வெண்பா அணுகிருஷ்ணா தீக்‌ஷிகா ஆகிய அழகிகளுடன் ஸ்ரீ ஆடும் ‘ஈடாட்டம்’

வெண்பா அணுகிருஷ்ணா தீக்‌ஷிகா ஆகிய அழகிகளுடன் ஸ்ரீ ஆடும் ‘ஈடாட்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’சின்னா’, விஜயின் ‘தெறி’, கமலின் ‘விக்ரம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ, பல வெற்றி தொலைக்காட்சி தொடர்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல தொடர்கள் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் அறியப்பட்ட நடிகர் ஸ்ரீ ‘ஈடாட்டம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண் கேசவன் தயாரிக்கும் இப்படத்தின் கதை எழுதி ஈசன் இயக்கியிருக்கிறார்.

ஸ்ரீ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வெண்பா, அணுகிருஷ்ணா, தீக்‌ஷிகா ஆகிய மூன்று பேர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ராஜா, விஜய் விசித்திரன், காதல் சுகுமார், பவர் ஸ்டார், பூவிலங்கு மோகன், விஜய் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வறுமையில் வாழும் ஒருவர் பணத்தேவைக்காக தவறான முடிவுகளை எடுக்கிறார். அதனால், அவர் மட்டும் இன்றி அவரை சார்ந்தவர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற மெசஜை காதல், காமெடி, செண்டிமெண்ட் என கமர்ஷியலாக சொல்வது தான் இப்படத்தின் கதை.

யோகி பாபு, நடன இயக்குநர் தினேஷ் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கும் ‘லோக்கல் சரக்கு’ படத்திற்கு இசையமைத்திருக்கும் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘லோக்கல் சரக்கு’ படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை போல், ‘ஈடாட்டம்’ படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கஜபதி வசனம், திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சென் முத்துராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

கலை செந்தில், ராதிகா நடனம் அமைக்க, ஹார்ஸ் சுரேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். வணக்கம் ராஜா தயாரிப்பு மேற்பார்வையாளரா பணியாற்றுகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதோடு, படத்தின் மீதும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர், பாண்டிச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

Actor Sri next film is titled Eedattam

‘நீ நீ போதுமே’… ஹீரோவுடன் நெருக்கமா.? – ‘ஜீவி 2’ பட நாயகி அஸ்வினி விளக்கம்

‘நீ நீ போதுமே’… ஹீரோவுடன் நெருக்கமா.? – ‘ஜீவி 2’ பட நாயகி அஸ்வினி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ல் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ஜீவி. வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்திருந்தார்.

ரோகிணி, ரமா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்தை V.J. கோபிநாத் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஜீவி-2 என்கிற பெயரில் உருவாகி கடந்த ஆக-19ல் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியானது…

அஸ்வினி சந்திரசேகர்

முதல் பாகத்தை போலவே கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல், அடுத்தடுத்த திருப்பங்களுடன் வெளியாகியுள்ள இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் தங்கள் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே கலைஞர்கள், தொழில்நுட்ப குழுவினர் என பலரும் இந்தப்படத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக இந்தப்படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக வெகு இயல்பாக நடித்துள்ள நாயகி அஸ்வினி சந்திரசேகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அஸ்வினி சந்திரசேகர் பெங்களூருவை சேர்ந்தவர். ஆர்க்கிடெக் படித்திருந்தாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்குள் நுழைந்தவர். முறைப்படி கிளாசிக் டான்ஸ் கற்றவர். தமிழில் இவர் நடித்த மெர்லின் என்கிற படம் வெளியாகியுள்ள நிலையில் ஜீவி-2 தவிர, கால் டாக்சி, மரகதக்காடு, டைட்டில், காதல் புதிது ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அஸ்வினி சந்திரசேகர்

மேலும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். சமீபத்தில் கூட மலையாளத்தில் நடிகர் நிவின்பாலியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஜீவி-2 படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அஸ்வினி சந்திரசேகர்.

“ஜீவி திரைப்படம் எனக்கு தமிழில் நல்ல ஒரு என்ட்ரி ஆக அமைந்துவிட்டது. ஆடிஷன் மூலமாகததான் ஜீவி பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் முன் இரண்டு கதாபாத்திரங்கள் இருந்தன. அதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரை தேர்வு செய்தேன்.

