சூப்பர் ஸ்டாருக்கு 1.. உலகநாயகனுக்கு 2.; ரி-ரீலீஸ் போட்டியில் மோதும் கமல் – ரஜினி

சூப்பர் ஸ்டாருக்கு 1.. உலகநாயகனுக்கு 2.; ரி-ரீலீஸ் போட்டியில் மோதும் கமல் – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2006-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட பலர் நடிப்பில் வெளியானது.

இந்நிலையில், கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் ரீ ரிலீஸ் வரும் ஜூன் மாதம் செய்யவுள்ளதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடைய செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ் தானு தெரிவித்திருந்தார்.

மேலும், ரஜினி கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு தன்னுடைய ‘பாபா’ படத்தை ரீ ரிலீஸ் செய்தார்.

பல திரையரங்குகளில் இந்த படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது.

இதன்மூலம் தோல்வி படம் என சொல்லப்பட்ட ‘பாபா’ படத்தை வெற்றி படமாக்கி இருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையாடு விளையாடு

kamal haasan’s vettaiyadu vilaiyadu to rerelease from june

இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜ் மரணம்.; நடந்தது என்ன?

இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜ் மரணம்.; நடந்தது என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட இசையமைப்பாளர்களான, தோட்டகுரு சோமராஜு மற்றும் சலூரி கோட்டேஷ்வர் ராவ் ஆகியோர் ‘ராஜ்-கோடி’ என்ற பெயரில் இசை ஆர்வலர்களுக்கு அறிமுகமானவர்கள்.

90 காலக்கட்டத்தில் தென்னிந்திய இசையமைப்பாளர்களில் பிரபலமான ஒருவராக திகழ்ந்த இரட்டை இசையமைப்பாளர்கள் ‘ராஜ்-கோடி’.

இருவரும் சுமார் 180 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

ராஜ் – கோடி இசையில் வெளியான 3000 பாடல்களில், சுமார் 2,500 பாடல்களை பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கே.எஸ்.சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர்கள் ராஜ்-கோட்டி இசைக் குழுவில் 8 ஆண்டுகள் கீ-போர்டு பிளேயராக வேலை பார்த்து வந்த ரஹ்மானை கை தூக்கிவிட்டவர் இசையமைப்பாளர் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ராஜ் ஹைதராபாத் குகட் பாலியில் உள்ள ஃபோரம் மால் அருகே வசித்து வருகிறார்.

கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராஜ்.

இந்நிலையில், வீட்டில் இருந்த ராஜ் நேற்று குளியலறையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கமான அவரை மீட்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இசையமைப்பாளர் ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், விழுந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இசையமைப்பாளர் ராஜ் மறைவுச் செய்திக் கேட்டு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ராஜின் இறுதி சடங்குகள் ஹைதராபாத்தில் உள்ள மகாபிரஸ்தானத்தில் இன்று நடைபெறுகிறது.

telugu music director raj passes away

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்பாபு; உண்மையாக்கிய ஹைதராபாத்  டாக்டர்கள்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்பாபு; உண்மையாக்கிய ஹைதராபாத்  டாக்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவர் சரத் பாபு.

நடிகர் சரத்பாபு கடந்த மாதம் 20-ஆம் தேதி ஐதராபாத்தில் கச்சிபௌலி எனும் இடத்தில் உள்ள தனியார் அனுமதியில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படியொரு சூழலில் நேற்று ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

கமல், குஷ்பு உள்பட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அது வதந்தி என சரத்பாபுவின் சகோதரர் மகன் ஆயுஷ் தேஜாஸ் மற்றும் உறவினர்கள் சொன்னபிறகே பொய் ஊடகங்கள் அமைதி காத்தன.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகர் சரத்பாபு இன்று மே 22ம் தேதி காலமானார். அவருக்கு வயது71.

