ரசிகர்கள் முன்னிலையில் ‘பகாசூரன்’ இயக்குநர் காலில் விழுந்த கூல் சுரேஷ்

ரசிகர்கள் முன்னிலையில் ‘பகாசூரன்’ இயக்குநர் காலில் விழுந்த கூல் சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கூல் சுரேஷ்.. இவரைப் பற்றி அறிமுகம் பெரிதாக தேவையில்லை.. காரணம் யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவர் தான் எப்போதும் ட்ரெண்டிங் நாயகனாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

ஒரு புதிய படம் வெளியாகும் போது இவரது விமர்சனத்தை கேட்கவே மீடியாக்களும் ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர்.

வெந்து தணிந்தது காடு.. சிம்புவுக்கு வணக்கத்தை போடு.. என ட்ரெண்டிங் ஆன இவர் தற்போது எஸ் டி ஆரின் பத்து தல.. நாம தான் கெத்து தல..” என ட்ரெண்டிங் செய்து வருகிறார்.

இவர் தற்போது நூறாவது படத்தை நெருங்கி விட்டார்.

மோகன் ஜீ இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நடித்துள்ள ‘பகாசூரன்’ என்ற படம் கூல் சுரேஷ் நடிப்பில் 100வது படமாக வளர்ந்துள்ளது.

இந்தப் படம் இன்று பிப்ரவரி 17ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் வழக்கம் போல இன்று படத்தை பார்க்க சென்றுள்ளார்.

அவருடன் பட இயக்குனர் மோகனும் வந்திருந்தார்.

அப்போது கூல் சுரேஷ் பேசும்போது…

“நான் இதுவரை பல படங்களை பார்த்து விமர்சனம் செய்துள்ளேன். இந்த படத்தில் நான் நடித்துள்ளதால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு உள்ளேன் என உருக்கமாக பேசினார்.

இது என்னுடைய 100வது படம்.. எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு அளித்த மோகனுக்கு நன்றி.. அவர் என்னை விட வயது குறைவாக இருந்தாலும் அவரது காலில் விழுகிறேன் என விழுந்தார் சுரேஷ்.

முன்னதாக ‘பகாசூரன்’ படப்பெட்டியை கையில் ஏந்தியபடி சென்னை ரோகினி தியேட்டரில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தார் கூல் சுரேஷ்.

Cool Suresh Emotion at Bakasuran FDFS

மாணவர்கள் மத்தியில் மதயானைக் கூட்டத்தை கொண்டு வந்த ‘பருந்தாகுது ஊர்க்குருவி’

மாணவர்கள் மத்தியில் மதயானைக் கூட்டத்தை கொண்டு வந்த ‘பருந்தாகுது ஊர்க்குருவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவான படம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’.

Lights On Media வழங்க தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் இந்த ஊர்க்குருவி விரைவில் பறக்க தயாராகியுள்ளது.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தை மையப்படுத்தி “பருந்தாகுது ஊர்க்குருவி” படத்தின் முன்னோட்டம் 6 மாதங்களுக்கு முன்னரே வெளியானது.

(Stay connected with us filmistreet)

படம் பற்றி இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் கூறுகையில் …

“கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனை தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம்.

இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையை உருவாக்கியுள்ளது. ஊட்டி முதுமலை காடுகளில் படமாக்கியுள்ளோம்.” என்றார்.

நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்ரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

‘ராட்சசன்’ வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய
தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.

சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா P.,வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான.. ‘மத யானைக் கூட்டம்….’ என்ற பாடலை KPR கல்லூரி மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்த மார்ச் மாதம் இந்த படம் வெளியாக உள்ளது.

தொழில் நுட்ப குழுவில்…

ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர்கள் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன் – நெல்சன் அந்தோணி, இசை – ரெஞ்சித் உண்ணி, சண்டை காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, மக்கள் தொடர்பு – AIM சதீஷ்குமார் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

First single track #MadhayaanaiKootam from the movie #ParundhaaguthuOorkuruvi out now.

