தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை தரிசித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தீவிர ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தனி ஆலயம் கட்டி அவர் மீது அளவு கடந்த பக்தியை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகி, செப்டம்பர் 28ஆம் தேதியன்று அதாவது நாளை வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மந்த்ராலயத்திற்கு சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை நேரில் தரிசித்திருக்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதும், அவர் பின்பற்றும் பல கொள்கைகளை இவரும் தீவிரமாக கடைப்பிடிப்பவர் என்பதும் அனைவரும் அறிந்தது தான்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போலவே.. இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டிற்கு முன் மந்த்ராலயம் சென்று ராகவேந்திரா சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றிருப்பதை பலரும் பாராட்டுகிறார்கள்.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Ragava Lawrence visited Manthralayam to pray for Chandramukhi2 success