தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் ‛பொன்னியின் செல்வன்’ .
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று செப்டம்பர் 6, 2022 மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.
டிடி (திவ்யதர்ஷினி) மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களுடன் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், இயக்குனர்கள் ஷங்கர் கௌதம் மேனன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
கமல் மற்றும் ரஜினி இருவரும் ஒன்றாக மேடையேறினர்.
அப்போது ரஜினி பேசியதாவது…
” தளபதி படம் எடுத்துக் கொண்டிருந்தபோது நான் மும்பையில் ஒரு ஹிந்தி பட சூட்டிங் இருந்தேன்.
மம்மூட்டி ஆப்பிள் கலரில் இருப்பார். நான் கருப்பாக இருப்பேன். அமாவாசை பௌர்ணமி போல இருக்கும். என்பதால் எனக்கு மேக்கப் கேட்டேன். ஆனால் மேக்கப் போடவும் மணிரத்னம் விடவில்லை.
அப்போது எனக்கு லூஸ் பேண்ட் லூஸ் சர்ட் ஒரு செப்பல் கொடுக்க சொல்லி இருந்தார் மணிரத்னம்.
ஆனால் எனக்கு அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு ஒரு நல்ல ஷூ டைட் பேன்ட் டைட் சர்ட் கேட்டிருந்தேன்.
ஆனால் என்னுடைய காட்சிகளை மணிரத்னம் படமாக்கவில்லை. நானும் ஷோபனாவும் பேசிக் கொண்டிருந்தோம். ஏன் படம் பிடிக்கவில்லை.. நான் சோபனாவிடம் கேட்டேன்..
உங்களுக்கு பதிலாக ..(ரஜினிக்கு) கமல் நடிக்க வைக்கலாமா? என்று பேசுகிறார்கள்.
அதன் பின்னர் ஒரு வழியாக என்னை வைத்து காட்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார்.
நான் எப்போதும் எல்லாமே ஷார்ட்டாக தான் செய்வேன். ஆனால் மணிரத்னம் பீலிங் வேண்டும் ஃபீலிங் வேண்டும் என்றார்.
அதன் பிறகு நான் கமலுக்கு போன் செய்தேன். மணிரத்னம் சொல்வதை அப்படியே செய்து காட்டுங்கள். அது போதும் என்றார்.
அதன் பிறகு செய்து காட்டி அப்படியே நடித்தும் காட்டினேன்… டேக் ஓகே ஆனது.. கமலுக்கு நன்றி என்று இப்போது தெரிவித்தார் ரஜினிகாந்த்.
இதை கேட்டதும் ரசிகர்கள் சிரிப்பலையில் உற்சாகமடைந்தனர்.
Rajini shared Thalapathi movie memory at Ponniyin Selvan Event