சினிமாவில் செஞ்சுரி அடித்தார் நடிகர் கூல் சுரேஷ்.; குஷியாகும் ரசிகர்கள்

சினிமாவில் செஞ்சுரி அடித்தார் நடிகர் கூல் சுரேஷ்.; குஷியாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கூல் சுரேஷ்.. இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை.. காரணம் யூட்யூப்பில் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவர் தான் எப்போதும் ட்ரெண்டிங் நாயகனாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

தற்போது திரைப்பட நிகழ்ச்சிகளில் பேசும் பொருளாக மாறிவிட்டார். ஒரு புதிய படம் வெளியாகும் போது இவரது விமர்சனத்தை கேட்கவே மீடியாக்களும் ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர்.

வெந்து தணிந்தது காடு.. சிம்புவுக்கு வணக்கத்தை போடு.. என ட்ரெண்டிங் ஆன இவர் தற்போது எஸ் டி ஆரின் பத்து தல.. நாம தான் கெத்து தல..” என ட்ரெண்டிங் செய்து வருகிறார்.

இவை இல்லாமல் திருமண நிகழ்ச்சி.. கடை திறப்பு விழாக்கள்.. புதிய பட இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கும் இவர்தான் சிறப்பு விருந்தினர்.

இந்த நிலையில் இவர் தற்போது நூறாவது படத்தை நெருங்கி விட்டார்.

மோகன் ஜீ இயக்கத்தில் செல்வராகவன் நட்டி நடித்துள்ள ‘பகாசூரன்’ என்ற படம் கூல் சுரேஷ் நடிப்பில் 100வது படமாக வளர்ந்துள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் நாளை டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

திரையுலகில் கூல் சுரேஷ் செஞ்சுரி அடித்து உள்ளதால் விரைவில் அவரது ரசிகர்கள் இதை பெரும் விழாவாக கொண்டாடினாலும் ஆச்சரியம் இல்லை.

அஜித் – விக்னேஷ்சிவன் இணையும் AK-62 பட அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

அஜித் – விக்னேஷ்சிவன் இணையும் AK-62 பட அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படம் அடுத்த வருடம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

இப்பட ஷூட்டிங் முடியும் முன்பே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என அறிவிப்பு வந்தது.

இந்த நிலையில் AK62 (ஏகே 62) படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

இவரது சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது..

“அஜித் படத்தை ஒப்புக்கொண்ட பின்னர் விக்னேஷ் சிவனிடம் பேசினேன்.

அப்போது அப்பட கதை குறித்து என்னிடம் விவரித்தார். மிகவும் இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. அந்த படத்திற்காக நான் காத்திருக்கிறேன்.. எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ மற்றும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING சூர்யா விலகிட்டாரு.. ‘வணங்கான்’ தொடரும்.; பாலா திடீர் அறிக்கை

BREAKING சூர்யா விலகிட்டாரு.. ‘வணங்கான்’ தொடரும்.; பாலா திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தா – பிதாமகன் படங்களுக்கு பிறகு சூர்யா பாலா கூட்டணி மீண்டும் இணைந்தது.

இந்தப் படத்திற்கு ‘வணங்கான்’ என்று பெயரிட்டு கன்னியாகுமரியில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

மீனவர் பிரச்சினை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டு வந்தது. இதில் மாற்று திறனாளியாக சூர்யா நடிக்க நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வந்தார்.

இந்தப் பட சூட்டிங்கின் போது சூர்யா பாலா இடையே மோதல் உருவானதாகவும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.

ஆனாலும் படத்தரப்பு இதற்கு விளக்கம் அளித்து படம்பிடிப்பு மீண்டும் நடைபெறுவதாக அறிவித்தது.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 4 ஆம் தேதி இயக்குனர் பாலா தரப்பில் ஓர் அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில்…

வணங்கான் படத்தின் கதைகளில் சில மாற்றம் செய்தேன். அதில் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என தெரியவில்லை.

