தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 17ல் ‘பகாசூரன்’ படம் வெளியானது
இதில் செல்வராகவன், நட்டி நட்ராஜ், கே ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் கூல் சுரேஷ் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இது அவரின் நூறாவது படமாக அமைந்தது.
தியேட்டர்களில் வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி வாட்ச்சை இயக்குனர் மோகனுக்கு தயாரிப்பாளர் கௌதம் வழங்கினார்.
இந்நிலையில் வரும் மார்ச் 24-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘பகாசூரன்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Here is the OTT release date of Mohan G’s ‘Bakasuran’