தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த மாதம் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் இந்தியாவின் முதல் தந்திரகலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தற்போது 39வது சென்னை புத்தகக் காட்சியில் இந்தியாவின் 2வது தந்திரகலை அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.
இதனை ஒளிப்பதிவாளர் P.C. ஸ்ரீராம் இன்று துவக்கி வைத்து பேசியதாவது…
“ஸ்ரீதர் எனக்கு நீண்ட கால நண்பர். அவருடைய அனைத்து பயணத்திலும், நான் இருந்திருக்கிறேன்.
தந்திரகலை அருங்காட்சியகம் சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது. அதனை இந்தியாவுக்கு என் நண்பர் ஸ்ரீதர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதில் உள்ள ஓவியங்களுடன் நாம் செல்ஃபி எடுத்து கொள்வது போன்று அழகாக வடிவமைத்துள்ளார். இது அனைவரையும் கவரும்“ என்றார்
இந்த அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஓவியங்கள் சில…
- காந்தியடிகள் ராட்டினத்தை கொடுப்பார்.
- திருவள்ளுவர் திருக்குறள் அறிச்சுவடியை கொடுப்பார்
- அன்னை தெரசவிடம் ஆசி பெறலாம்.
- பாரதியாருடன் செல்ஃபி எடுக்கலாம்.
- அப்துல்கலாம் பூந்தொட்டி கொடுப்பார்.
- சேகுவேராவுடன் செல்ஃபி எடுக்கலாம்.
இந்த தந்திரகலை அருங்காட்சியகம் இன்று 01.06.2016 முதல் 13.06.2016 வரை தீவுத்திடலில் அமைந்திருக்கும்.
மூன்றாவது தந்திரகலை அருங்காட்சியகம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும் இன்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது.