மீடியா பாராட்டு; ராஜ்கிரண் ஆசி… மகிழ்ச்சியில் ‘பவர் பாண்டி’ தனுஷ்

Dhanush Rajkiranநடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் பன்முகங்கள் காட்டி வெற்றி பவனி வருகிறார் தனுஷ்.

தற்போது ஒரு இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் இயக்கி தயாரித்து நடித்துள்ள பவர் பாண்டி படம் (ப. பாண்டி) படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி சற்றுமுன் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.
இதில் சென்டிமெண்ட், கமர்ஷியல், குடும்பம், காமெடி என அனைத்தையும் சரியான அளவில் கலந்து கொடுத்துள்ளார் தனுஷ்.

இதன் க்ளைமாக்ஸ் காட்சி முடியும் தருவாயில் அனைவரும் கைத்தட்டி ரசித்தனர்.

மேலும் சிறப்புக் காட்சிக்கு வந்திருந்த தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, ஷான் ரோல்டன், வேல்ராஜ் ஆகியோரின் பணியை அனைவரும் பாராட்டி சென்றனர்.

Press Media prasises Dhanush Power Paandi

Overall Rating : Not available

Latest Post