தனுஷ்-ரஞ்சித்துக்கு காலா கற்றுக் கொடுத்த பாடம்; ரஜினி ரசிகர்கள் கருத்து

Producer Dhanush and Director Ranjith must learn from Kaalaரஜினிகாந்த் நடித்த காலா படம் வெளியாகி இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது.

படத்திற்கு முதல் நாளில் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தாலும், போக போக ரஞ்சித்தின் தாக்கமே அதிகமாக இருந்தது என புகார்கள் வந்தன.

தன் சமூகம் சார்ந்த கருத்துக்களை இயக்குனர் ரஞ்சித் அதிகபட்சமாக திணித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதனால் காலாவின் வசூல் கபாலியை கூட தொடவில்லை என சொல்லப்படுகிறது.

ரஜினியின் படங்களே அவரது முந்தைய படங்களுக்கு சவாலாக அமையும். ஆனால் முதன்முறையாக இது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் தமிழ்நாடு வசூல் 47 கோடி, ஆந்திரா, தெலுங்கானா 12 கோடி எனவும், கர்நாடகா 9 கோடி எனவும், கேரளா 5, வட இந்தியா 4 கோடி, அமெரிக்கா 11 கோடி, சில முக்கிய நாடுகள் 8 கோடி, இதர வெளிநாடுகள் 6 கோடி எனவும் தகவல்கள் வந்துள்ளன.

ஆக மொத்தம் இதுவரை ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று ரம்ஜானை முன்னிட்டு கோலி சோடா 2 படம் வெளியாவதால் சில திரையரங்குகளில் காலா படம் திரையிடப்படவில்லை.

ரஜினி படங்கள் ரிலீஸ் ஆனால் அதற்கு அடுத்த வாரம் நிச்சயம் பெரிய படங்கள் வெளியாகாது. ஏனென்றால் ரஜினி படங்களே தொடர்ந்து திரையிடப்பட்டு கொண்டிருக்கும்.

ஆனால் இந்த முறை இதுவும் தவறாகிவிட்டது.

காலா பட இசை வெளியீட்டின் போது கபாலி படம் ரஞ்சித்தின் படம். காலா படம் என் படம் என ரஜினியே பேசினார்.

ரஞ்சித் படம் என்றபோதே அப்படம் வசூல் சாதனை புரிந்தது. அதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரின் விளம்பர யுக்திதான்.

ஆனால் காலா விஷயத்தில் புரோமோசன் பணிகளில் தயாரிப்பாளர் தனுஷ் கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸ் தியேட்டரில் கபாலி பட பேனர் அப்பட ரிலீஸின் போது பல மாதங்களாக வைக்கப்பட்டது. (பார்க்க படம்)

ஆனால் காலா ரிலீசின் போது பெரிய பேனரை கூட தனுஷ் வைக்கவில்லை.

மேலும் விமானம், சாக்லேட், டிவி, ரேடியோ என அனைத்திலும் கபாலி மயம்தான்.

மேலும் கபாலி படத்திற்கு பிரஸ் மீட் வைக்கப்பட்டது. ஆனால் காலா விஷயத்தில் அதுவும் வைக்கவில்லை.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் அப்பட தயாரிப்பாளருக்கு முதல் படம். அதற்கே ஒரு பெரிய பேனரை வைத்திருந்தார்.

தன் கருத்தை மட்டுமே திணிக்காமல் மாஸ் நடிகரை வைத்து படத்தை இயக்கும்போது அவரின் ரசிகர்களையும் மனதில் வைத்து படத்தை இயக்க வேண்டும் என ரஞ்சித் கற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினி ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

எந்த படத்திலும் ரஜினி இறப்பதாக காட்சிகள் இருக்காது. ஆனால் கபாலி, காலா என இரண்டிலும் ரஜினி இறக்கும் காட்சிகளை வைத்து க்ளைமாக்ஸில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார் ரஞ்சித்.

காலா படத்தை பார்த்த அனைவருமே கபாலி படத்தை விட காலா நன்றாக இருப்பதாகவே கூறினார்கள்.

அப்படியிருக்கையில் காலாவிற்கு இன்னும் புரோமோசனை சரியாக செய்திருந்தால் காலாவும் இன்னும் வசூல் வேட்டையாடி இருக்கும்.

எனவே ஒரு தயாரிப்பாளராக தனுஷ் கலைப்புலி தாணுவிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளவேண்டும் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆக, ரஜினி என்ற மந்திரத்தை ரஞ்சித்தும் தனுஷும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே பொதுவான கருத்தாக பார்க்கப்படுகிறது.

Producer Dhanush and Director Ranjith must learn from Kaala

Overall Rating : Not available

Latest Post