தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில தினங்களாக ரஜினி உடல்நிலை குறித்த வதந்தி பரவியது.
எனவே, இதனையடுத்து, ரஜினி ஆரோக்கியமாக இருக்கிறார் என அவரது குடும்பத்தார் அறிக்கை அளித்தனர்.
இந்நிலையில், தலைவர் ரஜினிக்காகவும் விரைவில் வெளியாகவுள்ள கபாலி மாபெரும் வெற்றி பெற வேண்டியும் பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.
வேலூர் மாவட்டம், சோளிங்கர் நகரில் உள்ள அருள்மிகு சோழபுரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு யாகமும், கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.
இதில் ரசிகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மேலும் 2000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை சோளிங்கர் என் ரவி செய்திருந்தார்.