கார்த்திக் சுப்புராஜுக்காக ரஜினியை எதிர்க்கும் விஜய்சேதுபதி

கார்த்திக் சுப்புராஜுக்காக ரஜினியை எதிர்க்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi likes to play villain for Rajini in Karthik Subbaraj movieரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் டீசர் நாளை மறுநாள் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என இப்பட தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’2.ஓ’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

லைகா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பதை சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியை எதிர்க்கும் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அழுத்தமான வில்லன் கேரக்டர் என்பதால் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டு இருப்பதாகவும் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Vijay Sethupathi likes to play villain for Rajini in Karthik Subbaraj movie

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன்; மும்பை சென்றார் கமல்

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன்; மும்பை சென்றார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanதுபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வரவுள்ளதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் இன்று மதியம் மும்பை சென்றுள்ளார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் கமல்,

“உயிர்ழந்த ஸ்ரீதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை செல்கிறேன். இறுதி ஊர்வலத்தின் கலந்துகொள்வது வழக்கமில்லை என்று முடிவெடுத்த நிலையில், குடும்பத்தில் ஒருவராகக் கருதும் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க செல்கிறேன்.

பொதுமக்களுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதால், இடையூறுகள் ஏற்படும் என அதை தவிர்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், ராமநாதபுரத்தில் பேசிய போது தனக்கு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் பழக்கம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வந்தனர்.

தற்போது கமல் இப்படி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிர சிகிச்சையில் விஷால்; எப்போது வீடு திரும்புவார்.?

தீவிர சிகிச்சையில் விஷால்; எப்போது வீடு திரும்புவார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalபாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்த படம் ‘அவன் இவன்’.

இப்படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்திருந்தார் விஷால்.

இந்த படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இந்நாள் வரை விஷாலுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை ஏற்பட்டது.

மேலும், ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்த போது தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த இரு பிரச்சினைகளுக்காகவும் கடந்த வாரம் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தற்போது மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஷால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மூட்டுவலி, தலைவலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

எனவே அவர் இன்னும் 10 நாட்களில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

ஸ்ரீதேவி மரணத்தால் மறைக்கப்பட்ட பாலியல் கொடூரம்; பிரசன்னா ஆதங்கம்

ஸ்ரீதேவி மரணத்தால் மறைக்கப்பட்ட பாலியல் கொடூரம்; பிரசன்னா ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prasanna raised question on murder minor girl harrasament at Vilupuramவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி(45).

கணவன் இறந்த நிலையில் 4 மகன்கள், 2 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

தனது கடைசி மகன் தமயன், மகள் தனம் ஆகியோருடன் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரயாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் சராமாரியாக தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் சிறுவன் தமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். இதில் சிறுமி தனம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அதிகம் பேசப்படாதது ஏன் என்று பிரசன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், “விழுப்புரத்தில் ஆராயி மற்றும் அவரின் 8 வயது மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு காரணமா?” என்று எனக் கேட்டுள்ளார்.

மேலும் மனிதம் மரித்து விட்டதா? என ஆதங்கத்துடன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.

Prasanna raised question on murder minor girl harrasament at Vilupuram

prasanna twit

இந்தியன் 2 அப்டேட்ஸ்; ஊழலை தோலுரிக்கும் உலகநாயகன்

இந்தியன் 2 அப்டேட்ஸ்; ஊழலை தோலுரிக்கும் உலகநாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamals Indian 2 story based on Corruption and Bank Loanகமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்கவுள்ளார்.

கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார் ஷங்கர்.

தற்போது கமல் அரசியல் களத்தில் வந்துள்ளதால் தன் ரசிகர்களை தொண்டர்களையும் கவரும் வகையில் பல அம்சங்களை சேர்க்க இருக்கிறாராம்.

1996-ல் வெளியான முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றி காட்சிகளை வைத்திருந்தனர்.

தற்போது இரண்டாம் பாகத்தில் இன்றைய அரசியல்வாதிகளின் ஊழல் பற்றியும் வங்கிகளில் லோன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பணக்காரர்களை பற்றியும் சொல்லப் போகிறார்களாம்.

மேலும் மக்கள் ஆதரவை பெற பன்ச் வசனங்களை வைக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

கமல் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகின்றனர். மேலும் இந்தி நடிகர் அஜய்தேவ்கானும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Kamals Indian 2 story based on Corruption and Bank Loan

மது போதையால் ஸ்ரீதேவி மரணம்; துபாய் போலீசார் அறிக்கை

மது போதையால் ஸ்ரீதேவி மரணம்; துபாய் போலீசார் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Autopsy report says accidental drowning cause of Sridevi deathதிருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.

அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார் என செய்திகள் வெளியாகின.

இதுவரை அவரது உடல் இந்தியா வரவில்லை. துபாய் நாட்டில் பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

எனவே அவரது மரணம் பற்றி ரசிகர்களிடையே அதிக சந்தேகம் அதிகரித்தது.

இந்நிலையில் அவரது மரணம் குறித்து தடவியல் மருத்துவர்கள் (உடற்கூறு அறிக்கை தகவல்) சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி மரணிக்கவில்லை.

குளியல் அறை தொட்டியில் ஸ்ரீதேவி தவறி விழுந்துள்ளார்.

அதிக அளவு மது அருந்தி (ஆல்கஹால்) இருந்ததால் அவரால் தண்ணீரில் இருந்து எழ முடியவில்லை.

இதனால் அவர் தண்ணீரில் மூச்சு திணறி மூழ்கி இறந்துள்ளார். இது ஒரு விபத்துதான்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Autopsy report says accidental drawning cause of Sridevi death

sridevi death medical certificate

More Articles
Follows