காந்தி-காமராஜர் கனவை நனவாக்கும் ரஜினி..; தமிழருவி மணியன் அறிக்கை

காந்தி-காமராஜர் கனவை நனவாக்கும் ரஜினி..; தமிழருவி மணியன் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamilaruvi manian Rajiniநடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்கவுள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அவர் களம் காணவுள்ளார்.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் அவர் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு காரணமாக கட்சி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே நவம்பர் மாதம் ரஜினி கட்சி தொடங்குவார் என தெரிகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் ஆலோசர்களில் ஒருவரான தமிழருவி மணியன் தன் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில்…

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன்னிறுத்தி ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை விடுவிக்க நாம் ரஜினிகாந்த் அவர்களால் மட்டுமே அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற எதார்த்த நிலையை பூரணமாக உணர்ந்து அவர் முதல்வராக வேண்டும் என்ற ஒரே முடிவுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.

காந்தி பிறந்தநாளில் காமராஜர் மறைந்த நாளில் இந்த இருவருடைய கனவை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினி அவர்களின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு தமிழருவி மணியன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Only Rajini will give good service to the public says Tamilaruvi Manian

தல பட தயாரிப்பாளர் இயக்குனரானார்..; சூரி-அருள்நிதி ஆதரவு

தல பட தயாரிப்பாளர் இயக்குனரானார்..; சூரி-அருள்நிதி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dayanidhi alagiriவெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் அண்ட் அர்ஜீன் இணைந்து நடித்த படம் ’மங்காத்தா’.

இந்த படத்தை தயாரித்தவர் தயாநிதி அழகிரி ஆவார்.

இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பேரன். அதாவது முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன்.

இந்த நிலையில் தயாநிதி அழகிரி தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் இயக்கிய குறும்படத்திற்கு ’மாஸ்க்’ என தலைப்பு வைத்துள்ளார்.

தயாநிதியின் சகோதரரும் நடிகருமான அருள்நிதி அந்த பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

அதுபோல் நடிகர் சூரியும் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு… மாஸ்க்குக்கு உள்ள மாஸான விசயம் மறைஞ்சு இருக்குன்னு மட்டும் தெரியுது. இயக்குனர் அவதாரம் எடுத்துருக்கும் பாசத்துக்குரிய தயாநிதி அழகிரி ப்ரதருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தயாநிதிக்கு அனிருத், ஹரிஷ் கல்யாண், சாந்தனு, நிதின் சத்யா உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

mask short film

Ajith film producer turns a director

அஜித் படத்திற்கு எக்ஸ்ட்ரா ‘வலிமை’ சேர்க்கும் ஹாலிவுட் பிரபலம்

அஜித் படத்திற்கு எக்ஸ்ட்ரா ‘வலிமை’ சேர்க்கும் ஹாலிவுட் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai ajithதல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’வலிமை’.

அஜீத்துக்கு ஜோடியாக ஹூமோ குரேஷி நடிக்க படத்தின் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் இசையமைக்க நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

கொரோனா பிரச்சினைக்கு பிறகு சில நாட்களுக்கு முன் இப்பட சூட்டிங் தொடங்கியது. கார்த்திகேயா நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் வினோத்.

அஜித் விரைவில் சூட்டிங்கில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் ஸ்டண்ட் இயக்குனராக இணைந்திருக்கிறாராம்.

ஏற்கெனவே படத்தல் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hollywood stunt director joins in Valimai shooting

தியேட்டர் திறந்தால் வரும் ஆபத்து..; அலர்ட்டான கேரளா அதிரடி முடிவு

தியேட்டர் திறந்தால் வரும் ஆபத்து..; அலர்ட்டான கேரளா அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theatre opening in keralaகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடெங்கிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

இதனால் சினிமா தியேட்டர்கள் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டது.

தற்போதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அதன்படி அக்டோபர் 15 முதல் மாநில அரசுகள் விரும்பினார் சினிமா தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்.. மாஸ்க் அணிதல்.. கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்டவைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் கேரள தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

‘கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை.