எனவே அவரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை. இதனால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக நாங்கள் இருவரும் பேசி முடிவெடுத்துள்ளோம.

எனவே வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொண்டுள்ளார்.

மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவோம். மற்றபடி வணங்கான் படம் தொடரும்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதோ…

‘ரகு தாத்தா’ மூலமாக தமிழில் நுழையும் ‘KGF – காந்தாரா’ பட நிறுவனம்

‘ரகு தாத்தா’ மூலமாக தமிழில் நுழையும் ‘KGF – காந்தாரா’ பட நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புரட்சி தொடங்கும் இடம் வீடு’. இக்கருத்தை மையமாக கொண்ட திரைப்படத்தின் முதல் பார்வையே பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது.

கே.ஜி.எஃப்-1,2, காந்தாரா வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தின் முதல் பார்வை வெளியீடு, ‘ரகு தாத்தா’-

ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரம்.

இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, வெற்றியையும் விருதுகளையும் வாரி குவித்த ‘பேமிலி மேன்’ வலை தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார்.

கோடை 2023-ல் திரையரங்குகளை சிரிப்பொலியாக்க, இம்மாதத்திலிருந்து விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸின் முதல் தமிழ் படத்தில் தேசிய விருது பெற்ற, தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகங்களில் புகழின் உச்சத்தில் திகழும் நாயகியான கீர்த்தி சுரேஷுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம்.

ஹோம்பாலே பிலிம்ஸ் இவ்வாண்டில் கே.ஜி.எஃப்-2, காந்தாரா வெற்றி படங்களை கொடுத்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக தனது அடுத்த படைப்பான ரகு தாத்தாவை அறிவித்துள்ளனர்.

இப்படமானது, நாயகியை மையமாக கொண்ட கதை களம் மட்டுமின்றி பலரின் உள்ளங்களை கொள்ளைக் கொள்ளும் நகைச்சுவை அம்சமும் கொண்டது. இத்திரைப்படத்தில் அமைதியுடன் கூர் மதி கொண்டு, கொள்கையில் உறுதியுடன், தேவையெனில் புயலாக மாறும் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் பார்வை வெளியீட்டில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது…

‘ரகு தாத்தா நகைச்சுவை பட மட்டுமின்றி, தைரியமிக்க, துணிச்சலான பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தில் தன் தனித்துவத்தை கண்டுக்கொள்ளும் களமானது, மற்றவர்களுக்கும் ஓர் உத்வேகமாக திகழும்.

நாயகி எதிர்கொள்ளும் சவால்கள் அவரின் அடையாளத்தை எவ்வாறு வெளிக்கொணர்கிறது என்பதை நகைச்சுவை கலந்து, குடும்பத்திலுள்ள அனைவரையும் ரசித்து சிரிக்க வைக்கும் படி இருக்கும்.

இக்கதாபாத்திரத்திற்கு உயிர் தர கீர்த்தியை போன்ற திறமைமிக்க ஓர் நடிகையால் தான் முடியும். அவருடன் இணைந்து பணிபுரிவதில் மட்டற்ற மகிழ்ச்சி’.

ஹோம்பாலே பிலிம்ஸ் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், இந்திய திரை ரசிகர்களுக்கு புது புது அனுபவங்களை கொடுக்கவும் ஒருபோதும் தயங்கியதில்லை. காந்தாராவின் வெற்றியானது நிரூபித்தது கே.ஜி.எஃப்-2 வைப்போல் நல்ல கதையம்சம் கொண்டு நேர்த்தியாக எடுக்கப் படும் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவிக்கும்.

