‘திரௌபதி’ இயக்குனருடன் செல்வராகவன்-நட்டி இணைந்த படத்தின் ரிலீஸ் அப்டேட்

‘திரௌபதி’ இயக்குனருடன் செல்வராகவன்-நட்டி இணைந்த படத்தின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G.

அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு ” பகாசூரன்” என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தமக்கென தனியிடத்தை தக்கவைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துவரும் சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரதாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் இந்த படத்தின் மூலம் இயக்குனர் மோகன் G யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 18 ம் தேதி சேலம் முத்துமலை முருகன் கோவிலில் பூஜையுடன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

நேற்று ஜூலை 18 ஆம் தேதியயோடு முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது என்பதை படக்குழுவினர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

படத்தின் காட்சிகள் வெகு சிறப்பாக வந்துள்ளதாகவும், இதுவரை யாரும் பயணிக்காத கதைக்களத்தில் கதை இருக்கும். இந்த படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இயக்குனர் மோகன் G. தெரிவித்துள்ளார்.

படத்தை பற்றியும் இந்த படத்தில் தங்கள் நடித்த அனுபவத்தை பற்றியும், இயக்குநர் மோகன்.Gயை பற்றியும் செல்வராகவன் மற்றும் நட்டி இருவரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.

இது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும் தூண்டியுள்ளது.

படம் செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமட்டுள்ளனர்.

Release update of ‘Draupathi’ directors next film is here

நிலாவுல இருந்திருப்பேன்.; ‘மஹா’ சூட்டிங்ல சிம்பு அடித்த மகா ஜோக்

நிலாவுல இருந்திருப்பேன்.; ‘மஹா’ சூட்டிங்ல சிம்பு அடித்த மகா ஜோக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மஹா.

இது நடிகை ஹன்சிகாவின் 50 வது படமாக உருவாகியுள்ளது.

ஹன்சிகா மற்றும் சிம்புவுடன் ஸ்ரீகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர்களுடன் தம்பிராமையா, கருணாகரன், பேபி மனஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த வாரம் ஜூலை 22, 2002 அன்று உலகெங்கும் வெளியாகவிருக்கும் இந்த “மகா” திரைப்படத்திற்கு லெக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்க, ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு செய்ய,

‘Etcetera Entertainment’ சார்பாக மதியழகன் மற்றும் ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ்’ இனைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் சிம்பு, ‘மாலிக்’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘மகா’ படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது.

அதில் வில்லன்களுடன் மோதும் சிம்புவின் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்திற்கான கார் சேசிங் காட்சிகள் எடுக்கும் போது, சிம்பு ஓட்டிச்சென்ற காரின் பிரேக் சரியாக இல்லையாம்.

இதனால் பட குழுவினர் பதறி போய்விட்டார்கள்.

ஆனால் கார் ஓட்டுவதை வாடிக்கையாக கொண்ட சிம்பு, பிரேக் பிடிக்காத காரை லாவகமாக நிறுத்தியுள்ளார்.

இந்த சேசிங் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த படக்குழு & மக்கள் சிம்புவின் சாமர்த்தியத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

மற்றொரு காட்சியில் பேபி மானஸ்வியை தூக்கிக்கொண்டு படியில் சிம்பு ஓடவேண்டி இருந்ததாம்.

ஆனால் ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த காட்சியில் சிம்பு பலமுறை நடிக்கவேண்டி இருந்துள்ளது.

படப்பிடிப்பு குழுவினரின் சிரமத்தை அறிந்த சிம்பு…

“ஆர்ட் டைரக்டர் படிக்கட்டை வளைத்து போட்டார்.., நேரா போட்டு இருந்தானா இப்ப நான் நிலாவில இருந்திருப்பேன்” என்று கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார் சிம்பு.

சிம்புவின் இந்த மகா ஜோக்கை கேட்டவர்கள் அனைவரும் சிரித்துள்ளனர்.

A great joke played by Simbu in shooting ‘Maha’

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு.; ஏன்.?

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விளையாட்டு கலை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.

அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இளையராஜா உள்ளிட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்திருந்தார்.

நேற்று ஜூலை 18 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் டெல்லியில் தொடங்கியது. அப்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்க அழைக்கப்பட்டனர்.

அப்போது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இளையராஜாவை அழைத்தார். அனைவரும் கைத்தட்டி வரவேற்றாலும் இளையராஜா வரவில்லை.

ஏனென்றால் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்து இருந்தார் இறளையராஜா.

எனவே அவரால் பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொள்ள முடியவில்லை. விரைவில் அவர் மாநிலங்களவை சென்று பதவி ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை இளையராஜா அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் அவர் சென்னை வந்தடைந்தார்.

எம்பி என அறிவிக்கப்பட்ட பின்னர் தற்போதுதான் முதன்முறையாக அவர் தமிழகத்திற்கு வருகிறார்.

எனவே அவருக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் பாஜகவை சேர்ந்த பல அரசியல் பிரபலங்களும் இந்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic welcome to Ilayaraja who came from America to Chennai.; Why?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மணிரத்னம் இப்போ எப்படி இருக்கிறார்.?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மணிரத்னம் இப்போ எப்படி இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களை இந்தியளவில் கொண்டு சென்ற இயக்குனர்களில் மிக முக்கியமானவர் மணிரத்னம்.

இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் மிகப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

லைக்கா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் மணிரத்னம் உள்ளிட்ட பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் மணிரத்னம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு லேசான அறிகுறிகளே இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என தெரியவந்துள்ளது.

எனவே அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

How is Mani Ratnam, who is affected by Corona?

விவாகரத்து ஆன நடிகையை விஜய்க்கு வில்லியாக்கும் லோகேஷ்.?

விவாகரத்து ஆன நடிகையை விஜய்க்கு வில்லியாக்கும் லோகேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கணவரும் நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் சினிமாவில் பிஸியாகி விட்டார் நடிகை சமந்தா.

தற்போது சமந்தா கைவசம் குஷி, சாகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்கள் உள்ளன.

தற்போது சகுந்தலம் பட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் விஜய்யுடன் ஒரு படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

‘விக்ரம்’ படத்தை முடித்து விட்ட லோகேஷ் கனகராஜ் விரைவில் விஜய்யின் 67வது படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ்.

இந்த படத்தில் தான் நாயகியாக நடிக்க சமந்தாவிடத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களில் விஜய் சமந்தா ரொமான்டிக் கெமிஸ்ட்ரி செமயாய் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

ஆனால் இந்த படத்தில் விஜய்யுடன் டூயட் பாடாமல் விஜயை எதிர்க்கும் வில்லியாக நடிக்கவிருக்கிறார் சமந்தா என கூறப்படுகிறது.

Divorced actress to play opposite with Vijay in Thalapathy 67?

மீண்டும் ‘அஞ்சான்’ இயக்குனருடன் கூட்டணியா.? சூர்யா தரப்பு விளக்கம்

மீண்டும் ‘அஞ்சான்’ இயக்குனருடன் கூட்டணியா.? சூர்யா தரப்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆனந்தம்’ என்ற ஒரு தமிழ் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் லிங்குசாமி.

இதன் பின்னர் இவர் இயக்கிய ரன்,சண்டக்கோழி,பையா உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரும் வெற்றி பெற்றது.

இவர் சூர்யாவை வைத்து முதன்முறையாக இயக்கிய ‘அஞ்சான்’ படம் தோல்வியை தழுவியது.

அதன் பின்னர் விஷாலை வைத்து ‘சண்டக்கோழி 2’ என்ற படத்தை இயக்கினார் லிங்குசாமி.

இந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன்பின்னர் தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் லிங்குசாமி.

எனவே திடீரென தெலுங்கு நடிகர் ராம் அவர்களை வைத்து தி வாரியார் என்ற படத்தை இயக்கினார்.இந்த படத்தில் கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த வாரம் ஜூலை 14ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ‘அஞ்சான்’ பட ஹீரோவுடன் லிங்குசாமி இணைய உள்ளதாக தகவல்கள் சில ஊடகங்களில் வந்தன.

ஆனால் தற்போது உள்ள கைவசம் உள்ள படங்களை சூர்யா முடிக்க காத்திருக்கிறார். எனவே லிங்குசாமியுடன் இப்போது இணைய வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suriya joins with ‘Anjaan’ director again? Here’s the details

More Articles
Follows