ஆனால் அதில் நடிப்பது சவாலாக இருந்தது. இயக்குநர் கொடுத்த ஆலோசனைகளையும், நிஜத்தில் நான் பார்த்த சிலரையும் மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன்.

அஸ்வினி சந்திரசேகர்

ஆனால் இரண்டாம் பாகத்தில் எனக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பழக்கமாகி விட்டது. சொல்லப்போனால் இதில் அந்த கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் செய்து நடித்துள்ளேன்.

முதல் பாகத்தில் எனது போர்ஷன் கொஞ்சம் குறைவு தான். காரணம் கதை பல கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து சுற்றி வந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரம் படம் முழுவதும் வரும் விதமாக கதை அமைந்துள்ளது.
.
முதல் பாகத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என படத்தில் நடித்த சமயத்தில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.. அதிலும் இரண்டாம் பாகம் உருவாகும் என்றெல்லாம் நினைத்தே பார்க்கவில்லை.. எல்லாம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

கோவிட் சமயத்தில் அமேசான் பிரைமில் ஜீவி முதல் பாகத்தை பார்த்து விட்டு சிங்கப்பூர், மலேசியா என பல இடங்களில் இருந்து இருந்து போன் செய்து பேசினார்கள்.

அஸ்வினி சந்திரசேகர்

இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன் என அது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போதெல்லாம் கூட நிறைய பேர் இந்தப்படம் பற்றி ஆவலாக விசாரித்தார்கள்.

முதல் பாகத்தில் பணியாற்றிய அதே டீம் என்பதால் ஒரு குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. ரோகிணி, ரமா, மைம் கோபி, கருணாகரன் என சீனியர் நடிகர்களுடன் இணைந்து நடித்ததில் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான்..

நாயகன் வெற்றி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இந்தப்படத்தில் ‘நீ நீ போதுமே’ என்கிற பாடலில் நாயகனுடன் ரொம்பவே நெருக்கமாக நடித்துள்ளீர்களே என பலர் கேட்கின்றனர்..

அஸ்வினி சந்திரசேகர்

அது கதைக்கு தேவையாக இருந்தது. அதனால் சில விஷயங்களில் துணிச்சலாக இருக்கவேண்டும். தவிர வலிந்து திணித்தது போன்ற காட்சிகள் எதுவுமே எடுக்கப்படவில்லை.

இந்த இரண்டாம் பாகம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை என்பதில் கொஞ்சம் வருத்தம் தான். அதேசமயம் ஒடிடியில் ரிலீஸானாதால் உலகம் முழுக்க அதிக அளவிலான ரசிகர்கள் இந்தப்படத்தை பார்த்திருக்கிறார்கள் என நினைக்கும்போது இன்னொரு பக்கம் மகிழ்சியாகவும் இருக்கிறது” என்று கூறியுள்ளார் அஸ்வினி சந்திரசேகர்.

அஸ்வினி சந்திரசேகர்

Jiivi 2 Ashwini clarifies her role in in that movie

நடிகர் சௌந்தரராஜாவுக்கு Pride of Humanity விருது.; ஏன் தெரியுமா.?

நடிகர் சௌந்தரராஜாவுக்கு Pride of Humanity விருது.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சௌந்தரராஜா விற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது 2022 மலேசியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது.

Take Care International Foundation என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் “Pride of Humanity” விருது வழங்கி கௌரவிக்கிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடு படுத்தி கொள்ளும் நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது.

சௌந்தரராஜா

இந்த நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் ( Deputy Director of police – Malaysia Royal police ) மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாம் அவர்களின் பேரன் கலாம் பவுண்டேஷன் சலீம், ஸ்ரீமதி கேசவன், Take Care International foundation நிறுவனர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

நான் செய்வது சேவை அல்ல கடமை என்று கூறிய நடிகர் சௌந்தரராஜா…

” மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும் இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம் என்று கேட்டுக்கொண்டு இந்த விருதை விவசாயிகளுக்கும் இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிப்பு” செய்வதாக கூறினார்.