ஹோம்பாலே பிலிம்ஸ் வருமாண்டில் மேலும் 4 பிரமாண்ட படைப்புகளை வெளியிட தயாராக உள்ளது. பிரபாஸுடன் ‘சலார்’, செப்டம்பர் 2023, பாஹத் பாஸிலுடன் ‘தூமம்’, ஸ்ரீமுரளியுடன் ‘பகிரா’ 2023 இறுதிக்குள். இதை தவிர்த்து, மேலும் ஒரு பான் இந்திய திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் வரவிருக்கும் இரு ஆண்டுகளில் 14 திரைப்படங்களை வெளியிட உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் கனவிலும் நினைக்க முடியாத திட்டமிது.

ஹோம்பாலே பிலிம்ஸின் வெற்றி ரகசியமான திறமை மிக்க குழுவும், தகுதியான நடிகர்களும் ரகு தாத்தாவிற்கும் கிடைத்துள்ளனர்.

M. S. பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவில், ராம்சரண்தேஜ் லாபானி கலை இயக்கத்தில், ‘ஜெய் பீம்’ புகழ் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி வடிவமைப்பில், T. S. சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகிறது ரகு தாத்தா.

இனி வடிவேலு என்கிட்ட வர மாட்டார்.. கமல் ஒரு தீர்க்கதரிசி.; வடிவேலு ஓபன் டாக்

இனி வடிவேலு என்கிட்ட வர மாட்டார்.. கமல் ஒரு தீர்க்கதரிசி.; வடிவேலு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னன் மீம்ஸ்களின் தலைவன் என்று சொன்னால் அது வைகை புயல் வடிவேலு தான்.

சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு தற்போது மீண்டும் அதே பழைய வேகத்துடன் படங்களில் நடித்து வருகிறார்.

‘சந்திரமுகி 2’ படத்தில் காமெடியனாகவும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 9ல் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பான பிரமோஷன் பணிகள் ஈடுபட்டு வருகிறார் வடிவேலு.

இந்த நிலையில் அவரது சமீபத்தில் பேட்டியில் கமல்ஹாசன் குறித்து பேசியுள்ளார்.

“கமல் சார் தான் என் வாழ்க்கையில் யுடர்ன் போட்டவரு.. எனக்கு புதிய பரிமாணத்தை காட்டியவர். அவர நான் சாகுற வரைக்கும் மறக்கமாட்டேன்.

தேவர்மகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பின்னர் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்க முடியாமல் போய்விட்டது.

அப்போதே கமல் சொல்லிவிட்டார் வடிவேலு இனி பிஸியாகி விடுவார். நான் அழைத்தாலும் வரமாட்டார் என சொன்னார்.

அவர் ஒரு தீர்க்கதரிசி அப்படியே நடந்துச்சு, அவருக்கு கடவுள் புடிக்காது ஆனா கடவுளுக்கு அவர புடிக்கும். அவர் ஒரு மகான்.. சினிமாவில் சிவாஜிக்கு பிறகு கமல் தான். எனக்கு இருவரின் ஆசியும் கிடைத்துவிட்டது” என தெரிவித்துள்ளார்

#KamalHaasan #Vadivelu

தீ தளபதி.. பேரை கேட்டா விசிலடி.. உங்க அதிபதி.; இணையத்தை பற்ற வைத்த விஜய் – சிம்பு

தீ தளபதி.. பேரை கேட்டா விசிலடி.. உங்க அதிபதி.; இணையத்தை பற்ற வைத்த விஜய் – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ராஷ்மிகா முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘வாரிசு’.

வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். அந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 4ம் தேதி இந்தப் படத்தில் இடம்பெற்ற 2வது பாடலான ‘தீ தளபதி…’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இப்பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி இருக்கிறார். விஜய் ரசிகர்களை கவரும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன.

தீ தளபதி.. பேரை கேட்டா விசிலடி.. உங்க அதிபதி… அனல் பறக்க ஒவ்வொரு வரியும் உள்ளன.. எனவே இந்த பாடல் ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை.

மேலும் விஜய் சினிமா துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆன நிலையில் #30YearsOfVijayism & #3DecadesOfVIJAYism என்பதையும் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

More Articles
Follows