சிவகார்த்திகேயன் படத்திற்கு பலம் சேர்க்கும் அடுத்த பிரபலம்

சிவகார்த்திகேயன் படத்திற்கு பலம் சேர்க்கும் அடுத்த பிரபலம்

sivakarthikeyan policeசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கிறார்.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்ற செய்தி வந்த உடனே படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்துவிட்டதாக செய்திகள் வந்தன.

அதனையடுத்து, பஹத் பாசில், ஸ்னேகா, சதீஷ் உள்ளிட்ட பலரும் இணைந்ததால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தற்போது முக்கிய கேரக்டரில் நடிக்க பிரகாஷ் ராஜீம் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இன்னும் எத்தனை பிரபல நட்சத்திரங்கள் இதில் இணைய போகிறதோ என கோலிவுட் காத்திருக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மரணமடைந்த ஆட்டோ டிரைவர் மகளின் கல்வி செலவை ஏற்றார் விஷால்

மரணமடைந்த ஆட்டோ டிரைவர் மகளின் கல்வி செலவை ஏற்றார் விஷால்

vishal help devi trustபிரபல நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால், தன் தேவி அறக்கட்டளை சார்பில் சமூக சேவைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் 13 ஆட்டோக்கள் சேதம் அடைந்தன.

இதில் ஆட்டோக்களில் உறங்கி கொண்டிருந்த டிரைவர்கள் நாலாபுறமும் தூக்கிவீசப்பட்டனர்.

இதில் திருத்தணி தாலுக்காவைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 29) பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்செய்தியை அறிந்த விஷால் ஆறுமுகத்தின் மகள் மனீஷா (வயது-7) வின் கல்வி செலவை தனது தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்வதாக கூறி சமாதானம் செய்தார்.

‘சௌந்தர்யாவுக்கு அட்வைஸ்; கெட்டது செய்ய வேண்டாம் ரஜினி’… இது ஜல்லிக்கட்டு சர்ச்சை

‘சௌந்தர்யாவுக்கு அட்வைஸ்; கெட்டது செய்ய வேண்டாம் ரஜினி’… இது ஜல்லிக்கட்டு சர்ச்சை

rajini soundaryaஇந்திய விலங்குகள் நல வாரியத்தின் பிராண்ட் அம்பாசிடராக சௌந்தர்யா ரஜினி தேர்ந்தெடுக்கபட்டார் என்பதை நாம் முன்பே தெரிவித்திருந்தோம்.

மேலும் அவர் நியமிக்கப்பட்டத்தற்கான காரணத்தை நல வாரியமே தெளிவுப்படுத்தி இருந்தது.

https://www.filmistreet.com/cinema-news/animal-welfare-board-clarifies-role-of-soundarya-rajini/

இந்நிலையில் தன் மகளுக்கு அறிவுரை கூறி அவர் அப்பதவியிலிருந்து விலக சொல்ல வேண்டும் என தமிழர் வீர விளையாட்டு மீட்புக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது…

“இந்திய விலங்குகள் நல வாரியத்தின் பிராண்ட் அம்பாசிடராக சௌந்தர்யா நியமிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அவரது தந்தை ரஜினி ஒரு சராசரி மனிதரல்ல; இந்தியளவில் புகழ்பெற்ற மனிதர். தமிழகத்தின் முக்கிய அடையாளம்.

அவரது மகள் சௌந்தர்யா பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் உள்ளது.

இந்திய விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கட்டுக்கு எதிரான ஒரு அமைப்பு. ரஜினி பிரம்மாண்ட புகழ் அடைந்ததற்கு முக்கிய காரணமே தமிழர்கள்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழர்கள் எத்தனை துயரத்திற்கு ஆளாகினர் என்பதை ரஜினி நன்கு அறிந்தவர்.

அப்படி இருந்தும் தன் மகளை அந்த வாரியத்தில் துாதர் பொறுப்பை ஏற்று கொள்ளச் செய்தது தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்.

இதன்மூலம் தமிழகத்தின் உணர்வை கொச்சைப்படுத்துகிறது வாரியம். அதற்கு துணைபோயிருக்கிறார் ரஜினி.

rajeshjallikatturuightசென்னை வெள்ளத்தில் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை ரஜினி.

காவிரி பிரச்னையிலும் மவுனம் காக்கிறார். ஆனால் சினிமாவில் தமிழர்கள் மேல் அக்கறை கொண்டவராக நடிக்கிறார்.

தமிழர்களுக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ரஜினி கெட்டது செய்யாமல் இருந்தாலே போதும்.

எனவே முதற்கட்டமாக ரஜினியை சந்தித்து தன் மகளை பதவி விலகும்படி அறிவுறுத்த மனு அளிக்க இருக்கிறோம்.

அவர் செய்யவில்லை என்றால் போராட்டங்களை நடத்த உள்ளோம். அதற்குள் தன் மகள் சௌந்தர்யாவை துாதர் பொறுப்பிலிருந்து ரஜினிகாந்த் விலக சொல்வார் என நம்புகிறோம்”

இவ்வாறு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய்-அட்லி கூட்டணியில் இணைந்த பாகுபலி கதாசிரியர்

விஜய்-அட்லி கூட்டணியில் இணைந்த பாகுபலி கதாசிரியர்

vijay atleeபைரவா படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கவுள்ள படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகளை பார்த்தோம்.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இக்கூட்டணியில் விஜய்யுடன் கருணாகரன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதையை பிரபல கதாசிரியரான பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் எழுத உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவர் நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜமௌலியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா படத்திற்கு கிடைத்த மற்றொரு பெருமை!

சூர்யா படத்திற்கு கிடைத்த மற்றொரு பெருமை!

suriya 24விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேன்ன் உள்ளிட்டோர் நடித்த படம் 24.

வழக்கமான கதையாக இல்லாமல் டைம் மிஷின் கதையை கமர்ஷியல் கலந்து கொடுத்திருந்தார் இயக்குனர். இசை ஏ.ஆர். ரஹ்மான்.

இதில் வில்லனாக நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றார் சூர்யா.

சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம் ஆந்திராவிலும் சக்கை போடு போட்டு ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது.

இந்நிலையில், தற்போது 3ஆவது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் இப்படம் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இத்திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவுள்ள முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்காக விஜய்யாக மாறிய விக்ரம்

ரசிகர்களுக்காக விஜய்யாக மாறிய விக்ரம்

vikram vijayஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த இருமுகன் அண்மையில் வெளியானது.

இதுவரை உலகம் முழுவதும் ரூ. 85 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கேரளா சென்று இருந்தார் விக்ரம்.

அப்போது விழாவில் கலந்துக் கொண்டர்வர்கள் எப்போது நேரடி மலையாள படத்தில் நடிப்பீர்கள்? என கேட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் போது, இதை நான் விஜய் ஸ்டைலில் சொல்கிறேன், என தெரிவித்துவிட்டு “ஐயம் வெயிட்டிங்” என்று கூறினார்.

More Articles
Follows