‘லத்தி’ படத்திற்குப் பின் விஷாலின் அடுத்த படங்கள் குறித்த அப்டேட்

‘லத்தி’ படத்திற்குப் பின் விஷாலின் அடுத்த படங்கள் குறித்த அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் ‘லத்தி’ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை வினோத் குமார் இயக்குகிறார்.

விஷாலின் நெருங்கிய நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் பட சூட்டிங்கின் போது விஷாலுக்கு ஏற்பட்ட விபத்துக்கள் குறித்து வீடியோவும் செய்திகளையும் பகிர்ந்து வருகிறது விஷால் தரப்பு.

இதனிடையில் ஆந்திராவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வந்தன.

இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் நடிகர் விஷால்.

‘லத்தி’ படத்தை முடித்துவிட்டு துப்பறிவாளன் 2 என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளார் விஷால்.

இந்த படங்களை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால்.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Latest update on Vishal’s next film after ‘Lathi’

லவ் பண்ணிட்டு இருக்கேன்.; தன் காதல் திருமணம் குறித்து விஷால் ஓபன் டாக்

லவ் பண்ணிட்டு இருக்கேன்.; தன் காதல் திருமணம் குறித்து விஷால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால்.

நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை காட்டி வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

பின்னர் சில காரணங்களால் அந்த தேர்தலில் விஷால் போட்டியிடவில்லை.

ஆனாலும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரையுலக சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். 40 வயதை தாண்டிய விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்பே தனக்கு திருமணம் எனவும் சபதம் போட்டார்/ கூறிவந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவருக்குள்ளே மனக்கசப்பு ஏற்பட்டதால் பிரேக் அப் ஆனது.

இதன்பின்னர் லட்சுமி மேனனுடன் காதல் என விஷால் கிசு கிசுக்கப்பட்டார்.

இதனையடுத்து ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருடன் கடந்த 2019ல் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

ஆனாலும் இந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை கூட செல்லவில்லை.

இந்த நிலையில் திருமணம் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் விஷால்.

அதில்…

“பெற்றோர் பாக்குற பொண்ணு செட் ஆகுமான்னு தெரியல.

அதனால நிச்சயம் லவ் மேரேஜ் தான். இப்போ லவ் பண்ணிட்டு தான் இருக்கேன். விரைவில் கல்யாண பொண்ணு யார்ன்னு சொல்றேன்” என தெரிவித்துள்ளார்.

Vishal opens up about his love marriage

ஹிந்துத்துவா இந்தியா ஆகாது.. சிகரெட் பிடிக்கும் சிவன் பார்வதி.; ‘காளி’ இயக்குனர் லீனாவின் அடுத்த அதிரடி

ஹிந்துத்துவா இந்தியா ஆகாது.. சிகரெட் பிடிக்கும் சிவன் பார்வதி.; ‘காளி’ இயக்குனர் லீனாவின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘செங்கடல், மாடத்தி’ ஆகிய படங்களை இயக்கிய லீனா மணிமேகலை தற்போது ‘காளி’ என்ற டாகுமென்டரி படம் ஒன்றின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை இயக்கி, அவரே காளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் லீனா.

அதில் ‘காளி’ தோற்றத்தில் புகை பிடிப்பது போன்ற போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ஹிந்து கடவுளான காளிதேவி சிகரெட் பிடிப்பது போன்று போஸ்டரை வெளியிட்டார்.

இதற்கு ஹிந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனவே நெட்டிசன்கள்
‘ArrestLeenaManimekalai’ என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து.

அதன்படி லீனா மணிமேகலையைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

குறும்படமோ, பெரும் படமோ இல்லை ஆவணப்படமோ எதுவாக இருந்தாலும் சரி. பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து கடவுள்களை ஏன் இப்படி சித்தரிக்க வேண்டுமா என்பதே தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.

சினிமா காட்சிகளுக்கு சென்சார் இருப்பது போன்று போஸ்டர் டிசைன்களுக்கும் சென்சார் கொண்டு வர வேண்டுமா? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

ஏற்கனவே நாட்டில் மதத்தை வைத்து நிறைய சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்று போஸ்டரை வெளியிடலாமா? என பலர் கேள்வி எழுப்பினர்.

