எஸ் டி ஆர் சொல்றாரு.. சொல்லிட்டே இருக்காரு..; ஹாட்டான கூல் சுரேஷ்

எஸ் டி ஆர் சொல்றாரு.. சொல்லிட்டே இருக்காரு..; ஹாட்டான கூல் சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது அந்த படத்தை பார்த்துவிட்டு அந்த தியேட்டர் வாசல்களில் படத்தை புகழ்ந்து பாராட்டி பேசி வருபவர் நடிகர் கூல் சுரேஷ்.

இவர் பல படங்களை விமர்சனம் செய்து வருவதால் இவருக்கு என்று பல மீடியாக்கள் காத்திருப்பர் (எங்களையும் சேர்த்து தான்).

மேலும் இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

YouTube டிரெண்டிங் நாயகன்.. வெள்ளிக்கிழமை நாயகன்.. என பல பட்டங்களை ரசிகப் பெருமக்கள் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல தியேட்டர் வாசலில் கூல் சுரேஷ் பேசும்போது..

“ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் போது அந்த படத்தை நான் பார்க்க வருகிறேன்.. ஆனால் சம்பந்தப்பட்ட பல நடிகர் நடிகைகள் வருவதில்லை..

அந்தப் படத்தில் நடிக்காத நானே வரும்போது அவர்கள் ஏன் வருவதில்லை?

எனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமும் தற்போது உருவாகியுள்ளது.. ஆனால் எனக்கு யாரும் வாய்ப்புகள் தருவதில்லை.

நடிகர் சிம்பு STR இனி அவரின் அடுத்தடுத்த படங்களை வாய்ப்பு தருவதாக சொல்லி இருக்கிறார்.. சொல்றார் சொல்லிக்கிட்டே இருக்கார்” என வேதனையுடன் பேசினார் கூல் சுரேஷ்.

கூடுதல் தகவல்…

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்திற்கு யாருமே எதிர்பார்க்காத அளவில் ப்ரோமோஷன் செய்தவர் கூல் சுரேஷ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தற்போது ‘பத்து தல… STR கெத்து தல’ என அந்த படத்திற்கும் ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

கூல் சுரேஷ் நடிப்பில் 100வது படமாக உருவாகியுள்ள ‘பகாசூரன்’ பிப்ரவரி 17ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Cool suresh recent bold speech regarding movie chance

இந்திய சினிமாவின் முதல் தலித் நடிகை ரோஸி பிறந்ததினம்.; ரிலீசின் போது வீட்டை எரித்த சோகம்.!?

இந்திய சினிமாவின் முதல் தலித் நடிகை ரோஸி பிறந்ததினம்.; ரிலீசின் போது வீட்டை எரித்த சோகம்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரையுலகின் முதல் கதாநாயகியாகவும், இந்திய சினிமாவின் முதல் தலித் நடிகையாகவும் விளங்குபவர்.
மிகச்சிறந்த நாடகக் கலைஞரான பி.கே.ரோஸி.

இவரின் முதல் திரைப்படம் விகதகுமாரன் (1930). அந்தத் திரைப்படத்தோடு அவரைத் திரையில் நடிப்பதையே தடுத்து துரத்தியடித்தது ஜாதி வெறி பிடித்த சமூகம்.

ஒடுக்கப்பட்ட புலையர் சமூகத்தைச் சேர்ந்த
பிகே. ரோசியை நாயர் ஜாதிப் பெண்ணாக ஒரு படத்தில் இயக்குனர்
JC டேனியல் நடிக்க வைத்ததைத் தாங்க முடியாத சிலர் படத்தை வெளியிட்ட காபிடல் ஹால் அரங்கில் கல் எரிந்து கலவரம் செய்தனர்.

மேலும் பிகே. ரோஸியின் வீட்டையும் எரித்ததாகச் சொல்கிறார்கள்.

முதல் நடிகர்- நடிகைகளை வரலாறு கொண்டாடியபோது, அடையாளம் தெரியாமல் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட
பிகே. ரோசியை நாம் நினைவில் என்றும் வைத்திருப்போம்.

கடந்த ஆண்டு Pay Back To The Society அமைப்பு முதல் தலித் பெண் கலைஞரான பி.கே. ரோசி அவர்களின் பெயரில் விருது வழங்கி அவருக்கான அங்கீகாரத்தை இச்சமூகத்தில் விதைத்தது.

போராடி வெற்றி பெறும் ஒவ்வொரு கலைஞனையும் அங்கீகரிப்பதும், நினைவில் நிறுத்துவதும் இந்தச் சமூகத்தில் சமத்துவத்தை வலியுறுத்தும் பணியாகும்.