சௌந்தரராஜா

Pride of Humanity Award to Actor Soundararaja

தமிழ் சினிமாவின் பொற்காலம் அதுதான்.; பிராணிகளுக்காக சினிமாவை நினைக்கல – அமலா

தமிழ் சினிமாவின் பொற்காலம் அதுதான்.; பிராணிகளுக்காக சினிமாவை நினைக்கல – அமலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகள் பட்டியலில் இன்று வரை கூட தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அமலா. பெரும்பாலான உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர்கள் என எல்லோரோடும் பணியாற்றிவிட்டு திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார்.

அவர் நடித்த படங்கள், தோன்றிய பாடல்களைப் பார்த்தே மனதைத் தேற்றிக் கொண்டனர் 90களின் இளைஞர்கள். அழகு, திறமை என்ன இரண்டும் சேர்ந்த சரியான கலவையோடு இருந்த நடிகை எப்படி மீண்டும் நடிக்காமல் இருக்கலாம் என்று யோசிக்கும்போது தற்போது கணம் திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

”தமிழ்நாட்டுக்கு நான் எப்போது வந்தாலும், விமானத்தில் இருந்து இறங்கியவுடன் எனக்குக் கிடைக்கும் அன்பு, வரவேற்பு, ரசிகர்களின் கண்களில் தெரியும் ஆர்வம் என எல்லாவற்றையும் பார்க்கும்போது என் இல்லத்துக்கே திரும்பியதைப் போல இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் அமலா…

தமிழ்த் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நீங்கள். திடீரென திருமணம் செய்து கொண்டு ஆந்திர மாநிலத்தில் தங்கிவிட்டீர்கள். தமிழ்நாட்டை, தமிழ் சினிமாவில் நீங்கள் பணியாற்றிய நாட்களை நினைத்துப் பார்ப்பீர்களா?

அங்கு சென்ற முதல் வருடம் சென்னையை அதிகமாக மிஸ் செய்தேன். இங்கு கடலோரமாகத்தான் எனது விடுதி, வீடு எல்லாம் இருந்தது. அதனால் ஒரு சி.டியில் கடலின் ஓசையை நாகார்ஜுனா ஒலிக்க விடுவார்.

ஏனென்றால் அந்த ஒலியின் இல்லாமையை நான் அதிகமாக உணர்ந்தேன். பின் புதிய சூழல் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்பட்டுவிட்டது.

நான் இருந்த அந்த 6-7 வருட காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், உயர்ந்த இயக்குநர்கள், இளையராஜாவின் அற்புதமான இசை என நிறைந்திருந்தது.

இளையராஜா இசையமைத்தால் படம் கண்டிப்பாக வெற்றிதான் என்று ஒவ்வொரு இயக்குநரும் சொல்வதைப் பார்த்திருக்கிறேன்.

எனது தற்போதைய வாழ்க்கை பல வேலைகளுக்கு நடுவில், திருப்திகரமாக, ஆர்வத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மீண்டும் சினிமாவைப் பற்றி நினைக்க நேரமில்லை.

எங்களின் பிராணிகள் நலச் சங்கத்தின் 30வது ஆண்டு இது. 5.5 லட்சம் பிராணிகளுக்கு நாங்கள் இதுவரை உதவியிருக்கிறோம். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவைப் பற்றிய எண்ணம் வராது இல்லையா.?

ஆனால் நான் ஒரு தாயான பின்பு, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்தனர். நானும் அது குறித்து யோசித்தேன். ஆனால் குழந்தையை சரியாகக் கவனித்துக் கொள்ள முடியாது என்பதால் நடிக்கவில்லை. இப்போது அதற்கான சூழல் உருவாகியுள்ளது.

உங்களை நடிக்க சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார்களே, கணம் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் எப்படி உங்களை சம்மதிக்க வைத்தார்?

சந்திக்க நேரம் அனுமதி பெற்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். 2-3 மணி நேரம் கதை சொன்னார். அவர் விளக்கிச் சொன்ன விதமும் சரி, கதையும் சரி, அழகாக இருந்தது. அப்படி ஒரு கதையை நீண்ட நாட்கள் கழித்துக் கேட்கிறேன். மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதனால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

வழக்கத்துக்கு மாறான ஒரு படம். மூன்று கதாபாத்திரங்களின் பயணமே இந்தக் கதை. இதில் நாயகன் ஷர்வானந்தின் கதையில் எனக்கும் சிறிய பங்கு இருக்கிறது.