மேலும் லீனா மீது வட இந்தியா மற்றும் தமிழகத்திலும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது்

நடிகை குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்களும் அவரை கண்டித்தனர்.

இந்த நிலையில் புகார்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவன், பார்வதி போன்று வேடமிட்ட இரண்டு பேர் சிகரெட் பிடிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் லீனா.

அத்துடன்… ‛‛நாட்டுப்புற நாடகக் கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை எப்படி பதிவிடுகிறார்கள் என்பது பற்றி பாஜ., பணம் கொடுக்கும் டிரோல் ஆர்மிக்கு தெரியாது.

இது என்னுடைய படம் அல்ல. கிராமப்புற இந்தியாவில் எடுத்த படம்.

சிலர் மத வெறியால் அழிக்க நினைக்கிறார்கள். ஹிந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது” என பதிவிட்டுள்ளார் லீனா.

இதற்கும் பல கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஒரு இந்து கடவுளை அவமதிக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்தவ கடவுளையோ ஒரு இஸ்லாமிய கடவுளையோ இதுபோன்ற செய்திட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘Kali’ director Leena Manimegalai’s new statement on controversy issue

‘கார்கி’ விழாவில் கண்கலங்கிய நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.; சாய் பல்லவி சமாதானம்

‘கார்கி’ விழாவில் கண்கலங்கிய நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.; சாய் பல்லவி சமாதானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரை உலகில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள ‘கார்கி’ படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் டூடி நிறுவனமும் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.

அடுத்த வாரம் ஜூலை 15ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இன்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.

அப்போது ஐஸ்வர்ய லட்சுமி பேசும்போது.. ‛‛கார்கி’ படம் சாய்பல்லவி இல்லாமல் சாத்தியமில்லை. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

மேலும் படத்தின் ரிலீஸ் தாமதம் குறித்தும் படத்திற்காக தான் இழந்த பணம் குறித்தும் தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசும்போது
ஐஸ்வர்ய லட்சுமி கண் கலங்கினார்.

இதனால் அருகில் இருந்த சாய் பல்லவி மற்றும் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் ஆகியோர் அவரை சமாதானம் செய்தனர்.

கூடுதல் தகவல்..

‘ஆக்ஷன்’ உள்ளிட்ட ஓரிரு தமி்ழ் படங்களில் நடித்துள்ளார் கேரளத்து நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி.

மேலும் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Aishwarya lakshmi cried at the gargi press meet

பித்தலாட்ட பிரபு.. ராங்கான ராம்குமார்.; நடிகர் சிவாஜி மகள்கள் சகோதரன்கள் மீது வழக்கு

பித்தலாட்ட பிரபு.. ராங்கான ராம்குமார்.; நடிகர் சிவாஜி மகள்கள் சகோதரன்கள் மீது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிப்புக்கென்று பெயர் பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

‘பராசக்தி’ என்ற படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்தவர்.

வாழ்ந்த காலம் வரை நடிப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரை பெற்றவர் சிவாஜி.

ரஜினியுடன் படிக்காதவன் & படையப்பா கமலுடன் தேவர் மகன் விஜய்யுடன் ஒன்ஸ்மோர் என இன்றைய முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்கினார் சிவாஜி. ஆனால் சினிமா கை கொடுத்தது போல அவருக்கு அரசியல் கை கொடுக்கவில்லை.

மேலும் காங்கிரஸ் கட்சியிலும் பொறுப்பு வகித்தார் சிவாஜி கணேசன்.

இவரின் மகன் பிரபுவும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். மற்றொரு மகன் ராம்குமார் சில படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசனின் பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் உள்ளிட்டோரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

சிவாஜி மறைவுக்கு முன்னரும் மறைவுக்கு பின்னரும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் பல படங்களை ராம்குமார் மற்றும் பிரபு இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

அவர் முன்னணி நட்சத்திரமாக இருந்தபோது தமிழகத்தின் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார்.

