தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2002ஆம் ஆண்டில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ பட மூலம் அறிமுகமானவர் தனுஷ்.
‘ஆடுகளம்’ படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்தமைக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
2018ல் வெளியான The Extraordinary Journey of the Fakir படத்தின் மூலம் ஹாலிவுட்டிற்கு அறிமுகமானார் தனுஷ்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.
‘அவெஞ்சர்ஸ்’, ‘கேப்டன் அமெரிக்கா’ படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தை பெரும் பொருட் செலவில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கவுள்ளது.
The Gray Man எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரையான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹென்விக் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடிக்கும் கலைஞர்களில் தனுஷ் மட்டும் தான் ஒரே இந்திய நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
The Gray Man தனுஷின் இரண்டாவது ஹாலிவுட் படமாக இருக்கும்.
2009ஆம் ஆண்டில் அமெரிக்க நாவலாசிரியரான மார்க் க்ரானி எழுதி வெளிவந்த The Gray Man நாவலே, இப்போது அதே பெயரில் படமாகவுள்ளது.
கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படுகிறதாம்.
அடுத்த ஆண்டு 2021 தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.
Actor Dhanush lands 2nd international project alongside Ryan Gosling, Chris Evans