ஷர்வானந்த், ஸ்ரீகார்த்திக், சதீஷ், ரமேஷ் திலக் என இன்றைய தலைமுறைக் கலைஞர்களோட நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

ஷர்வானந்துடன் தான் எனக்கு அதிக காட்சிகள். மிகத் திறமையானவர். கண்ணியமானவர். ஸ்ரீகார்த்திக்கு, சர்வானந்தும் ஒருவரை ஒருவர் முந்தி பணியாற்றினர். என்னையும் கடுமையாக வேலை வாங்கினார். சரியான தருணம் கிடைக்கும் வரை நடிக்க வைத்தார்.

அது உங்களுக்குப் படம் பார்க்கும் போது தெரியும். டப்பிங் கொடுக்கும்போது படம் பார்த்தேன். மிகவும் சுவாரசியமானதாக இருந்தது.

நிறைய நகைச்சுவை நிறைந்திருந்தது. நீங்களும் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். அதே சமயம் சில காட்சிகளில் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். ஏனென்றால் அம்மா நினைவுக்கு வரும்போது யாராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள்.

அம்மா கதாபாத்திரம் வந்த பிறகு ஆழமான உணர்வுகள் கதையில் வரும். அதற்கேற்ற ஆழமான இசையும் உள்ளது.

இந்த 30 வருடங்கள் உங்களை சுற்றி ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. ஒவ்வொரு வருடம் இந்த வளர்ச்சியை, வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். அது சந்தோஷமாகவும் இருக்கிறது. ஏனென்றால் உலகில் எங்கும் செல்லலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

பெண்களுக்கான பல நல்ல   வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அவர்கள் நினைத்த எதையும் சாதிக்க முடிகிறது. நான் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இதைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

என் அம்மா அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அந்த காலத்தில் இந்தியப் பெண்களுக்கு இல்லாத ஒரு சுதந்திரத்தோடு அவர் வாழ்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். சுதந்திரமாக இருத்தல், மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுதல் என்றாலே உடைகளும், வாழும் முறையும் தான் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அதற்கேற்ற சிந்தனை ஓட்டத்தைப் பற்றி யாரும் சொல்வதில்லை. எனக்கு அதுதான் முக்கியமானதாக இருந்தது.

நம் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு தான் கல்லூரிக்குச் சென்று வந்தேன். மேற்கத்திய கலாச்சார உடைகளை அணிவதுதான் சுதந்திரம் என்று நான் நினைக்கவில்லை. சுதந்திரமாக சிந்திப்பதே முக்கியம், மனதின் சுதந்திரமே முக்கியம் என்று நினைத்தேன். இப்போது அதை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. ஏன் சினிமாவில் கூட அத்தனை துறைகளிலும் பெண்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்கும் அளவு கணம் படத்தில் என்ன இருக்கிறது?

இது ஒரு சாகசப் பயணக் கதை என்று சொல்லலாம். 3 சாதாரண மனிதர்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய கதை. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னர் எழுவது எப்படி என்பதை அழகாக, கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் நிறைய சிரிப்பு நிறைந்திருக்கும். ஒரு அதிர்ச்சி இருக்கும். அந்த அதிர்ச்சியின் மூலம் கூட வாழ்க்கையைப் பற்றி புரிய வரும். நமது சிறந்த முயற்சியைத் தர நமக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்துவது எப்படி என்று உணர வைக்கும். அந்த உந்துதலைக் கொடுக்கும். விழுந்தால் எழுந்திரு என்பதைச் சொல்லும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையைத் தரும்.

படத்தின் ட்ரெய்லரில் காலப் பயணத்தைப் பற்றிய காட்சிகள் உள்ளன. உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எந்த காலத்துக்குப் பயணப்படுவீர்கள்?

நான் எதிர்காலத்துக்குத் தான் செல்ல விரும்புகிறேன். பல வேலைகளைச் செய்து வருகிறோம், அது எப்படி நடக்கிறது என்பது தெரிய வேண்டும். நினைத்துப் பாருங்கள், யாராவது எதிர்காலத்தில் இருந்து வந்து, ‘கவலை வேண்டாம், இந்தக் காரியம் சரியாக நடக்கும்’ என்று சொன்னால் எவ்வளவு உற்சாகமாக இருக்கும்?அது கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்.

இவ்வளவு நேர்மறையாக இருப்பதன் ரகசியம் என்ன?