ஜி.எஸ்.டி., முனிசிபல் வரி, போன்ற வரி விதிப்புகளுடன் 50 சதவீத பார்வையாளர்களை கொண்டு தியேட்டர்களை லாபகரமாக இயக்க முடியாது.

மேலும் தற்போதைய சூழலில் பார்வையாளர் யாருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் தியேட்டரை மூட வேண்டிய நிலை ஏற்படும்.

வரி விதிப்புகளை அரசு நீக்கினால் மட்டுமே சினிமா தியேட்டர்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்‘.

இவ்வாறு கேரள தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் என்ன நடக்குமோ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஏற்கெனவே தியேட்டர்கள் திறக்காத காரணத்தினால் ஓடிடி தளத்தில் டாப் ஹீரோக்களின் தமிழ் படங்கள் ரிலீசாகி வருவது குறிப்பிடத்தக்கது.

No decision in Kerala on opening movie theatres

ஆர்யா பெயரை இணைத்துக் கொண்ட அபர்ணதி..; திருமணமானாலும் இன்னும் மறக்கல போல..

ஆர்யா பெயரை இணைத்துக் கொண்ட அபர்ணதி..; திருமணமானாலும் இன்னும் மறக்கல போல..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya abarnathi photosகலர்ஸ் தமிழ் என்ற டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’.

பெண் தேடும் சுயம்வரம் நிகழ்ச்சிதான் இது. இந்நிகழ்ச்சியின் மூலம் தன் திருமணத்திற்கு பெண் தேடினார் நடிகர் ஆர்யா.

16 பெண்கள் இதில் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு மூன்று பெண்கள் தேர்வாகியிருந்தனர்.

ஆனால் யாரையாவது ஒருவரை மணந்தால் மற்றவர்களது மனது புண்படும் என்று நழுவி இந்த நிகழ்ச்சிக்கு என்ட் கார்டு போட்டார் ஆர்யா.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி என்பவர் ஆர்யா நேசித்தார். இருவருக்கும் ஜோடி பொருத்தம் சூப்பர் என ரசிகர்களே கொண்டாடினர்.

ஆனால் அதன் பின்னர் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஆர்யா.

அபர்ணதிக்கும் பின்னர் சினிமா சான்ஸ் கிடைக்க தொடங்கியது-

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது-

இந்த நிலையில் அபர்ணதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் ஆர்யா பெயரை ‘6 ya’ என்று இணைத்திருக்கிறார். அட பாவமே இன்னுமா ஆர்யாவை காதலிக்கிறார் அபர்ணதி? என ரசிகர்களே கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

Abarnathi insta name shocks Arya

நீங்கள் இழந்ததை நாங்கள் உணரவில்லை..; ஏன் உயிரை இழந்தீர்கள்.?. காந்திக்கு சேரன் கேள்வி

நீங்கள் இழந்ததை நாங்கள் உணரவில்லை..; ஏன் உயிரை இழந்தீர்கள்.?. காந்திக்கு சேரன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cheran Gandhiஇன்று அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாள் நினைவாக காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் காந்திக்கு சில கேள்விகளை கேட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான சேரன்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் காந்தி அய்யா.. எங்களுக்காக நீங்கள் இழந்ததை நாங்கள் இன்னும் உணரவே இல்லை.. நீங்கள் பெருமைப்படும்படி நாங்கள் ஏதும் செய்துவிடவில்லை.. இன்னும் குற்றங்களும் பாலியல் வன்முறைகளும் நடத்தி நாங்கள் அதை நீதி வென்றதென சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் ரத்தக்கறை படிந்த நாட்டில் இன்று துடைக்கமுடியாத ஏகப்பட்ட கறைகள்.. இந்த ஜனங்களுக்காக எதற்கு உயிரை இழந்தீர்கள் என உங்கள் மேல் கேள்வியும் பரிதாபம்தான் வருகிறது… சரி.. உங்கள் கடமையை நீங்கள் செய்தீர்கள்.. எங்கள் கடமையை நாங்கள் மறந்தோம் என்பதே உண்மை.. உம்மைச்சொல்லி குற்றமில்லை..

என நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை குறிப்பிட்டு தன் ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார் சேரன்.

Cheran tweets on Gandhi Jayanthi day

More Articles
Follows