‘பாபா’-வை தொடர்ந்து ‘ஆளவந்தான்’ ரீ ரிலீஸ்.: ரஜினி வழியில் கமல் வெல்வாரா.?

‘பாபா’-வை தொடர்ந்து ‘ஆளவந்தான்’ ரீ ரிலீஸ்.: ரஜினி வழியில் கமல் வெல்வாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘பாபா’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.

அது போல கமல் நடித்த ‘சத்யா’, ‘இந்திரன் சந்திரன்’, உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.

இவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் சிஷ்யர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கமல்ஹாசன் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா கூட்டணியில் 2001ல் வெளியான படம் ‘ஆளவந்தான்’. கலைப்புலி தாணு இந்தப் படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்து இருந்தார்.

கமல் இரு வேடங்களில் நடித்த இப்படம் இந்தியில் அப்ஹே என்ற பெயரில் வெளியானது.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் படுதோல்வியை தழுவியது. கமலின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படத்தின் நீளம்.. கதையின் வேகம் மற்றும் திரைக்கதை சரியில்லை என கருத்துக்கள் வந்திருந்தன.

அதன் பின்னர் “படத்தின் தோல்விக்கு கமலே காரணம்.. நிறைய வீண் செலவு” எனவும் தெரிவித்திருந்தார் தாணு.

இதனையடுத்து.. “கமல் ஒரு சிறந்த கலைஞன்.. அவரை நீங்கள் இப்படி சொல்லலாமா? என்று அப்போது தாணுவிடம் ரஜினி கேள்வி கேட்டிருந்தார்.

அந்த சமயத்தில் இந்த விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 22 வருடங்களுக்குப் பிறகு ‘ஆளவந்தான்’ மீண்டும் ரீ-ரீலீசாகிறது. உலகமெங்கும் 1000 தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

‘வெல்லுவான் புகழ் அள்ளுவான்’ எனவும் அதில் குறிப்பிட்டு இந்த படத்தை டிஜிட்டல் செய்து வெளியிட உள்ளனர்.

கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு தன்னுடைய ‘பாபா’ படத்தை ட்ரீம் செய்து வெளியிட்டார். இந்தப் படத்தை முதல் தடவை பார்ப்பது போல ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் பல திரையரங்குகளில் இந்த படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது.

இதன்மூலம் தோல்வி படம் என சொல்லப்பட்ட ‘பாபா’ படத்தை வெற்றி படமாக்கி இருந்தார் ரஜினி.

இந்த நிலையில் தற்போது தோல்வி அடைந்த ‘ஆளவந்தான்’ படமும் மீண்டும் ரீலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி தயாரித்து நடித்த ‘பாபா’ மற்றும் கமல் நடித்த ‘ஆளவந்தான்’ இரண்டு படங்களையும் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

‘Aalavandhan’ re-release after ‘Baba’: Will Kamal win in Rajini’s way?

ரஜினியின் ‘பாபா’ படத்தைத் தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் கமலின் பழைய படம்

ரஜினியின் ‘பாபா’ படத்தைத் தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் கமலின் பழைய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியத் திரையுலகில் சமீபகாலமாக ரீ-ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ரஜினிகாந்த் தனது 20 வருட பழமையான ‘பாபா’வை 2022 டிசம்பரில் தனது பிறந்தநாளில் மாற்றியமைத்து மீண்டும் வெளியிட்டார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் பிரமாண்டமாக மறுவெளியீட்டுக்கு தயாராக உள்ளது . ஆளவந்தான் 2001 ஆம் ஆண்டு வெளியான உளவியல் த்ரில்லர்.

ஆளவந்தான் படத்தின் மறுபதிப்பு உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்தார்.

Kamal Haasan’s cult film to re-release following Rajinikanth’s ‘Baba’

மாபெரும் வெற்றிக்காக மீண்டும் இணையும் ‘திருச்சிற்றம்பலம்’ டீம்!

