ரஜினியின் 2.ஓ பட ஆடியோ வெளியீட்டு தேதி உறுதியானது

ரஜினியின் 2.ஓ பட ஆடியோ வெளியீட்டு தேதி உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இது துபாய் நாட்டில் உள்ள பர்ஜ் பார்க் என்னும் இடத்தில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாம்.

இந்நிகழ்வின் போது இப்பட இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் மேடையில் இதன் பாடல்களை பாட போகிறாராம்.

இதனையடுத்து நவம்பரில் டீசர் ஐதராபாத்திலும், டிசம்பரில் ட்ரைலர் சென்னையிலும் வெளியிட உள்ளனர்.

இந்த விழாக்களை லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக நடத்திட முடிவுசெய்திருக்கிறதாம்.

2017 தீபாவளிக்கு விஜய்-அட்லி கூட்டணியின் 2 படங்கள்

2017 தீபாவளிக்கு விஜய்-அட்லி கூட்டணியின் 2 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeதெறி படத்தை தொடர்ந்து மெர்சல் படத்திலும் விஜய், அட்லி கூட்டணி அமைந்தது.

இந்தாண்டு 2017 தீபாவளிக்கு மெர்சல் படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் தெறி படத்தின் சாட்லைட் உரிமையை கைப்பற்றிய சன்டிவி தீபாவளி நாளில் தெறி படத்தை ஒளிப்பரப்பவிருக்கிறார்களாம்.

எனவே இந்தாண்டு தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமையும் என நம்பலாம்.

2017 Diwali will have double treat of Vijay fans

பெப்சி ஸ்டிரைக் வாபஸ்; விரைவில் ரஜினி-விஷால் பட சூட்டிங் ஆரம்பம்

பெப்சி ஸ்டிரைக் வாபஸ்; விரைவில் ரஜினி-விஷால் பட சூட்டிங் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FEFSI strike over Soon Kaala Sandakozhi shooting will startதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் பெப்சி நிறுவனம் மோதல் நீடித்து வருவதால் கடந்த 13 நாட்களாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தொடர்ந்து பேச்சு வார்த்தி நடத்திவந்தார்.

இதனிடையில் பெப்சியில் உள்ள டெக்னீசியன் யூனியனை நீக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட பெப்சி அந்த யூனியனை நீக்க, பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஓரிரு நாட்களில் காலா, சண்டக்கோழி2 உள்ளிட்ட பட சூட்டிங்குகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

FEFSI strike over Soon Kaala Sandakozhi shooting will start

vishal rk selvamani

தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது; சொன்னதை செய்தார் விஷால்

தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது; சொன்னதை செய்தார் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal tamil rockersதியேட்டரில் புதிய படம் ரிலீஸ் ஒருபக்கம் என்றால், அன்றைய தினமே தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தளத்தில் புதுப்படம் ரிலீஸ் ஆகும்.

இது திரைப்பட லாபம் பெரிதும் பாதிக்கப்பட தமிழ் சினிமாவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது.

இந்த இணையத்தளம் எங்கிருந்து இயக்கப்படுகிறது? இதன் நிர்வாகி யார்? என்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் சினிமா பிரபலங்கள் தவித்து வந்தனர்.

எத்தனை முறை இந்த தளத்தை முடக்கினாலும் மீண்டும், மீண்டும் புதிய பெயர்களில் தனது திருட்டுத்தனத்தை அரங்கேற்றி வந்தனர் அதன் அட்மின்கள்.

எனவே இவர்களை எச்சரிக்கும் விதமாக விரைவில் இவர்களை பிடித்தே தீருவேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஷால் கொடுத்த ஐடியாவின் பேரில் தமிழ் ராக்கர்ஸின் அட்மின் கவுரிஷங்கர் என்பவரை சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இன்று கைது செய்தனர்.

இவர் திருப்பூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் கன் என்ற இணையத்தளத்துடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கவுரிஷங்கருக்கு மேல் இன்னும் சில அட்மின்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

போலீசாரின் விசாரணையில் பல கட்ட தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷாலின் இந்த அரிய முயற்சியை திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Tamil rockers website admin arrested Vishal done what he said

tamil-rocker

மாகாபா.ஆனந்த்தின் மாணிக் படத்திற்கு கைகொடுக்கும் விஷால்

மாகாபா.ஆனந்த்தின் மாணிக் படத்திற்கு கைகொடுக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MaKaPa Anand Maanik first look will be released by Vishalவிஜய் டிவியில் பிரபலமான மா.கா.பா.ஆனந்த் தற்போது ‘மாணிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் தொடக்கிவிழாவின் போது ரஜினியின் பாட்ஷா பட ஸ்டைலில் போஸ் கொடுத்திருந்தார் மாகாபா ஆனந்த்.

இப்படத்தை மார்ட்டின் இயக்க, ‘எதிர்நீச்சல்’ படத்தில் நடித்த சூஷா நாயகியாக நடிக்கிறார்.

மோஹிதா சினி டாக்கீஸ் எம்.சுப்பிரமணியம், வினோத் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

தரண் இசை அமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்பட பர்ஸ்ட்லுக் போஸ்டரை வருகிற செப். 15ஆம் தேதி நடிகர் விஷால் வெளியிடவுள்ளார்.
விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

MaKaPa Anand Maanik first look will be released by Vishal

சிவகார்த்திகேயன் விலக விஜய்சேதுபதியுடன் இணையும் சந்தானம்

சிவகார்த்திகேயன் விலக விஜய்சேதுபதியுடன் இணையும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi santhanamசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வேலைக்காரன் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படம் இந்த செப். 29ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு, பின்னர் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள கருப்பன் படத்தை செப்டம்பர் 29ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

தன்யா நாயகியாக நடிக்க, பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்துடன் இதே நாளில் ஜி.வி.பிரகாஷின் ‘செம’, நயன்தாராவின் ‘அறம்’, கௌதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மகாதேவகி’, சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathis Karuppan and Santhanams Server Sundaram movie release updates

More Articles
Follows