இதயங்களை வெல்லும் ரஜினி; *பேட்ட* பராக் குறித்து கார்த்திக் சுப்பராஜ்

Petta movie will win everyone heart says Karthik Subbarajரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படம் நாளை ஜனவரி 10-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ரஜினி படங்களுக்கு உலகளவில் மார்க்கெட் இருப்பதால் தெலுங்கு பதிப்பிலும் நாளையே இப்படம் வெளியாகிறது.

எனவே தெலுங்கு பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்த போது பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது…

‘பேட்ட’ எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே தலைவரின் ரசிகர்கள்.

தலைவர் பாணியில் படத்தில் நிறைய ஆக்‌‌ஷன் இருக்கிறது. இப்படத்தையும் பண்டிகை போல கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன்.

சங்கராந்தி பண்டிகைக்காக இப்படம் வருவதால் அந்த பண்டிகை உற்சாகம் இதிலும் இருக்கும்.

அதே நாளில் இன்னும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகிறது. அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

ரசிகர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்பதை நம்புபவன் நான்.

ரஜினியின் பேட்ட படம் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் என நான் நம்புகிறேன்’ இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் பேசினார்.

Petta movie will win everyone heart says Karthik Subbaraj

Overall Rating : Not available

Related News

பொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும்…
...Read More
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…
...Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த…
...Read More

Latest Post