சைக்கோ வில்லன் யாருப்பா..? ராட்சசனை பாராட்டிய ரஜினிகாந்த்

சைக்கோ வில்லன் யாருப்பா..? ராட்சசனை பாராட்டிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishnu rajiniமுண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமாரின் இரண்டாவது படம் ‘ராட்சசன்’.

சைக்கோ த்ரில்லர் படமான இது அண்மையில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

அனைவரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ராட்சசன் படம் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

இந்த பாராட்டு குறித்து பட நாயகன் விஷ்ணு விஷால் கூறியுள்ளதாவது..

“சூப்பர் ஸ்டார் உங்களை தொலைப்பேசியில் அழைத்து இன்ப அதிர்ச்சி தரும்போது சந்தோஷத்தில் குதிக்கலாம்.

ராட்சசன் பார்த்து விட்டு அவர் சொன்ன வார்த்தைகள், ‘அற்புதம் அற்புதம் அற்புதம். நடிப்பு தூள் கிளப்பிட்டிங்க. போலீஸ் உடைல செம்ம கச்சிதம். வில்லன் யாரு? நல்ல உடல் மொழி, இந்த இயக்குநரும் நீங்களும் நல்ல இணை’ ” என பதிவிட்டுள்ளார்.

Shades of Saaho; மிரள வைக்கும் பிரபாஸின் பர்த்டே ட்ரீட்

Shades of Saaho; மிரள வைக்கும் பிரபாஸின் பர்த்டே ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhas treats fans with breathtaking glimpses of Saaho on birthdayஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான ‘சாஹூ’ திரைபடத்தின் “Shades of Saaho” எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.

இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2 படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் “சாஹூ” மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இப்படத்தின் அடுத்த காட்சி தொகுப்புகள் எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாய் அமைத்துள்ளது “Shades of Saaho” காட்சி தொகுப்பு. ஒரு குறுகிய காட்டிசிகளின் தொகுப்பாக அளிக்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள படக்குழு, பெரிய பட்ஜெட் படமான “சாஹூ” படத்தின் தயாரிப்பும் திரைப்பட காட்சியையும் கலவையாக கொடுத்து படத்தின் முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்துள்ளனர்.

இப்படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரதா கபூர் நடிக்க ஜாக்கி ஷிராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்கள் நடித்துள்ளனர்.

இயக்குனர் சுஜீத் இப்படத்தை இயக்க, வம்சி, பிரமோத், விக்ரம் அவர்களின் UV கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அமிதாப் பட்டாச்சார்யாவின் ரசிக்கதக்க பாடல் வரிகளுக்கு, சங்கர்-எஹ்சான்-லாய் இணை இசையில் குழைத்து உங்கள் காதுகளில் ரீங்காரமிட பாடல் பட்டியல் தயாராகிவிட்டது.

மதியின் ஒளிப்பதிவும், சாபுசிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகபடுத்தியுள்ளது. திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Prabhas treats fans with breathtaking glimpses of Saaho on birthday

தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகும் விஜய்யின் *சர்கார்*

தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகும் விஜய்யின் *சர்கார்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Sarkar movie release date changesசன் பிக்சர்ஸ் தயாரிக்க விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் நவம்பர் 6ஆம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அதற்கு முன்னரே வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் வெள்ளியன்றே படங்கள் வெளியாகும். ஆனால் தீபாவளி திருநாள் செவ்வாய்கிழமை வருகிறது.

எனவே இதற்கு முந்தைய வாரத்தில் நவம்பர் 2ஆம் தேதி வெள்ளியன்றே படத்தை வெளியிட்டால் 5 நாட்களில் நல்ல வசூல் பார்த்து விடலாம் என்பதால் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த படத்துடன் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன், விமலின் களவாணி மாப்பிள்ளை மற்றும் ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி படங்களும் வெளியாகவுள்ளது.

ஓரிரு தினங்களுக்கு முன் தான் நவம்பர் 2ல் சந்தோஷத்தில் கலவரம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

Vijays Sarkar movie release date changes

40 நாட்கள் தாய்லாந்தில் தங்கும் விஜய் சேதுபதி-அஞ்சலி

40 நாட்கள் தாய்லாந்தில் தங்கும் விஜய் சேதுபதி-அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi and Anjali stayed 40 days at Thailand for shootingபாகுபலி 2 வெற்றிப்படத்தை வெளியிட்ட பட நிறுவனம் S.N. ராஜராஜனின் கே.புரொடக்‌ஷன்ஸ்.

அத்துடன் ராணா ரெஜினா சத்யராஜ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் தமிழில் மடை திறந்து தெலுங்கில் 1945 படங்கலையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து சூப்பர் ஹிட்டான பியார் பிரேமா காதல் வெற்றிப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது.

40 நாட்கள் இடைவிடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்படத்தின் பெரும்பகுதி வெளி நாட்டில் படமாகிறது என்பது சிறப்பம்சம்.

அந்தளவுக்கு கதையும் சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளி நாடுகளில் நடத்துகிறோம் என்கிறார் இயக்குனர் அருண்குமார்.

சேதுபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமான இதன் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக்
எடிட்டிங் – ரூபன்
இசை – யுவன் சங்கர்ராஜா
தயாரிப்பு மேற்பார்வை – சிவசங்கர்
தயாரிப்பு S.N. ராஜராஜன், யுவன் சங்கர் ராஜா, இர்பான்மாலிக்
எழுதி இயக்குகிறார் அருண்குமார்.

