அஜித்தின் பன்ச் டயலாக்கை பஞ்சாக்கிய பவர் ஸ்டார்

அஜித்தின் பன்ச் டயலாக்கை பஞ்சாக்கிய பவர் ஸ்டார்

nithin‘வேதாளம்’ படத்தில் அஜித் பேசும் பவர்புல் வசனம் தான் ‘தெறிக்க விடலாமா’.

சூப்பர்ஹிட்டான இந்த வசனத்தை காமெடிக்காக அப்படியே உல்டா பண்ணி ‘சிரிக்க விடலாமா’ என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது..

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் நிதின் சத்யா, பவர்ஸ்டார் சீனிவாசன் & V.R.விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..

இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார்.

மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி பாடியிருப்பவரும் இவரே.

இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் V.B.காவியன். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ‘ஆயுதபூஜை’ சி.சிவகுமார் மற்றும் ‘உன்னை கொடு என்னை தருவேன்’ கவி காளிதாஸ் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஒளிப்பதிவை K.S.முத்து மனோகரன் மேற்கொள்ள, படத்தொகுப்பை கவனிக்கிறார் S.R.முத்துக்கொடப்பா.

பாடகர்கள்: வேல்முருகன், ஜெயக்குமார்
நடனம்: ரமேஷ் கமல், அக்சயா ஆனந்த்
கலை: ஏ.சி.சேகர்
தயாரிப்பு நிர்வாகி: மனோகரன்

Nithin Sathya and Power star Srinivasan starring Sirikka Vidalaama

 

‘காயமடைந்தவனை போட்டோ எடுப்பவனே…’ கமலின் கவிதையை பார்

‘காயமடைந்தவனை போட்டோ எடுப்பவனே…’ கமலின் கவிதையை பார்

Bharathiyar Kamalகர்நாடக மாநிலத்தில் 18 வயது நிரம்பிய ஒரு இளைஞர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அப்போது அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் அவரை போட்டோ எடுத்து, சிலர் தங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பதிவேற்று கொண்டிருந்தனர்.

இதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்படியாக வேடிக்கை பார்த்தவர்கள் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பே கமல் ஒரு கவிதை எழுதியிருக்கிறாராம்.

அதை தற்போது நினைவு கூர்ந்து, தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த கவிதைய பகிர்ந்துள்ளார்.

அந்த பாடலை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

Kamal Haasan ‏@ikamalhaasan
விபத்தில் சிக்கியவர்க்கு உதவாமல்,வேடிக்கை பார்ப்பவரைச்சாடி வருடங்கட்குமுன் நான் எழுதியது
தெருப்பாடகன்

ஒற்றி ஒற்றி எடுத்தும் சிவப்பாய்
கசிந்தது காயம்
சுற்றி நின்றகூட்டத்தின் நிழலில்
காயம் சரியாய்த் தென்படவில்லை

சற்றே உற்று தெளிவாய்ப் பார்த்ததில் சின்னக்குழிவு பிடரியின் நடுவில்
விட்டுவிட்டு வரும் சிவப்புக்கு நடுவே
தட்டுதட்டாய் துருத்தியதெலும்பு
ரத்தச் சகதியில் சுற்றி நினறவர்

காலணி செய்த ரண ரங்கோலி
போக்கு வரத்துக் கிடைஞ்சலில்லாமல்
ரோட்டின் ஓரம் நகர்த்தினோம் அவனை
பான்ட்டுப் பையில் பர்சும் இல்லை, யார்? எனக் கேட்டால் பதிலும் இல்லை

இரண்டு கட்டையில் காந்தாரத்தில்
ஸ்ருதி பிசகாமல்
கேட்டவைக்கெல்லாம் ஸ்வரமாய் பிடித்தான்
“நிறைய ரத்தம் பிழைப்பது கஷ்டம்”
வேடிக்கை பார்க்கும் பெரியவர் சொன்னார்.

