ஏஆர். முருகதாஸ் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா.?

ஏஆர். முருகதாஸ் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rakul Preet singhஅட்லி படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை பிரபல நிறுவனமாக லைகா தயாரிக்கவுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் பீரித்தி சிங் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் தடையற தாக்க படம் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

பின்னர் என்னமே ஏதோ என்ற படத்தி நடித்தார். தற்போது கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்படத்தை சதுரங்க வேட்டை வினோத் இயக்குகிறார் என்பது நாம் அறிந்ததே.

Rakul Preet Singh may teams up with Vijay AR Murugadoss Project

எங்க மகன் இல்லேன்னு தனுஷால சொல்ல முடியுமா.? – ‘திடீர்’ பெற்றோர்

எங்க மகன் இல்லேன்னு தனுஷால சொல்ல முடியுமா.? – ‘திடீர்’ பெற்றோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Dhanush sudden Madurai parents interviewநடிகர் தனுஷ் தங்கள் மகன் என மதுரையை சேர்ந்த கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஒரு பிரபல இதழுக்கு இவர்கள் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…

ஐஞ்சு வயசு வரைக்கும் கலைச்செல்வனுக்கு (தனுஷ்) பேச்சுவராம இருந்துச்சு.

மேலூர் உள்ள அரசுப்பள்ளில் பத்தாவது வரை படிச்சான்.

மேற்படிப்புக்காக திருப்பத்தூர்ல படிக்க வச்சோம். ஆனால் கொஞ்சநாள்லவ காணாம போய்ட்டான்.
தேடி தேடி பார்த்து பின்பு அமைதியாகிட்டோம்.

பொல்லாதவன் பட விளம்பரத்த டிவி பேட்டி பாத்தோம்.

‘ஏய் நம்ம கலைச்செல்வன் மாதிரியே இருக்கான்லனு அப்போ பேசிட்டு இருந்தோம்.

நான் மதுரைக்காரன். பிளஸ் ஒன் பாதி வரைக்கும்தான் படிச்சிருக்கேனு அந்த பேட்டியில சொன்னார்.

அதுவரைக்கும் சந்தேகத்தோட இருந்தோம். ஆனா அவரோட நடை, உடை, பாவனை எல்லாம் எங்க மகன் செய்வதை போல இருந்துச்சு.

அதன்பின்னர் அவர்கிட்ட பலமுறை பேச முயற்சி செய்தோம். ஒரு முறை நேரிலும் பார்த்தோம். ஆனா எங்களை தவிர்த்துட்டார்.

நாங்க நிறைய பேருகிட்ட சொல்லி பாத்தோம். ஆனா யாரும் நம்பல. அதான் வழக்கு போட்டோம்.

இப்ப வரைக்கு அவர் எங்ககிட்ட வந்து பேசலையே அது ஏன்.?

உங்க மகன் நான் இல்ல. ஏன் தொல்லை பண்றீங்கனு ஒரு வார்த்தை கூட கேட்கலை.

நான் உங்க மகன் இல்ல. நீங்க என்னோட அப்பா அம்மா இல்லைனு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.

அவரால முடியாது. அவருக்கு மனசாட்சினு ஒண்ணு இருக்குது.

என்று அப்பேட்டியில் தெரிவித்துள்ளனர் அந்த தம்பதியினர்.

Actor Dhanush sudden Madurai parents interview

dhanush old photo by madurai parents

தனுஷை தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் கால்பதிக்கும் விஜய்சேதுபதி

தனுஷை தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் கால்பதிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi‘மைனே பியார் கியா’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமான பாக்யஸ்ரீ, பாலிவுட்டை கலக்கியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது அவரது மகன் அபிமன்யூ தசானி,  அனுராக் காஷ்யப் பிலிம்ஸ் சார்பில் உருவாகவுள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நாயகியாக புதுமுகம் ராதிகா மதன் நடிக்க, வாசன் பாலா இப்படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்திற்கு `மர்த் கோ தர்த் நகி ஹோத்தா’ என்று பெயரிட்டு உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய்சேதுபதி.

கோலிவுட்டில் கலக்கிய தனுஷ், பாலிவுட்டில் கலக்கி வருவது போல், தற்போது விஜய்சேதுபதியும் அங்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

இப்படம் ஆக்‌ஷன் கலந்த காமெடி பின்னணியில் உருவாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Vijay Sethupathi teams up with Anurag Kashyap for Mard Ko Dard Nahi Hota movie

‘கோபக்கார கமலுக்கு 3 தந்தைகள்…’ – ரஜினி உருக்கமான பேச்சு

‘கோபக்கார கமலுக்கு 3 தந்தைகள்…’ – ரஜினி உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Kamalhassanகமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் அண்மையில் காலமானார்.