ParundhaaguthuOorkuruvi movie First single release

வசந்தபாலன் தயாரிக்கும் DEMON படத்திற்கு விஜய்சேதுபதி – மிஷ்கின் ஆதரவு

வசந்தபாலன் தயாரிக்கும் DEMON படத்திற்கு விஜய்சேதுபதி – மிஷ்கின் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் DEMON என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.

சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய்சேதுபதி & இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ளனர்.

‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ‘Demon’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

மோகன்லாலின் தேசியவிருது பெற்றத் திரைப்படமான ‘மரைக்காயர்’ படத்தில் தனது அற்புதமான இசைக்காக பாராட்டுகளைப் பெற்ற ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.

கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகிறார். ஆர்.எஸ். ஆனந்த குமார் (பிரபுதேவாவின் ‘குலேபாகவலி’ & ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ புகழ்) இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் கதை நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதன் திரைக்கதை அம்சங்கள் நிச்சயம் பார்வையாளர்களை கவரும். ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பீட்சா, ராட்சசன், பிசாசு மற்றும் பல படங்கள் இந்த ஜானரில் வெளியாகி வெற்றிப் பெற்றதற்கு உதாரணங்களாக இருக்கிறது. ‘Demon’ திரைப்படம் இவை அனைத்தையும் உள்ளடக்கி, உணர்ச்சிகரமான கதையுடன் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி வழங்கிய ‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜிவி பிரகாஷ்குமாரின் நடிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயில்’ படத்தில் சிறந்த நடிப்பையும், ‘தேன்’ படத்திற்காக பல விருதுகளையும் பெற்ற அபர்நதி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான ‘உடன்பால்’ இணையத் தொடரிலும் அபர்நிதியின் நடிப்பிற்கு சிறந்த விமர்சனங்களும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கும்கி அஸ்வின், இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ரவீனா தாஹா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, மிப்புசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திகைப்பூட்டும் திரைக்கதை மற்றும் புதிய விசித்திரமான காட்சி அமைப்புடன் கூடிய ‘Demon’, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை விரைவில் வழங்கவுள்ளது.

இந்த படத்தைத் தொடர்ந்து, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் பல அறிமுக இயக்குநர்களுடன் படங்கள் செய்யத் திட்டமிட்டுள்ளது, இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*

எழுதி இயக்கியவர்: ரமேஷ் பழனிவேல்,
தயாரிப்பு: ஆர்.சோமசுந்தரம்,
இசை: ரோனி ரஃபேல்,
ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்த குமார் எம்.எஃப்.ஐ,
படத்தொகுப்பு: ரவிக்குமார். எம்,
கலை: விஜய் ராஜன்,
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா,
தயாரிப்பு நிர்வாகி: குமார் வீரப்பசாமி,
சண்டைக்காட்சிகள்: ராக் பிரபு,
ஆடை: கடலூர் எம்.ரமேஷ்,
ஒலிக்கலவை: ஹரிஷ்,
ஒலி வடிவமைப்பு: ராஜு ஆல்பர்ட்,
VFX & DI: Accel Media,
வண்ணம்: ஜி.எஸ்.முத்து,
தயாரிப்பு அமைப்பாளர்: வி.பாலகிருஷ்ணன்,
படங்கள்: முத்து வேல்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்,
விளம்பர வடிவமைப்பு: யுவராஜ் கணேசன்

vijay sethupathi and mysskin will release ‘DEMON’ first Look

120 சினிமா நட்சத்திரங்கள் மோதும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் CCL UPDATE

120 சினிமா நட்சத்திரங்கள் மோதும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் CCL UPDATE

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

8 மாநில திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ‘Celebrity Cricket League’ (CCL) பிப்ரவரி 18 நாளை முதல் துவங்குகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Celebrity Cricket League (CCL), மீண்டும் வந்துவிட்டது.

நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும், கிரிக்கெட் விளையாட்டும் தான். அதிசயமாக இந்த இரண்டு விசயங்களும் ஒன்றாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிகழ்வில் இணைவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.

இந்தியாவின் 8 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது, இது தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. ராய்ப்பூர், பெங்களூர், ஹைதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஆறு நகரங்கள் 19 ஆட்டங்களை நடத்தவுள்ளன

இந்த 8 அணிகளுள் ஒன்று CCL கோப்பையை வெல்லும்.

மும்பை ஹீரோஸ் பிராண்ட் அம்பாசிடராக சல்மான்கான் மற்றும் கேப்டனாக ரித்தேஷ் தேஷ்முக், சென்னை ரைனோஸ் கேப்டனாக ஜீவா ஐகான் பிளேயராகவும், விஷ்ணு விஷால் நட்சத்திர வீரராகவும், தெலுங்கு வாரியர்ஸ் அணியில் வெங்கடேஷ் இணை உரிமையாளராகவும், அகில் கேப்டனாகவும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

மேலும் மனோஜ் திவாரி போஜ்புரி தபாங்ஸ் கேப்டனாகவும், மோகன் லால் இணை உரிமையாளராக உள்ள கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியில் கேப்டனாக குஞ்சாக்கோ போபன் பங்கேற்க, போனி கபூர் உரிமையாளரான பெங்கால் டைகர்ஸ் அணிக்கு கேப்டனாக ஜிசுசென் குப்தா, கர்நாடகா புல்டோசர்ஸ் கேப்டனாக சுதீப், பஞ்சாப் தி ஷேர் அணிக்கு கேப்டனாக சோனுசூத் பங்கேற்கின்றனர்.

120க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதால் இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற ஸ்டேடியங்கள் முந்தைய சீசன்களில் நிரம்பி வழிந்தன. இந்த முறை மற்ற இடங்களிலும் கூட்டமாக ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிகள் 7 வெவ்வேறு ZEE டிவி நெட்வொர்க்குகளில் நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் ஒளிபரப்பப்படும். Zee Anmol Cinema சேனல் அனைத்து 19 CCL கேம்களையும் ஒளிபரப்பவுள்ளது.

மும்பை ஹீரோஸ் போட்டிகள் & பிக்சர்ஸ் இந்தி, பஞ்சாப் தி ஷேர் போட்டிகள் PTC பஞ்சாபியிலும், தெலுங்கு வாரியர்ஸ் போட்டிகள் Zee சினிமாவிலும், சென்னை ரைனோஸ் போட்டிகள் Zee திரையிலும், கர்நாடகா புல்டோசர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ் போட்டிகள் ஜீ பங்களா மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் போட்டிகள் ஃப்ளவர்ஸ் டிவியிலும் ஒளிபரப்பப்படும்.

Celebrity Cricket League CCL UPDATE where 120 movie stars will compete

சென்னை முதல் காரைக்கால் வரை ‘திருவின் குரல்’.; வித்தியாசமான கேரக்டரில் அருள்நிதி

சென்னை முதல் காரைக்கால் வரை ‘திருவின் குரல்’.; வித்தியாசமான கேரக்டரில் அருள்நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 24’ படத்திற்கு ‘திருவின் குரல்’ (Voice of Thiru) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இதில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஹரிஷ் பிரபு, இதற்கு முன் அருண்குமாரிடம் ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

அதைத் தொடர்ந்து ’புரியாத புதிர்’ படத்தில் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

படத்தின் தலைப்பில் ’திருவின் குரல்’ எனக் குறிப்பிடுவது போல கதாநாயகனது கதாபாத்திரம் பேச்சு குறைபாடு இருப்பவராக (speech impairment) சித்தரிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை படம் கூற இருக்கிறது. அருள்நிதி மகனாக நடிக்க, மூத்த இயக்குநரான பாரதிராஜா அவரது தந்தையாக நடிக்கிறார்.

ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார். சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

’திருவின் குரல்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் 42 நாட்களில் முடிவடைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும், சென்னையில், நகர்ப்புற பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசையமைக்க, சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வெளியாகும்.

*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*

சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஹரிஷ் பிரபு எழுதி இயக்குகிறார்.

இசை – சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு – சின்டோ போடுதாஸ்,
படத்தொகுப்பு – கணேஷ் சிவா,
கலை – இ.தியாகராஜன்,
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன், பாண்டம் பிரதீப்,
பாடல் வரிகள் – உமாதேவி, கருப்பன்,
ஆடை வடிவமைப்பாளர் – டினா ரொசாரியோ,
ஒப்பனை – ஆர்.சீரலன்,
ஒலி வடிவமைப்பு – பிரதாப்,
ஒலிக்கலவை – டி.உதயகுமார்,
VFX – ஆர். ஹரிஹர சுதன்,
ஸ்டில்ஸ் – மோதிலால்,
DI – இன்ஃபினிட்டி மீடியா,
கலரிஸ்ட் – சண்முக பாண்டியன்.எம்,
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
டைரக்ஷன் டீம் – கிஷோர் கே.குமார், ஹரி பிரசாத் வி,
தயாரிப்பு நிர்வாகி – கே.ஆர்.பாலமுருகன்,
சீனியர் எக்ஸிகியூட்டிவ் புரொடக்ஷன்ஸ் – சந்திரசேகர் வி,
நிர்வாகத் தயாரிப்பாளர் – சுப்ரமணியன் நாராயணன்.

லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் – ஜிகேஎம் தமிழ் குமரன்

‘Thiruvinkural’ first Look Poster released

பெண்களின் அதிகாரம் & உரிமையை உரக்கச் சொன்னது ‘அயலி’.. – சிங்கம் புலி

பெண்களின் அதிகாரம் & உரிமையை உரக்கச் சொன்னது ‘அயலி’.. – சிங்கம் புலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ5 ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான ‘அயலி’ இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது.

எனவே நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்..

அப்போது நடிகை அபி நக்ஷத்ரா பேசியதாவது…

”என்னுடைய நடிப்பை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. என்னைத் தமிழ் செல்வி கதாபாத்திரமாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கும் இந்த செய்தியை மற்றவர்களிடமும் கொண்டு சேர்த்ததற்கும் நன்றி. எனக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர் முத்துக்குமார் சாருக்கும் மொத்த டெக்னிகல் குழுவிற்கும் எனது நன்றி” என்றார்.

நடிகர் சிங்கம்புலி கூறியதாவது…

“அயலியை ஊக்குவித்து அதை மக்களிடையே கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. பெண்களின் அதிகாரத்தை அவர்களது உரிமையையும் உரக்கச் சொல்லி இருக்கிறது இந்த அயலி.

என்னையும் இந்த வெற்றி தொடரில் பங்களிக்க வாய்ப்பளித்த தயாரிப்புக் குழுவிற்கும் ஜீ5 தளத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் சச்சின் மற்றும் படக்குழுவினர் சரியான திட்டத்தை வகுத்து அதைச் சுமுகமாக நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளனர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் முத்துக்குமார் கூறியதாவது…

”இந்த கதையை நம்பிய ஒட்டு மொத்த குழுவுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முழு மனதோடு இதனை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இதில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுக்கும் நன்றி.

இந்த படத்தில் சிறு சிறு காட்சிகளில் நடித்தாலும் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து நடித்தனர். தயாரிப்பாளரான Zee5 குழு இதனை முழுதாக நம்பியதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. இந்த தொடரில் வரும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகத் தேர்வு செய்து அதைப் பலரிடமும் கொண்டு சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்” என்றார்.

Actor Singam Puli praises Ayali web series

More Articles
Follows