மாபெரும் வெற்றிக்காக மீண்டும் இணையும் ‘திருச்சிற்றம்பலம்’ டீம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 50வது படத்தை ‘டி50’ தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ‘ராயன்’ என்று சொல்லபடுகின்ற இந்த மெகா பட்ஜெட் தனுஷின் இரண்டாவது இயக்கத்தில் உருவாவதாக தெரிகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்காக ‘திருச்சிற்றம்பலம்’ காம்போ மீண்டும் இணைகிறது என்பது தெரிய வந்துள்ளது.

திரைப்பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் தனுஷுடன் இணைந்து ராயனின் திரைக்கதையில் பணியாற்றுகிறார், என்றும் அனிருத் இசையமைக்கிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘Thiruchitrambalam’ team to reunite for Dhanush’s film!

சிம்பு குடும்பத்தில் ஒரு குட்டி தேவதை .. மகிழ்ச்சியுடன் வரவேற்ற குடும்பத்தினர்

சிம்பு குடும்பத்தில் ஒரு குட்டி தேவதை .. மகிழ்ச்சியுடன் வரவேற்ற குடும்பத்தினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு வீட்டில் உள்ள அனைவரும் தற்போது மகிழ்ச்சியில் நிறைந்துள்ளனர்.

அவரது தங்கை இலக்கியாவுக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவரது குடும்பத்தினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இலக்கியா 2014 இல் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அபிலாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார், தம்பதியருக்கு 2017 இல் ஜேசன் என்ற மகன் பிறந்தார். இந்த முறை பெண் குழந்தையாக இருப்பதில் பெருமிதம் கொண்ட இலக்கியா இன்ஸ்டாவில் “வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்தது. எங்கள் புதிய குடும்ப உறுப்பினரைப் போலவே. , ஒரு ஸ்வீட் பேபி கேர்ள் என பதிவிட்டுள்ளார்.

A little angel arrives in Simbu’s family

அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது உடல்நிலை குறித்து பேசிய விஜய் ஆண்டனி

அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது உடல்நிலை குறித்து பேசிய விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி கடந்த வாரம் மலேசியாவில் படகு விபத்தில் சிக்கினார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள நண்பர்களே, மலேசியாவில் நடந்த பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து நான் பாதுகாப்பாக மீட்கப்பட்டேன்.

நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்தேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுவேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், என் உடல்நிலையில் அக்கறை செலுத்தியதற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

Vijay Antony updates about his health status after major surgery

தளபதி 67 அப்டேட். : பாலிவுட் நடிகருடன் காஷ்மீர் பறக்கும் படக்குழு

தளபதி 67 அப்டேட். : பாலிவுட் நடிகருடன் காஷ்மீர் பறக்கும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தளபதி 67’.

இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, மன்சூர் அலிகான், மனோபாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானலில் நடைபெற்றது்

இதற்கு முன்னர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட மிஷ்கின்..” விஜய்யுடன் அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபட்டதாகவும் ரத்தம் வரளவுக்கு சண்டை போட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக பிப்ரவரி முதல் வாரத்தில் காஷ்மீர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.. அப்போது பாலிவுட் நடிகர் கேஜிஎப் வில்லன் சஞ்சய் தத் இணைவார் எனத் தகவல்கள் வந்துள்ளன.

மேலும் இது லோகேஷ் சினிமாக்டிக் யூனிவர்ஸ் (LOKESH CINEMATIC UNIVERSE) களம் என்பதால் இதில் கைதி கார்த்திக் விக்ரம் சூர்யா விக்ரம் பஹத்வாசில் உள்ளிட்டோர் இணைவார்கள் என கூறப்படுகிறது.

முக்கிய கேரக்டரில் உலகநாயகன் கமல்ஹாசன் இணைவார் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன.

Thalapathy 67 Update. : Crew Flying Kashmir with Bollywood Actor

More Articles
Follows