அவ்வகையில் சமத்துவத்தின் நாயகி பி. கே. ரோசி அவர்களைப் போற்றுவோம். 10 பிப்ரவரி – இன்று பி.கே.ரோசி பிறந்தநாள்.

First dalit actress Rosie’s birthday.; Tragedy during the release.!?

‘பாபா’ ரீ-ரிலீஸ் ஹிட் : தோல்வியை வெற்றியாக்கியவர்களுக்கு ரஜினி பரிசு

‘பாபா’ ரீ-ரிலீஸ் ஹிட் : தோல்வியை வெற்றியாக்கியவர்களுக்கு ரஜினி பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரஜினியின் சினிமா கேரியரில் பெரும் தோல்வியை சந்தித்த படம் ‘பாபா’.

இந்த படத்தின் தோல்விக்கு பல அரசியல் காரணங்களும் சொல்லப்பட்டாலும் ரஜினியே தோல்வி என ஒப்புக்கொண்ட படம் பாபா.

மேலும் படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நஷ்டத்தை திருப்பி கொடுத்தார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு பாபா படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்தார்.

இந்த படத்தில் சர்ச்சைக்குரிய பல காட்சிகளை நீக்கிவிட்டு சில காட்சிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார் ரஜினி.

முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போல ரசிகர்களும் பாபாவை கொண்டாடினர்.

ஒரு தோல்வியடைந்த படத்தை மீண்டும் வெற்றி படமாக்கிய பெருமை ரஜினிகாந்தையே சேரும்.

இந்த நிலையில் இன்று பிப்ரவரி 11ஆம் தேதி பாபா ரீ ரிலீஸ் வெற்றிக்கு காரணமான தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து பாராட்டி அவர்களுக்கு நினைவு பரிசு கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த சந்திப்பு ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்தது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Baba re release hit. Rajinikanth given prizes to movie team

அதர்வா படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

அதர்வா படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேற்று மாலை தனது சமூக வலைதளத்தில் சென்றார். ஜான் பீட்டரின் அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் மூலம் அதர்வா முரளி, இயக்குனர் ரவீந்திர மாதவாவுடன் இணைந்து ‘தணல்’ என்ற புதிய படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கருப்பு வெள்ளை உருவப்படத்தில் அதர்வா சீரியஸான முகத்துடன் காட்சியளிக்கிறார். தணல் படத்தில் அதர்வா, லாவண்யா, அஷ்வின் காகமானு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Vijay Sethupathi unveils the exciting title and first look of Atharvaa’s next!

JUST IN கமல்ஹாசனை சந்தித்த ரஞ்சித்.; ஓ இதுதான் விஷயமா.?

JUST IN கமல்ஹாசனை சந்தித்த ரஞ்சித்.; ஓ இதுதான் விஷயமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பயணிக்கும் ஒவ்வொரு இயக்குனருக்கும் கமல்ஹாசனை ஒரு படத்திலாவது இயக்க வேண்டும் என்ற ஆசை மேலங்கி நிற்கும்.. இதற்கு காரணம் கமல்ஹாசன் ஒரு சகலகலா வல்லவன்.

சிறந்த படைப்பாளி என பெயர் எடுத்த பா.ரஞ்சித்தும் விரைவில் கமல்ஹாசனை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று பிப்ரவரி 11ஆம் தேதி கமல்ஹாசனை சந்தித்துள்ளார் ரஞ்சித்.

இது தொடர்பான படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவர்கள் இணையவுள்ள படம் பற்றிய சந்திப்பு அல்ல மாறாக ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை தொடங்கி வைக்க கமல்ஹாசனை அழைத்து இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன

நாளை பிப்ரவரி காலை 11:30 மணிக்கு சென்னை எக்மோரில் உள்ள நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை கமல்ஹாசன் தொடங்கி வைக்க இருக்கிறார் என மக்கள் தொடர்பாளர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Reason behind Pa Ranjith met Kamal Haasan

‘லால் சலாம்’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட் வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

‘லால் சலாம்’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட் வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஷ்வர்யா ரஜினிகாந்த்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு கேமியோவில் நடிக்க உள்ளார் .

நேற்றிரவு, ஐஸ்வர்யா லால் சலாம் பற்றிய ஒரு அப்டேட் கொடுத்தார். செட் வேலைகள் ஒரு சிறிய பூஜையுடன் தொடங்கியது , “மெதுவாகவும் நிலையானதாகவும், தயாராகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth drops a red hot update on the progression of ‘Lal Salaam’!

More Articles
Follows