Vijay Sethupathi and Anjali stayed 40 days at Thailand for shooting

vijaysethupathi anjali yuvan

*ஆண் தேவதை* ரிலீசில் கட்டப் பஞ்சாயத்து.; டைரக்டர் தாமிரா குமுறல்

*ஆண் தேவதை* ரிலீசில் கட்டப் பஞ்சாயத்து.; டைரக்டர் தாமிரா குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aan Devadhai Director Thamira talks about his loss in movie releaseதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்த ஆண் தேவதை படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் வெளியீட்டின் போது தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் தாமிரா.

இயக்குனர் தாமிரா கூறியதாவது…

ஆண் தேவதை படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சனைகள் வந்தன.

விநியோகஸ்தர்கள் சங்கத்தில் படத்தை ரிலீஸ் செய்ய கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள்.

3.20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்தேன். ஆனால் ரூ. 20 லட்சத்திற்கு தான் படம் விற்பனையானது. இதனால் எனக்கு ரூ. 2.5 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.

இங்கு சிறிய படங்களை பிழைக்க விடுவதில்லை. சிறு படங்களுக்காக வணிகம் நடந்தால் தான் சினிமா உயிர்ப்போடு இருக்கும்.

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சனை இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 130 திரையரங்குகளில் தான் படம் வெளியானது. மேலும் காட்சிகளுக்கும் சரியான நேரம் கிடைக்கவில்லை. குடும்பத்தினர் பார்க்கும் வகையில் காட்சிகளின் நேரம் அமையவில்லை.

இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். மாலைக் காட்சியில் தான் குடும்பத்தோடு படம் பார்ப்பவர்கள் அதிகம். ஆனால் ஆண் தேவதைக்கு காலைக் காட்சி மற்றும் இரவுக் காட்சிகளே கிடைத்தது.

நல்ல படங்களை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். படங்களுக்கு விளம்பரம் செய்தாலும், வாய்வழியாகப் பேசப்படும் தகவல்கள் தான் படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கிறது.

சிறிய படங்களுக்கான பிரச்சனைகள் குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் வினியோகஸ்தர்கள் சங்கத்திலும் பேசுகிறார்கள். ஆனால் தீர்வு இல்லை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. கதிரேசன் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டாலும் அவர்களிமும் தீர்வு இல்லை. என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தாமிரா.

Aan Devadhai Director Thamira talks about his loss in movie release

2.0 படத்தில் எமி ஜாக்சனுக்கு டப்பிங் பேசியது சவாலான விஷயம்..: ரவீணா ரவி

2.0 படத்தில் எமி ஜாக்சனுக்கு டப்பிங் பேசியது சவாலான விஷயம்..: ரவீணா ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amy jacksonசினிமாவில் அழகான மற்றும் இனிமையான குரல் எப்போதுமே ஒரு நடிகைக்கு முக்கியமான அங்கமாக இருக்கிறது. தன்னுடைய தனித்துவமான உச்சரிப்புகளால், பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்த ரவீணா ரவி, தற்போது நடிகையாகவும் மாறியிருக்கிறார். இனிமையான குரல் மட்டுமல்லாமல், அதை எப்படி சிறப்பாக பேசுவது என்பதில் ரவீணா ஒரு மாஸ்டர். அவர் கூறும்போது, “படங்களுக்கு டப்பிங் செய்வதில் சில சவால்கள் உள்ளன. நாம் டப்பிங் பேசும் பெண் கதாபாத்திரங்களின் இயல்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எந்த காட்சிக்கு எப்படி பேச வேண்டும் என்பது நமக்கு கச்சிதமாக தெரியும். 2.0 படத்தில் ஏமி ஜாக்சனுக்கு டப்பிங் செய்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. காரணம், நான் டப்பிங் பேசும்போது, அது முழுக்க க்ரீன்மேட் காட்சிகளாக இருந்தது. அதன் சூழலை கற்பனை செய்து சரியான உணர்வை கொடுக்க நிறைய சிரமப்பட்டேன்” என்றார்.

டப்பிங்கில் தனது பல சவால்களை பற்றி பேசிய ரவீணா, காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்த சவாலான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். “என் முதல் படமான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கதாநாயகனின் மனைவியாக, வேலைக்கு போகும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். என் வாழ்வில் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் வாழ்க்கையின் போக்கை மாற்றுகிறது. உண்மையாக என் வாழ்க்கையில் அத்தகைய சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டதில்லை. அதனால் நடிப்பு பயிற்சி மூலம் என்னை தயார் செய்ய வேண்டியிருந்தது” என்றார் ரவீணா.

இந்த படத்தில் ஒரு நாயகன் சுரேஷ் ரவிக்கும், ரவீணாவுக்கும் இடையே ஒரு அழகான காதல் பாடல் உள்ளது. அவர்களின் கெமிஸ்ட்ரியை பற்றி மொத்த படக்குழுவே பாராட்டி வருகிறது.

“சமகால உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து காவல்துறை உங்கள் நண்பன் படம் பேசுகிறது. ஆனாலும், ஒரு சாதாரண மனிதனுக்கும், காவல்துறை அதிகாரிக்கும் இடையேயான பிணைப்பு படத்தின் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாக இருக்கும்.

சுரேஷ் ரவி மற்றும் ரவீணா ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஆர்.டி.எம் படத்தை இயக்கியிருக்கிறார். மைம் கோபி, கல்லூரி வினோத் மற்றும் சில பிரபல நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பி.ஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் மற்றும் வைட் மூன் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. ஆதித்யா சூர்யா (இசை), விஷ்ணு ஸ்ரீ (ஒளிப்பதிவு), வடிவேல், விமல்ராஜ் (எடிட்டர்) மற்றும் ராஜேஷ் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.

More Articles
Follows