நான் விலங்குகள் நலனுக்காகப் பணியாற்ற ஆரம்பித்தேன். அதில் நிறைய வலிகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அதன் துயரத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் அது சரியான சிந்தனை அல்ல, நல்ல விஷயம் செய்ய திடமாக இருக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்போது 8-9 மாத கர்ப்பமாக இருந்தேன். தியானம் கற்றுக் கொண்டேன். விபாசனா தியான மையம் என்கிற இடத்தில் கற்று, பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.

அப்போது ஆரம்பித்து அடுத்த 20 வருடங்களுக்கும், ஒவ்வொரு வருடமும் 10 நாள் அங்கு நடக்கும் தியான முகாமுக்குச் சென்றுவிடுவேன். அது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கும் எல்லோரையும் போல கோபம் வரும். ஆனால் சீக்கிரமாக சகஜநிலைக்கு வந்துவிடுவேன். என்ன பிரச்சினை என்பதை பகுத்தாய்ந்து தீர்வு என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். யாரையும் காயப்படுத்துவது போன்ற வார்த்தைகள் வெளியே வராது.

இப்போது நாம் பல மொழிகளைச் சேர்ந்த படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். கணம் எப்படி தமிழ் ரசிகர்களையும், தெலுங்கு ரசிகர்களையும் ஒரே நேரத்தில் கவரும் என்று நினைக்கிறீர்கள்?

மனித உணர்ச்சிகள் உலகம் முழுக்க பொதுவானதுதான். எனவே கணம் படத்தில் இருக்கும் உணர்ச்சிகள் இளைஞர்களை சென்றடைந்துவிட்டால் கண்டிப்பாகப் படம் தேசிய அளவில், பான் இந்தியா என்று சொல்லும்படி பிரபலமாகும். கண்டிப்பாக திரையில் தமிழ், தெலுங்கு என அத்தனை ரசிகர்களுக்கும் படம் சென்று சேரும் என்று எனக்குத் தெரியும்.

அம்மா பாசம், இளைஞர்களுக்கான தடைகள், போராட்டங்கள், இதெல்லாம் அனைவருக்கும் பொது. இந்த விஷயங்களை ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.

அம்மா பாடல் குறித்து?

கதையில் அது மிக அழகான, அரிய சூழல். அதற்கேற்ற உணர்ச்சிகரமான பாடல். ஆனால் சோகமான பாடல் கிடையாது, ஆறுதலைத் தான் தரும். அந்தச் சூழலுக்கு இந்தப் பாடல் உயிரைக் கொடுத்திருக்கிறது. ரசிகர்கள் மனதில் நன்றாகப் பதிந்துவிடும்.

தமிழில் டப்பிங் செய்தது எப்படி இருந்தது?

வசனமாகக் கொடுத்தால் நன்றாக தமிழ் பேசிவிடுவேன். ஆனால் சாதரணமாகப் பேசும்போது நான் சிந்திக்கும் ஆங்கிலத்தை ஒவ்வொரு வார்த்தையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் பேசத் தாமதமாகிவிடும். இப்போது பேசும் மொழி தெலுங்கு என்பதால் நிறைய வார்த்தைகள் தெலுங்கு வேறு வருகிறது. ஆனால் டப்பிங் செய்யும்போது ஸ்ரீகார்த்திக்கே ஆச்சரியப்பட்டுப் போனார். முதலில் தமிழில் தான் பேசுவேன். தெலுங்கை விட அது சுலபமாக இருந்தது.

படப்பிடிப்பு அனுபவம் குறித்து..?

ஸ்ரீகார்த்திக் குழுவினர் மிகச் சரியான ஒருங்கிணைப்போடு, திட்டமிடுதலோடு இருந்தனர். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சரியாக வைத்திருந்தனர். அதனால் நடிகர்கள் எங்களுக்கு மிகச் சுலபமாக இருந்தது. இப்படி ஒரு தொழில் முறை நேர்த்தியைப் பாராட்டியாக வேண்டும். இந்த நேர்த்தியால் தான் ட்ரீம் வாரியர் இவர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

தயாரிப்பாளர் பிரபு தினமும் படப்பிடிப்புக்கு வருவார். எந்த வித பதட்டமும் காட்டமாட்டார். அன்று அவரது படங்களின் வெளியீடு இருந்தால் கூட அமைதியாகவே இருப்பார். 7 படங்கள் படப்பிடிப்பில் உள்ளன, 2 வெளியாக உள்ளது என எல்லாவற்றையும் எந்த பரபரப்பும் இல்லாமல் பேசுவார்.