இந்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் சுமார் 300க்கு கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

அவரது வாரிசுகள் மகன்கள் ராம்குமார் பிரபு மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகிய 4 பேரும் சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களுக்கு தெரியாமல் பிரபு & ராம்குமார் இருவரும் தங்களது தந்தையின் சில சொத்துக்களை விற்றுவிட்டதாகவும், சில சொத்துக்களை அவர்களின் மகன்களில் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,…

” தங்களது தந்தை தனது சொத்துக்கள் குறித்து எவ்வித உயிலும் எழுதி வைக்காத நிலையில், ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் பொய்யான உயிலை தயாரித்து எங்களை ஏமாற்றிவிட்டனர்.

மேலும் எங்களில் தாய் வழி சொத்துக்களிலும் எங்களுக்கு பங்கு தரவில்லை.

அப்பா சேர்த்து வைத்த 10 கோடி மதிப்புள்ள சுமார் 1000 சவரன் தஙகம் வெள்ளி மற்றும் வைரம் உள்ளிட்ட பொருட்களை கூட தராமல் ஏமாற்றிவிட்டனர்.

அதேபோல் கோபலபுரத்தில் உள்ள வீட்டை 5 கோடிக்கு விற்றுவிட்டனர். ராயப்பேட்டையில் உள்ள 4 வீடுகளில் இருந்து வரும் வாடகை பணத்தில் கூட எங்களுக்கு பங்கு தருவதில்லை.

கடந்த 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து வாரிசு உரிமை சட்டத்தின் படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு உரிமை இருப்பதால், நீதிமன்றம் இந்த பிரச்சினையில் தலையிட்டு பாகபிரிவினை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sivaji Ganesan daughters filed a petition against Prabhu and Ram Kumar

இளையராஜா பெயரில் விருதும் பல்கலைக்கழகமும் வேண்டும்.. – மோடிக்கு ஆதிராஜன் கோரிக்கை

இளையராஜா பெயரில் விருதும் பல்கலைக்கழகமும் வேண்டும்.. – மோடிக்கு ஆதிராஜன் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படமான “நினைவெல்லாம் நீயடா ” படத்தை இயக்கி வரும் ஆதிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இசைஞானி இளையராஜா இந்திய திரையுலகின் பெருமை மிகு அடையாளம். இதுவரை பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சுமார் 1400 திரைப்படங்களுக்கு மேலாக இசை அமைத்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

சுமார் 8000 பாடல்களை உருவாக்கி இருக்கிறார். உலகம் முழுவதும் சுமார் 20000 இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.

தற்போது 80 வயதிலும் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களாக பட்டியலிடப்பட்ட 25 பேரில் ஒன்பதாவது இடத்தில் இளையராஜா உள்ளார் என்பதும் இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் அவர் மட்டுமே என்பதும் தமிழர்கள் கர்வம் கொள்ள வேண்டிய விஷயம்.

பத்மபூஷன், பத்மவிபூஷன் பல தேசிய விருதுகள் பெற்ற இசைஞானிக்கு அவருடைய மகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்கமாக, ராஜ்யசபை எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம்.

இதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்ற இடமெல்லாம் திருவள்ளுவரையும் பாரதியையும் தூக்கி பிடிக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர்களின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாகவே இந்த நியமனம் அமைந்திருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் வாழும் சகாப்தமான இளையராஜாவை மென்மேலும் கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

அது மட்டும் அல்லாமல் தேசிய திரைப்பட விருதுகளுடன் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவது போல மத்திய அரசு இசைஞானி இளையராஜா பெயரில் ஒரு விருதை உருவாக்கி வருடம் தோறும் இசைத்துறை சாதனையாளர் ஒருவருக்கு அந்த விருதை வழங்க வேண்டும்.

அத்துடன் சென்னையில் உள்ள மிக முக்கியமான சாலைக்கு இளையராஜாவின் பெயரை சூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் இசைஞானியின் பெயரால் ஓர் இசைப் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும்.

இவையெல்லாம் இளையராஜாவை பெருமை படுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழர்களை பெருமைப்படுத்தும் செயலாகவும் அமையும். எனவே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் ஆதிராஜன் தெரிவித்துள்ளார்.

We want an award and a university in the name of Ilayaraja.. – Adirajan’s request to Modi

More Articles
Follows