மேலும், நடிகர் சரத்பாபு இன்று இறந்ததால் ஏற்கனவே, வந்த வதந்திகளுக்கு சரத்பாபு முற்றுப்புள்ளி வைத்ததாகவும் அதனை ஹைதராபாத் டாக்டர்கள்  உண்மையாக்கியதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sarathbabu put an end to rumours, Hyderabad doctors made it come true

கமல் படத்திற்காக உடம்பை முறுக்கேற்றிய சிம்பு.. வெளிவந்த ஸ்வாரஸ்ய தகவல்

கமல் படத்திற்காக உடம்பை முறுக்கேற்றிய சிம்பு.. வெளிவந்த ஸ்வாரஸ்ய தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சிம்புவுடன் கமல் மற்றும் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இது ஒரு வரலாற்று ஆக்‌ஷன் படம் என்பதால் தற்போது விரிவான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிங் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சிம்பு இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிப்பதாகவும், அதிக போர் பயிற்சிக்காக லண்டன் சென்றுள்ளதாகவும் பகிர்ந்துள்ளார்.

‘எஸ்டிஆர் 48’ நடிகர் சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாகும். இது ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

Simbu’s amazing body transformation for ‘STR 48’

JUST IN பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்.; வாழ்க்கை குறிப்பு இதோ..

JUST IN பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்.; வாழ்க்கை குறிப்பு இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு.

இவர் 1980களில் ரஜினி மற்றும் கமல் ஆகிய முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினியுடன் முள்ளும்மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பார்.

இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

சரத்பாபு இறந்துவிட்டதாக இன்று மே 3ம் தேதி இரவு 9 மணியளவில் தகவல் பரவியது.

இதனையடுத்து கமல், குஷ்பூ உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இந்த செய்தியை உண்மை என நம்பி அவர்களும் தங்களுடைய டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்தனர்.

ஆனால் அது வதந்தி என உறவினர்கள் சொன்னபிறகே பொய் ஊடகங்கள் அமைதி காத்தன.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகர் சரத்பாபு இன்று மே 22ம் தேதி காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கை குறிப்பு…

1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலமாக அறிமுகமானார்.

பிறகு ‘பட்டினப்பிரவேசம்’ படம் மூலமாக தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.

‘சரபஞ்சரம்’, ‘தன்யா’ உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

1979-ல் மகேந்திரன் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

இறுதியாக அண்மையில் வெளியான பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ படத்தில் சரத்பாபு நடித்திருந்தார்.

தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார் சரத்பாபு.

முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற செந்தாழம் பூவே என்ற பாடல் இன்றுவரை சரத்பாபு ரசிகர்களின் பேவரைட் பாடலாக கருதப்படுகிறது.

சரத்பாபு இல்லம் சென்னை தி நகரில் பிஜேபி அலுவலகம் அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

veteran actor sarath babu passes away in hyderabad

விஜய்க்கு கட்டுப்பட்டு காத்திருந்து சத்தியத்தை காப்பாற்றிய வெங்கட் பிரபு

விஜய்க்கு கட்டுப்பட்டு காத்திருந்து சத்தியத்தை காப்பாற்றிய வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை மே 21ஆம் தேதி விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தை ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்த படம் ஏ ஜி எஸ் நிறுவனத்திற்கு 25வது படமாகும். மேலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் -யுவன் கூட்டணி இணைகிறது.

இதற்கு முன்பு ‘புதிய கீதை’ என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

தற்போது முதன்முறையாக விஜய் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது

அந்தப் பதிவில், “என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா. உங்களிடம் சத்தியம் செய்து கொடுத்தது போலவே இந்த புகைப்படத்தை பட அறிவிப்புக்குப் பிறகு தான் வெளியிடுகிறேன். (இந்த போட்டோ 10 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது) ஆம். கனவுகள் நனவாகியுள்ளன” என பதிவிட்டுள்ளார்.

venkat prabhu released a selfie photo with vijay after ten months

More Articles
Follows