தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகிறது.
இதே நாளில் சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது சில காரணங்களால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.
அதாவது நவம்பர் 3ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா , சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி ஆகியோர் நடித்துள்ளனர்.
‘அன்னை பிலிம் பேக்டரி’ சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
அர்ஜுன் இயக்கத்தில் `சொல்லிவிடவா’, பரத் நடிப்பில் பொட்டு உள்ளிட்ட படங்கள் தீபாவளி விருந்தாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
Nenjil Thunivirunthal movie postponed due to Mersal Clash