அதைக் கேட்டதுபோல் அவன் பாடிய ஸ்வரத்தை
மாறறிப் பாடினான், கீழ் ஸஜ்ஜமத்தில்.
“கா”வை நிறுத்தி “ஸா” வென்றிசைத்தான்
அடுத்த கேள்வி அனைத்திற்கும் அவன்
“ஸா-கா” என்றான் ஸ்ருதிப் பிழையின்றி
“பாட்டுக் கலைஞன்! கூட்டத்தில் ஒருவர் புதிர் விடுவித்தார்
அதுவும் கேட்டது போல் அவன்
இசைக்கும் ஸ்வரத்தை உடனே இழந்தான்

வெற்றுச் சொல்லாய் ஸா-கா என்றான்
சாவைப் பற்றிய அறிவிப்பென்றார்
ஒதுங்கி நின்ற ஓர் தமிழாசிரியர்
பக்கத்து ஊரில் மருத்துவ வசதி,
பாதி வழியிலே உயிர் பிறிந்ததினால்

காய்கறி லாரியில் ஊரவலம் போனான்
சுற்றி நின்றதால் சுற்றமா என்ன?
அவரவர் வீட்டிற்குப் புறப்பட்டுப் போனோம்
என்றோ வானொலி கீதம் இசைக்கையில்
அல்லது பச்சைக் காய்கறி விற்கும் சந்தையில்

ஸா கா என்றவன் நினைவுகிளம்பும்
ஸா-கா என்று நானும் பாடி அவன்
காந்தாரத்தைக் கொப்பளித்துமிழ்வேன்
குளிக்கும்போது
நினைவிழந்தாலும் என்னைப் போலவன் ஸ்ருதி பிசகாதவன்
அவன் பாடகனா இல்லை பாடத் தெரிந்த வெறும்பாதசாரியா

கமலை தொடர்ந்து விஜய் படைக்கப்போகும் சாதனை

கமலை தொடர்ந்து விஜய் படைக்கப்போகும் சாதனை

Vijayகமல், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் படங்களில் நடிப்புடன் பாடலையும் பாடி வருகிறார்கள்.

இதில் சீனியர் நடிகரான கமல் அவர்கள் இளையராஜா, ஏஆர். ரஹ்மான், தேவா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

இவரை தொடர்ந்து விஜய்யும் இந்த சாதனையை படைக்க உள்ளார்.

இவர் இளையராஜா, தேவா, ஆகியோர்களின் இசையில் பாடிவிட்டார்.

இந்நிலையில் அட்லி இயக்கவுள்ள விஜய் 61 படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Vijay follows Kamalhassan in Songs Singing

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷாலுக்கு கமல் ஆதரவு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷாலுக்கு கமல் ஆதரவு

Kamal and vishal teamபடங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் தான் நடிக்கும் படங்களையும் தயாரித்து வருகிறார் விஷால்.

மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய பதவியில் இருக்கிறார்.

இதனிடையில் சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் விஷால்.

இதுதொடர்பாக கோர்ட்டில் விஷால் வழக்கு தொடர, அதன்படி விஷாலை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சேர்க்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

இந்நிலையில் மார்ச் 5ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட உள்ளார்.

விஷாலை ஆதரித்தும், வேட்பு மனுவில் முன்மொழிந்தும் கமல்ஹாசன் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் அணி உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

Kamalhassan support Vishal for Producer Council election

‘தல’ அஜித்தின் சிக்ஸ்பேக் சீக்ரெட்ஸ்

‘தல’ அஜித்தின் சிக்ஸ்பேக் சீக்ரெட்ஸ்

vivegam ajithஅஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் சிக்ஸ் பேக் வைத்து, கம்பீரமாக காட்சியளித்தார் அஜித்.

இந்த உடல்அமைப்பை பெற கடுமையாக உழைத்திருக்கிறாராம்.

தினமும் அதிகாலை… அதிகாலை என்பதைவிட நள்ளிரவு என்றே கூறலாம்.

3 மணிக்கு எழுந்து, கிட்டதட்ட 5 மணி நேரங்கள் வரை உடற்பயிற்சி செய்வாராம்.

பல்கேரியா சென்றதும் இதை தீவிரமாக ஒர்க்அவுட் செய்து இந்த சிக்ஸ்பேக்கை வரவழைத்து இருக்கிறாராம் தல.

Secrets behind the Six pack of Vivegam Ajith

‘தல தலதான்…’ அஜித் பற்றி குஷ்பூ இப்படி கூற காரணம்?

‘தல தலதான்…’ அஜித் பற்றி குஷ்பூ இப்படி கூற காரணம்?

ajith kushbooஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது.

சினிமா நட்சத்திரங்களும் இதனை புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல அரசியல்வாதியும் நடிகையுமான குஷ்பு தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

‘நான் தான் அப்பவே சொன்னனே, தல தல தான் என்று’ என டுவிட் செய்துள்ளார்.

Hmmmm…naan appave sonnen..Thala na Thala dhaan..my George Clooney is now my Hugh Jackman. .watte transformation..loving it..

— khushbusundar (@khushsundar)

More Articles
Follows