தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நவம்பர் 15ஆம் தேதி தீபாவளி சமயத்தில் வெளியான திரைப்படம் ‘ஆளவந்தான்’.
கமல்ஹாசன் ஹீரோ மற்றும் வில்லனாக இரு வேடங்களில் மிரட்டி இருந்த இந்த படத்தை சுரேஸ் கிருஷ்ணா இயக்க கலைப்புலி எஸ் தானு தயாரித்திருந்தார்.
கமலுடன் மனிஷா கொய்ராலா, ரவீனா டான்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்ய திரு ஒளிப்பதிவு செய்ய சங்கர் எஸான் லாய் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் கமல் கடுமையான உழைப்பை கொடுத்திருந்தாலும் படம் தோல்வியை தழுவியது.
அதன் பிறகு கமல்ஹாசனை பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் தாணு. தோல்விக்கு கமல் தான் காரணம் என பேசி இருந்தார்.
கமல் மிகப்பெரிய கலைஞன்.. அவரை அப்படி பேசாதீர்கள் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது 22 ஆண்டுகளுக்கு பின்னர் தோல்வி படத்தை வெற்றி படமாக்கும் முயற்சியில் ‘ஆளவந்தான்’ படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதன்படி விரைவில் உலகம் எங்கும் 1000 திரையரங்குகளில் ஆளவந்தான் படம் ரீ-ரிலீஸ் ஆகும் என இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ‘பாபா’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்திருந்தார் ரஜினிகாந்த். ரஜினியின் கேரியரில் பாபா படம் தோல்வி படம் என்றாலும் ரீ-ரிலிஸ் செய்து அதை வெற்றியாக்கி காட்டினார். அந்த படத்தின் நீளத்தை குறைத்திருந்தார்.
அதுபோல ‘ஆளவந்தான்’ படமும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ரீ ரிலீஸில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தோல்வி படத்தை ரஜினி போல கமல் வெற்றி படம் ஆக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
Aalavandhan re release in 1000 screens worldwide