இவ்வாறு அமலா பேட்டி அளித்தார்.

‘கட்சிக்காரன்’ விஜித்துடன் இணைந்தார் ‘காதல் முன்னேற்ற கழகம்’ வில்லன்

‘கட்சிக்காரன்’ விஜித்துடன் இணைந்தார் ‘காதல் முன்னேற்ற கழகம்’ வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் அரசியல் சார்ந்த படங்கள் எத்தனையோ வந்துள்ளன. ஓர் அரசியல் கட்சித் தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் உறவைப் பற்றியும் புது விதத்தில் கூறுகிற படமாக ‘கட்சிக்காரன்’ உருவாகி உள்ளது.

அரசியல் கட்சித் தலைவருக்கும் தொண்டனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை.

ஒரு தலைவன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்படம் அலசுகிறது. முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.

இப்படத்தை பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் இணை தயாரிப்பு புளூஹில்ஸ் புரொடக்ஷன், சார்பில் தயாரித்துள்ளனர்.

இதில் தோனி கபடிகுழு, வேட்டைநாய் , படங்களில் சிறப்பாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விஜித் சரவணன். இப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கியுள்ளார்.

கட்சிக்காரன்

ஸ்வேதா டாரதி கதாநாயகியாக நடிக்க. ”காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில் வில்லனாக நடித்த சிவசேனாதிபதி.

கட்சிக்காரன்
கட்சிக்காரன் படத்தில் அரசியல் தலைவராக சிறப்பாக நடித்து உள்ளார்.. காமெடியனாக AR தெனாலியும் நடித்திருக்கிறார்கள்.

அப்புக்குட்டி, மற்றும் அசுரவதம் படத்தின் இயக்குநர் மருதுபாண்டியன் ஆகிய இருவரும் படத்தில் முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்தும் கேரக்டரில் நடித்துள்ளனர்.

கட்சிக்காரன்

நாசரின் தம்பியும் ஜீவி 2 படத்தில் இன்ஸ்பெக்டராக கலக்கிய ஜவகர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன், வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

‘தோனி கபடிகுழு’ படத்தை இயக்கிய ப. ஐயப்பன் தனது இரண்டாவது படமாக இதை இயக்கி உள்ளார். தயாரிப்பு சரவணன் செல்வராஜ், இணைத் தயாரிப்பு மலர்கொடி முருகன்.

கட்சிக்காரன்

இப்படத்திற்கு ஒளிப்பதிவு- மதன்குமார், எடிட்டிங் . யு கார்த்திகேயன், இசை -ரோஷன் ஜோசப் பின்னணி இசை-C. M. மகேந்திரா, பாடல்கள் நா. ராசா, பாடகர்கள் ஹரிச்சரண்,
வேல்முருகன் என தொழில்நுட்பக் குழு உருவாக்கிப் படத்தை எடுத்து முடித்துள்ளார்கள்.

‘கட்சிக்காரன் ‘ படப்பிடிப்பு உளுந்தூர் பேட்டை, துருகம், கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடந்துள்ளது. சரியாக திட்டமிடப்பட்டு 40 நாட்களில் முழுப்படத்தையும் முடித்துள்ளார்கள்.

கட்சிக்காரன்

விரைவில் ‘கட்சிக்காரன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Vijith Saravanan and Siva Senathipathi joins for Katchikaaran

சறுக்கிய சீயான் விக்ரம் .. கோப்ரா படத்தின் 6 நாள் மொத்த வசூல் இவ்ளோதானா?

சறுக்கிய சீயான் விக்ரம் .. கோப்ரா படத்தின் 6 நாள் மொத்த வசூல் இவ்ளோதானா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியானது .

விக்ரமின் அர்பணிப்பு பெரியளவில் பேசபட்டாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

குறிப்பாக படத்தின் டைமிங் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன.

கோப்ரா விமர்சனம் 3.25/5.; சீறும் சீயான்

இருப்பினும் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என சொல்லப்படுகிறது.

இதனால் ஆறு நாள் முடிவில் உலகம் முழுவதும் சுமார் 49 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More Articles
Follows