‘கபாலி’ டீசரை ‘ரம்’ உடன் கொண்டாடிய விவேக்..!

‘கபாலி’ டீசரை ‘ரம்’ உடன் கொண்டாடிய விவேக்..!

Neruppu Da Song in RUM Movie Setsநடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் ரம்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் ரிஷிகேஷ், ‘அஞ்சாதே’ நரேன், மியா, சஞ்சிதா ஷெட்டி, அம்ஜத், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு கடந்த வியாழன் அன்று (ஜீன் 16) நிறைவு பெற்றது.

எனவே இதனை கொண்டாட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

இத்துடன் கபாலி நெருப்புடா பாடல் டீசரை கொண்டாடலாம் என ஐடியா கொடுத்தாராம் விவேக்.

இதற்கு தயாரிப்பாளர் விஜயராகவேந்திராவும் உடனே சம்மதம் தெரிவிக்க, பெரிய ஸ்க்ரீனை ஏற்பாடு செய்து ‘கபாலி’ டீசர் திரையிடப்பட்டதாம்.

இதன்படி ‘கபாலி’ டீசருக்கு வரவேற்புக்கு கொடுத்து, கொண்டாடியுள்ளனர் ரம் குழுவினர்.

விஜய்-அஜித்துக்கு அப்பாவாக நடிக்க ஆசைப்படும் செந்தில்..!

விஜய்-அஜித்துக்கு அப்பாவாக நடிக்க ஆசைப்படும் செந்தில்..!

Oru Naal Koothu Senthil Shares his Cinema Experience“ஒரு நாள் கூத்து“ படத்தில் நாயகி நிவேதா பெத்துராஜின் தந்தையாக நடித்தவர் செந்தில்.

இப்படத்தில் கூட தினேஷிடம் “பொண்ண விட அவங்க அப்பா செமையா இருக்காருல“ என்று பாலா சரவணன் சொல்லியிருப்பார். அந்த அப்பாதான் நடிகர் செந்தில்.

இவர் தன் திரையுலக அனுபவம் பற்றி கூறியுள்ளதாவது..

“1995 ஆம் ஆண்டு பிலிம் இன்ஸ்டிட்யுடில் சேர்ந்து ஆக்டிங் கோர்ஸ் பயின்றேன்.

சில வருடங்கள் டி.வி சீரியல்களில் நடித்தேன்.

அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள சினிமா மேனேஜராக முடிவு செய்தேன்.

சத்யராஜ் அவர்களும் சினிமாவில் மேனேஜராக இருந்து நடிகராக ஆனவர்தான்.

அதன்பின்னர் மேனேஜராக இருந்தேன். படிப்படியாக சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.

இப்போது ஒரு நாள் கூத்து, ப்ருஸ் லீ, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நடித்துள்ளேன்.

ஒரு நாள் கூத்து படத்தில் நெல்சன், ஒரு நல்ல கேரக்டரை எனக்கு கொடுத்தார்.

எனது சினிமா என்ட்ரீ லேட் ஆனதால், தற்போது அப்பா வாய்ப்புகளே அதிகம் வருகிறது.

எனவே, விஜய், அஜித், மற்றும் த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட அனைவருக்கும் அப்பாவாக நடிக்க காத்திருக்கிறேன்.” என்று கூறினார்.

கபாலி பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார்..?

கபாலி பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார்..?

Rajinikanth Watch out Kabali movie Special Showரஜினியின் கபாலி தரிசனம் கிடைக்க இன்னும் 30 நாட்கள் கூட முழுமையாக இல்லை.

இப்படத்தை பார்க்க பல கோடி ரசிகர்கள் உலகெங்கும் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ஷோவை அண்மையில் பார்த்துள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை முழுவதுமாக ரசித்து பார்த்தாராம் தலைவர்.

அதன்பின்னர் இயக்குனர் ரஞ்சித்தை அழைத்த ரஜினி ‘படம் சூப்பர். என்னுடைய பெஸ்ட் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

நிச்சயம் என் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ என மனதார பாராட்டினாராம்.

சிவகார்த்திகேயன் குரலை மாற்றிய ரசூல் பூக்குட்டி..!

சிவகார்த்திகேயன் குரலை மாற்றிய ரசூல் பூக்குட்டி..!

Sivakarthikeyan's Female Voice Updatesரஜினிமுருகன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள படம் ‘ரெமோ’.

இதன் படப்பிடிப்புகள் பணிகள் முடிந்து, தற்போது டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் பெண் வேடம் உள்ளிட்ட மூன்று வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

அந்த பெண் வேடம் மட்டும், படத்தில் 45 நிமிடங்கள் வருகிறதாம்.

இந்நிலையில், இந்த பெண் வேடத்திற்கு சிவகார்த்திகேயனே குரல் கொடுக்க வருவதாக கூறப்பட்டது.

ஆனால் சில காட்சிகளில் பெண் குரல் சரியாக மேட்ச் ஆகவில்லை என்பதால், சிவகார்த்திக்கேயனை பேச வைத்து, அதை தொழில்நுட்ப உதவியுடன் பெண் குரலாக மாற்றியிருக்கிறாராம் ரசூல் பூக்குட்டி.

ரஜினியின் கபாலி – சூர்யாவின் மாஸ்… ஓர் ஒற்றுமை..!

ரஜினியின் கபாலி – சூர்யாவின் மாஸ்… ஓர் ஒற்றுமை..!

Rajini's Kabali and Suriya's Mass a Unityரஜினி படம் என்றாலே பன்ச் டயலாக்ஸ்க்கு பஞ்சம் இருக்காது.

அண்மையில் வெளியான கபாலியும் இதே வகைதான்.

இதில் இடம்பெற்ற…

“நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துடேன்னு…”

என்ற இந்த பன்ச் தற்போது படு பாப்புலராகியுள்ளது.

கடந்த வருடம் வெளியான மாஸ் படத்திலும் சூர்யா, இதே போல் ஒரு பன்ச் பேசியிருப்பார்.

“நான் இப்படி திரும்ப வருவேன்ன்னு எதிர்பாக்கல இல்ல.…” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தூதுவிடும் வேதாளம் வில்லன்.,. அஜித் ஓகே சொல்வாரா?

தூதுவிடும் வேதாளம் வில்லன்.,. அஜித் ஓகே சொல்வாரா?

Kabir Singh is Expecting a Call From Thala 57வேதாளத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அஜித்தின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என கூறப்படுகிறது.

தற்போது மற்ற கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதால், விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது..

இந்நிலையில், இப்படத்தில் அஜித்தின் வில்லனாக நடிக்க, கபீர் துகான் சிங் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இவரின் சமீபத்திய வலைத்தள உரையாடலில்…

‘வேதாளம் படத்தில் நடித்த 25 நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை.

அதுபோன்ற அற்புதமான நாட்களுக்காக மீண்டும் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இம்… அஜித் என்ன சொல்வாரோ பார்க்கலாம்..?

More Articles
Follows