‘ரெமோ’வுக்கு ரஜினி பாராட்டு; உற்சாகத்தின் உச்சத்தில் ஆர்.டி.ராஜா

‘ரெமோ’வுக்கு ரஜினி பாராட்டு; உற்சாகத்தின் உச்சத்தில் ஆர்.டி.ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo team rajinikanthசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது.

சில எதிர்மறை விமர்சனங்கள் இப்படம் குறித்து வந்தாலும், ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.

எனவே, சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இத்தகவலை சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஆர்.டி.ராஜா.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

“ரெமோ படம் ரஜினி சாருக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தை பற்றி பாராட்டினார்.

ஒரு தீவிர ரஜினி ரசிகனான எனக்கு, அவரிடம் இருந்து கிடைத்த பாராட்டு என்னுடைய வாழ்நாளில் நான் உழைத்து உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

விஷால்-கார்த்தி நடிக்கும் படத்திற்கு யாருப்பா இப்படி பேரு வச்சது?

விஷால்-கார்த்தி நடிக்கும் படத்திற்கு யாருப்பா இப்படி பேரு வச்சது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi vishal joins with prabhu deva for new movieநடிகர் சங்க விவகாரங்களில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடியவர்கள் விஷால்-கார்த்தி.

அப்போது முதலே, இவர்கள் எப்போது இணைந்து நடிப்பார்கள் என பேசப்பட்டு வந்தது.

தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

இவர்கள் இணையும் படத்திற்கு கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படி பெயரிட என்ன காரணம் எனத் தெரியவில்லை.

இப்படத்தை நடிகரும் பிரபல இயக்குனருமான பிரபுதேவா இயக்கவிருக்கிறார்.

விஜய்க்கு போக்கிரி, வில்லு ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவிருக்கிறாராம்.

2017 பொங்கல்… விஜய் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா

2017 பொங்கல்… விஜய் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bairavaaவிஜய்யின் பைரவா படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதனால் போக்கிரி, ஜில்லா படங்களை தொடர்ந்து, பைரவா பொங்கலை கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், விஜய் 61 படத்தின் அறிவிப்பையும் அந்த நாளில் வெளியிட இருக்கிறார்களாம்.

மேலும் ஜனவரியில் படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த டபுள் தமாக்கா செய்தி நிச்சயம் இளைய தளபதி ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் விருந்துதான்.

மீண்டும் நடிக்கவரும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா

மீண்டும் நடிக்கவரும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh menakaதனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது விஜய்யுடன் நடித்து வருகிறார்.

விரைவில் சூர்யாவுடன நடிக்கவுள்ளார்.

இவரைப்போன்று இவரது அம்மாவும் முன்னாள் நடிகையுமான மேனகா, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன்லால் ஆகிய முன்னணி நடிகர்களுடன்

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிக்கிறார்.

நடிகர் பிரதாப் போத்தனுடன் இமா (IMA) என்ற குறும்படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை லிஜீ கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

 

keerthysuresh mom _menaga short film IMA

 

ஜி.வி.பிரகாஷே போதும்…; அட்லி எடுக்கும் அதிரடி முடிவு

ஜி.வி.பிரகாஷே போதும்…; அட்லி எடுக்கும் அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash atleeபரதன் இயக்கும் பைரவா படத்தை முடித்துவிட்டு, அட்லி இயக்கவுள்ள படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் 61வது படமான இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கக்கூடும் என செய்திகள் வந்தன.

ஆனால், தற்போது இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷே ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்-அட்லி-ஜிவி.பி. கூட்டணியின் ‘தெறி’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எனவே இப்படத்திற்கும் அதுபோன்ற வெற்றியை எதிர்பார்க்கலாம்.

‘அந்தப் படத்தை பார்த்து கோபப்படுங்கள்..’ – ‘கபாலி’ ரஞ்சித் கன்டீசன்

‘அந்தப் படத்தை பார்த்து கோபப்படுங்கள்..’ – ‘கபாலி’ ரஞ்சித் கன்டீசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali ranjithநீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பில் கபாலி புகழ் இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான “ Dr. ஷூ மேக்கர்“ மற்றும் “Beware of Castes – Mirchipur” ஆகிய இரண்டு ஆவண படங்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தனர்களாக இயக்குநர் ராம், இயக்குநர் பாண்டி ராஜ், இயக்குநர் சுசீந்திரன், எடிட்டர் லெனின், வெங்கி எழுத்தாளர் எஸ். வியார், வழக்கறிஞர் ரமேஷ் ராஜன், Dr. ஷூ மேக்கர் ஆவண படத்தின் நாயகன் இம்மானுவேல், நடிகர் ஜான் விஜய், தீண்டாமை ஒழிப்பு கழக தலைவர் சாமுவேல், மிர்ச்சிபூரில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட சத்யவான் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் Dr. ஷூ மேக்கரின் முதன்மை கதாபாத்திரமான திரு.இம்மானுவேல் (Dr. ஷூ மேக்கர் ஆவணப்படம் இவரை பற்றியது தான்) பேசும் போது…

என்னை பற்றிய இந்த ஆவண படத்தை பார்க்கும் போது எனக்கு அழுகை தான் வந்தது. இவ்வளவு மக்கள் அதை பார்த்து எனக்கு அங்கீகாரம் கொடுக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியபடியே கண் கலங்கினார்.

