ரஜினியின் அடுத்த படத் தலைப்பை தனுஷ் வெளியிட்டார்

ரஜினியின் அடுத்த படத் தலைப்பை தனுஷ் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kala karikalanபா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164வது படத்திற்கு “காலா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கரிகாலன் என்ற பெயரை சுருக்கி காலா என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்த தலைப்பை நடிகரும், தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டார்.

கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவு செய்த முரளி ஆகியோர் இப்படத்திற்கு அந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.

ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

சண்டைப் பயிற்சிக்கு திலீப் சுப்ராயன்

பாடல்களுக்கு கபிலன் உமாதேவி ஆகியோரும், நடனத்திற்கு சாண்டி ராகேஷ் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் தொடர்பாளராக ரியாஸ் கே அஹ்மது ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Rajini dhanush Ranjith combo movie titled Kaala Karikalan

kaala rajini

கேரளாவிலும் களை கட்டும் விஜய்யின் பர்த்டே ஸ்பெஷல்

கேரளாவிலும் களை கட்டும் விஜய்யின் பர்த்டே ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay artsஅடுத்த மாதம் ஜீன் 22ஆம் தேதி இளைய தளபதி விஜய் தன் பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்கள் சிறப்பு காட்சிகளாக அன்றைய தினத்தில் திரையிடப்பட உள்ளன.

தமிழகத்தைப் போன்றே கேரளாவிலும் விஜய்க்கு மாஸ் இருப்பதால், அங்கும் விஜய் படங்களை திரையிட ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதன்படி கில்லி, துப்பாக்கி, போக்கிரி, கத்தி போன்ற படங்களை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Kerala Theaters also arranging Special Shows on Vijay Birth day

மாஸ் மெசேஜ் சொல்லும் அஜித்; ‘விவேகம்’ சீக்ரெட்டை உடைத்த காஜல்

மாஸ் மெசேஜ் சொல்லும் அஜித்; ‘விவேகம்’ சீக்ரெட்டை உடைத்த காஜல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Kajal Agarwalவேதாளம் படத்தை தொடர்ந்து அஜித்-சிவா-அனிருத் ஆகியோரது கூட்டணி விவேகம் படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகிறது.

இப்பட டீசர் அண்மையில் வெளியாகி, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடையே எகிற வைத்துள்ளது.

இப்படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடிக்க, காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தன் சமீபத்திய பேட்டியில் காஜல் அகர்வால், படம் பற்றிய ஒரு சீக்ரெட்டை உடைத்துள்ளார். அவர் கூறியதாவது…

படத்தில் ராம்போ ஸ்டைல்ல ஒரு கவுண்டர் அட்டாக் பைட் சீன் இருக்கு. நிச்சயம் இதில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும்.

முக்கியமா படத்துல நாட்டுக்கு தேவையான ஒரு மாஸ் மெசேஜ் இருக்கு” என்று தெரிவித்துள்ளார்.

Vivegam movie has social message says Kajal Agarwal

ஜீன் 25ஆம் தேதி ரஜினி படத்தலைப்பை அறிவிக்கிறார் தனுஷ்

ஜீன் 25ஆம் தேதி ரஜினி படத்தலைப்பை அறிவிக்கிறார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Dhanush Thalaivar 161ஒருபக்கம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சு.

மறுபக்கம் ரஜினியின் அடுத்த படம் என தமிழக அரசியல் உலகமும், திரையுலகமும் பரபரப்பாக சூப்பர் ஸ்டாரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறது.

2.0 படத்தை முடித்து விட்டு, பா. ரஞ்சித் இயக்க, தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இதன் தலைப்பை ஜீன் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.

இப்படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டுள்ளது என சொல்லப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஹீமா குரோஷிமா நாயகியாக நடிக்க இதன் சூட்டிங் மே 28ஆம் தேதி தொடங்குகிறது.

Dhanush‏Verified account @dhanushkraja
Wunderbar films presents.. superstar Rajinikanth’s “thalaivar 161” title will be revealed tom morning 10 am .. #cantgetbiggerthanthis

On June 25th Thalaivar 161 title will be revealed by Dhanush

thalaivar 161

சீனுராமசாமி-சசிகுமார் கூட்டணியில் புதிய படம்

சீனுராமசாமி-சசிகுமார் கூட்டணியில் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seenu Ramasamy and Sasi Kumar‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் மூன்று தேசிய விருதுகளை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தார் இயக்குனர் சீனுராமசாமி.

இவர் அண்மையில் இயக்கி வெளியான தர்மதுரை படமும் ரசிகர்களிடையே மாபெரும் ஆதரவைப் பெற்றது.

இந்நிலையில் சீனுராமசாமி இயக்கவுள்ள படம் ஒன்றில் சசிகுமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகவலை சீனுராமசாமியும் உறுதிசெய்துள்ளார்.

விரைவில் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கலாம்.

சந்திப்பின் போது அவர்கள் எடுத்த படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1000 கோடி பட்ஜெட்டில் கமல்-மோகன்லால்-அமிதாப்-நாகார்ஜூன்

1000 கோடி பட்ஜெட்டில் கமல்-மோகன்லால்-அமிதாப்-நாகார்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Mohan Lal Amitabh Nagarjunaபாகுபலி படத்தை தொடர்ந்து பல சரித்திர படங்கள் இந்தியாவில் உருவாக உள்ளதை பார்த்தோம்.

இதில் பிரபல மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர் அவர்கள் மகாபாரத இதிகாசத்தின் முக்கிய கேரக்டரான ‘பீமன்’ கேரக்டரை தழுவி ஒரு படம் உருவாகிறது.

இப்படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடியாகும்.

இந்த படம் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மொழிகளிலும் தயாராகும் எனவும் கூறப்படுகிறது.

இதில் மகாபாரதம் படத்தில் பீமன் கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இவருடன் கமல்ஹாசன், அமிதாப் மற்றும் நாகார்ஜீன் ஆகியோர் இணைய உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

More Articles
Follows