்கும் நல்லரசாக மாற வேண்டும் என்று பேசியிருந்தார்.

விஜய்யின் இந்த தைரியமான பேச்சை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த விஜய்யை அஜித் ரசிகர்களும் பாராட்டி தங்கள் கருத்துக்ளை தெரிவித்து வருகின்றனர்.

Ajith fans supports Vijays speech regarding Farmers struggle

முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்திக்

முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik teams up with Suriya for the first timeநானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் அவர்களும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

கார்த்திக் மற்றும் சூர்யா இணைவது இதுதான் முதன்முறையாகும்.

Karthik teams up with Suriya for the first time

விஜய் மேஜிக்கை ஹாலிவுட்டில் பாலோ செய்யும் தனுஷ்

விஜய் மேஜிக்கை ஹாலிவுட்டில் பாலோ செய்யும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushஅட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் பஞ்சாயத்து தலைவர், டாக்டர் மற்றும் மேஜிக் மேனாக என 3 கேரக்டர்களில் நடித்து வருகிறார் விஜய்.

தற்போது இதுபோல் தனுஷும் தான் நடித்து வரும் ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற படத்தில் சில காட்சிகளில் மேஜிக் மேனாக வருகிறாராம்.

கனடாவை சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் சூட்டிங் தற்போது பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வருகிறது.

பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோரும் இதில் நடித்து வருகின்றனர்.

பிரபல ப்ரெஞ்ச் நாவலான ‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு, ‘வடசென்னை’, ‘மாரி 2’, ‘கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம்’ மற்றும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறாராம் தனுஷ்.

Dhanush plays Magician in The Extraordinary Journey of the Fakir

More Articles
Follows