உடனே இயக்குநர் பா.ரஞ்சித் அவரிடம் “ நீங்கள் செய்து கொண்டு இருக்கும் காரியம் மிகப்பெரியது, உங்களுக்கு நாங்கள் தான் கடமைபட்டுள்ளோம் என்றார்.

kabali ranjith neelam productions stills

இதை தொடர்ந்து இயக்குநர் ராம் பேசும் போது…

தமிழில் இதை போன்ற ஆவண படங்கள் வருவது மிகவும் அரிதான ஒன்றாகும். இதில் Dr. ஷூ மேக்கர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த ஷூ மேக்கர் ஆவண படத்தை நான் உலக தரத்தில் உருவாகி உள்ள மிக சிறந்த ஆவண படங்களில் ஒன்று என்று கூறுவேன். Beware of Castes – Mirchipur ஆவண திரைப்படம் என்னை மிகவும் பாதித்தது.

இதை போன்ற கருத்துள்ள குறும்படங்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் எடுப்பது மிகவும் கடினம், ஆனால் ஆவண படம் என்று வரும் போது அதில் நாம் இதை போன்ற புரட்சிகரமான கருத்துகளை பேசலாம்.

இந்தியாவின் முக்கியமான ஆவண பட இயக்குநர்களுக்கு சவாலாக இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஜெய் குமார், அதை எப்போதும் தன்னுடைய திரைப்படங்களின் மூலம் புரட்சி செய்து வரும் இயக்குநர் பா.ராஞ்சித் தயாரித்துள்ளார்.அவருக்கு வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் இப்போது உள்ள காலகட்டத்தில் இதை போன்ற ஆவண படங்களை திரையரங்கில் திரையிடுவது கடினமான ஒன்று.

இன்றைய காலகட்டத்தில் எம்மாதிரயான படங்கள் பி மற்றும் சி சென்டர்களில் தரலோக்கல் ஹிட் ஆகிறது என்பதும், அவை எந்த ஜாதியை சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் என்றும் நமக்கு தெரியும் என்றார் இயக்குநர் ராம்.
kabali ranjith neelam productions

இயக்குநர் பாண்டி ராஜ் பேசும்போது…

இப்போது திரையிடப்பட்ட Dr. ஷூ மேக்கர் மற்றும், Beware of Castes – Mirchipur ஆகிய இரண்டு திரைப்படங்களும் என்னை வியக்க வைத்தது அதே போல் என்னை மிகவும் பாதித்தது.

மிர்சிபுரில் நடந்த சம்பவம் போல் இனி ஒரு சம்பவம் நடைபெற கூடாது அவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும்.

நான் மெரினா திரைப்படம் இயக்கும் போது நான் மீனவர்களை பற்றி ஒரு ஆவண திரைப்படம் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டேன்.

அதன் பின் கதகளி திரைப்படத்தின் படபிடிப்பு கடலூரில் வைத்து நடைபெற்ற போது அங்கு இருந்த மீனவர்களை மையமாக கொண்டு இடைவேளை கிடைக்கும் போது ஆவண படம் இயக்கினேன்.

இப்போது இந்த இரண்டு ஆவண படங்களை பார்க்கும் போது, இவை இரண்டும் எனக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

நிச்சயம் இதை போன்ற மிகச்சிறந்த படைப்புகள் வெளிவர வேண்டும். நானும் அதற்கான முயற்ச்சியில் ஈடுபடுவேன்.

குறும்படம், ஆவண படம் ஆகியவற்றிக்கான ஒரு சரியான தளத்தை உருவாக்க நானும் முயற்ச்சியில் இருக்கிறேன். என்றார்.

kabali ranjith neelam productions launch stills

நடிகர் ஜான்விஜய் பேசும்போது…

மகிழ்ச்சி! இயக்குநர் பா.ரஞ்சித் என்னுடைய தம்பி. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருக்காக இங்கு வந்தேன்.
“இது வரை சிகப்பு தான் புரட்சி, இனி நீலமும் புரட்சி “ என்று பேசினார்.

இறுதியாக பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அதன் பின்னர் ரஞ்சித் பேசியதாவது…

“இங்கு வந்திருந்த அனைவரும் இப்படத்தை பார்த்து இவர்களுக்காக பாவப்பட்டீர்கள் என்றால் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று அர்த்தம். அதற்கு மாறாக கோபப்படுங்கள்” என்றார்.

More Articles
Follows