அவருடைய நினைவேந்தல் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் சற்றுமுன் நடைபெற்றது.

இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது ரஜினி பேசியதாவது…

என்னுடைய நண்பர் கமல் அவர்களுக்கு 3 தந்தைகள். முதல் தந்தை அவரை பெற்றவர். 2வது தந்தை அவரை வளர்த்த சாருஹாசன். 3வது தந்தை அவரது முன்னேற்றத்திற்கு காரணமான சந்திரஹாசன்.

சாருஹாசன் அவர்களுடன் நான் நெருக்கமாக பழகியுள்ளேன். ஆனால் சந்திரஹாசன் அவர்களுடன் அவ்வளவாக பழகவில்லை என்றாலும் அவரை பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன்.

சினிமாவில் இப்போதுள்ள இளம் தலைமுறை நடிகர்கள் வைத்துள்ள பணம் கூட கமலிடம் கிடையாது.
இதை நான் வருத்தத்துடன் கூற வேண்டிய நிலையில் உள்ளேன்.

ஆனால் இதுபற்றி எல்லாம் கமல் கவலைப்படமாட்டார். தற்போது அவரிடம் கொஞ்சமாவது பணம் இருக்கிறது என்றால் அதற்கு சந்திரஹாசன்தான் காரணம்.

அவர் இனிமேலாவது பணம் விஷயங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று அவரது அண்ணன் சாருஹாசன்தான் சொல்ல வேண்டும்.

நீங்களெல்லாம் கமலின் கோபத்தை 10 சதவிகிதம்தான் பார்த்து இருப்பீர்கள். ஆனால் நான் 100 சதவிகிதம் பார்த்துருக்கேன்.

எனவே நான் கமலிடன் மிகவும் ஜாக்கிரதையா இருப்பேன்.

கமலிடம் சாருஹாசன் அன்பாக பேசுவார். ஆனால் சந்திரஹாசன் கொஞ்சம் ஸ்ட்ரிட்டாக இருப்பார்.

இப்போது சந்திரஹாசன் இல்லாததால் இனி எல்லாம் பொறுப்புகளும் சாருஹாசன் மீது உள்ளது’ என்று தன் நண்பர் கமல்ஹாசன் பற்றி பேசினார் ரஜினிகாந்த்.

I Have seen angry Kamalhassan says Rajinikanth

விஜய் பிறந்த நாளில் தனுஷின் ரம்ஜான் விருந்து

விஜய் பிறந்த நாளில் தனுஷின் ரம்ஜான் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and dhanushதனுஷ் இயக்கி, தயாரித்து நடித்துள்ள ‘பவர்பாண்டி’ வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

ரம்ஜான் ஸ்பெஷலாக ஜூன் 23ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 22ஆம் விஜய்யின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது மனைவியா நந்தினி; கார்த்தி தற்கொலைக்கு காரணம் என்ன.?

3வது மனைவியா நந்தினி; கார்த்தி தற்கொலைக்கு காரணம் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nandini and karthikeyanவிஜய் டிவி புகழ் நந்தினியின் கணவர் கார்த்தி குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

அவர் தற்கொலைக்கு முயலும் முன்னர் 3 கடிதங்களை எழுதி இருக்கிறாராம். தற்போது அந்த கடிதங்கள் போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ளது.

ஒரு கடிதத்தை தன் மனைவிக்கும், மற்றொரு கடிதத்தை தன் அம்மாவுக்கும், 3வது கடிதத்தை தன் தங்கைக்கு எழுதியுள்ளாராம்.

அதில் தன் தற்கொலைக்கு காரணம், நந்தினியின் அப்பாதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக சில விவரங்களும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மிஸ்டர் சென்னை பட்டத்தை ஒரு முறை வென்றுள்ளவர் கார்த்தி.

தற்போது தி.நகரில் பெரிய ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நந்தினியை திருமணம் செய்வதற்கு முன்பே இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி பெயர் வெண்ணிலா.

நந்தினி மணக்க, அவரின் வீட்டாரின் சம்மதத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர்.

பின்னர் நந்தினிதான் விருப்பப்பட்டு எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டு தனிக்குடித்தனம் செய்துள்ளார்.

More Articles
Follows