வேட்டையன் மட்டுமில்ல… இன்னொருத்தனும் இருக்கான்..; வாசு வைத்த ‘சந்திரமுகி2’ ட்விஸ்ட்

வேட்டையன் மட்டுமில்ல… இன்னொருத்தனும் இருக்கான்..; வாசு வைத்த ‘சந்திரமுகி2’ ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ், கங்கனா, வடிவேலு நடித்த படம் ‘சந்திரமுகி 2’. லைக்கா தயாரித்த இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார்.

செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர் பி. வாசு பேசுகையில்..

” நான் எப்போதும் மேலே பார்த்துக் கொண்டு நடக்க மாட்டேன். பின்னாடி பார்த்துக் கொண்டும் நடக்க மாட்டேன். மேலே பார்த்தால்.. இன்னும் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ…! என்ற பயம் உண்டாகும். பின்னாடி பார்த்தால்… இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறோம் என்ற திமிர் வந்துவிடும். அதனால் நான் எப்போதும் தலை குனிந்து.. தலை வணங்கி.. கீழே பார்த்துக்கொண்டு நடந்து கொண்டே இருப்பேன். எங்கே சென்று சேர வேண்டுமோ.. அங்கே சென்று சேர்வோம்.

இன்றைக்கு உள்ள திறமையான கலைஞர்கள் படைப்பாளிகள் ஆகியோரே காணும் போது இவர்களுடன் எப்படி போராட போகிறோம் என்றுதான் தோன்றுகிறது.

இந்த மாலை வேலையை இனிமையான தருணமாக மாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. லைக்கா என்றாலே பிரம்மாண்டம் தான் . இந்த பிரம்மாண்டத்திற்கு சிறிய உதாரணம் தான் இந்த இசை வெளியீட்டு விழா.

சுபாஷ்கரன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரும் பொக்கிஷம். ஏனெனில் அனைத்து இயக்குநர்களையும், அவர்களின் கனவுகளையும் அவர் பிரம்மாண்டமாக சாத்தியப்படுத்துபவர். நல்ல மனதுடையவர்.

நான் எப்போதுமே ஓம் என்று எழுதி தான் எந்த காரியத்தையும் தொடங்குவேன். ஓம் என்ற எழுத்தில் வரும் புள்ளிதான் லைக்கா சிஇஓ தமிழ் குமரன். அந்த புள்ளி இல்லையென்றால் ஓம் இல்லை. அந்த புள்ளிதான் அனைத்தையும் அழகுபடுத்தி காட்டும். அதேபோல் தமிழ் குமரன் பலருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்.

ரஜினி சாரிடம் சந்திரமுகி 2 படத்தின் கதையை சொன்னேன். அவர் ராகவா லாரன்ஸை உடன்பிறந்த தம்பியாகவே பார்ப்பார். அனைத்தையும் கேட்ட பிறகு, ‘நான் வணங்கும் என் குருவை வேண்டிக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’ என வாழ்த்தினார்.

அவரிடம், ‘ஒன்று இல்லை என்றால், இரண்டு இல்லை. அந்த ஒன்று நீங்கள் தான். தற்போது இரண்டு தயாராகி இருக்கிறது’ என்றேன். இப்படித்தான் இந்த படம் தொடங்கியது.

தமிழ் குமரனிடம் இப்படத்தின் இரண்டு வரி கதையைத்தான் சொன்னேன். உடனே சரி படத்தின் பணிகளை தொடங்கலாம் என்றார். அதன் பிறகு கதையை உருவாக்கி, வடிவேலுவிடம் சொன்னேன். நான் இதுவரை அவரிடம் முழு கதையையும் சொன்னதில்லை. ஏனெனில் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே உள்ள ஒரே தொடர்பு வடிவேலு மட்டும் தான். சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு வடிவேலுவும் ஒரு காரணம் என்பதால், அவர் சந்திரமுகி 2 படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

அவர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே நான் இதில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவரைப் போன்ற திறமையான கலைஞர்கள் எல்லாம் வீட்டில் சும்மா உட்கார வைக்க கூடாது. அவர் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தால்.. மக்களுக்கு நோய் வந்து விடும். அவர் மக்களை சிரிக்க வைத்தவர். அவரைப் பார்த்து நாம் சிரித்து சிரித்து நோயில்லாமல் வாழ்கிறோம்.

அந்த வகையில் பார்த்தால் அவர் ஒரு டாக்டர். கொரோனா காலகட்டத்தின் போது எத்தனை குடும்பங்களை அவர் சிரிக்க வைத்திருப்பார். அவரைப் போன்ற நடிகர்களை நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம்.

ராதிகா என்னுடைய இயக்கத்தில் முதன்முறையாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார். இந்தப் படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு சின்ன கதை இருக்கும். அனைவருக்கும் நடிப்பதற்கு வாய்ப்பும் கொடுத்திருக்கிறேன்.

நடிகர் விக்னேஷ், நடிகர் ரவி மரியா போன்றவர்களுக்கு எல்லாம் நான் வாய்ப்பளித்திருக்கிறேன். இப்படத்தின் மூலமாக அவர்கள் தொடவிருக்கும் உயரம் இன்னும் அதிகம்.

அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகரை தேர்வு செய்தாகிவிட்டது சந்திரமுகியை தவிர. சந்திரமுகி நடிக்கவிருப்பது யார்?என்ற கேள்வி எங்களுக்குள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்த நேரத்தில் கங்கனாவை வேறொரு விசயத்திற்காக சந்திக்க சென்றேன். அப்போது சந்திரமுகி குறித்து கேட்டார். பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பதிலளித்தேன். சந்திரமுகியாக நடிப்பது யார்? என கேட்டார். இன்னும் யாரையும் உறுதிப்படுத்தவில்லை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றேன்.

ஆச்சரியமடைந்த அவர், ஏன் நான் அந்த பாத்திரத்தில் பொருத்தமாக இருக்க மாட்டேனா? நான் ஏன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது? என கேட்டார். அவர் இதுவரை யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதே இல்லை. அதைவிட சிறப்பம்சம் என்னவென்றால் அவர் முதல் நாள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர் என்ன கெட்டப்பில் நடிக்கப் போகிறார் என்று அவருக்குத் தெரியாது. இதன் பிறகு தான் அவருக்கு நான் கதையை முழுவதுமாகச் சொன்னேன்.

இவை எல்லாத்தையும் விட எனக்கு கிடைத்த சிறந்த வேட்டையன் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தில் அவரை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று.. குடும்பம், பாசம், சிரிப்பு, சந்தோஷம் என்றிருக்கும். வேட்டையன் என்றால் வேட்டையன் மட்டும் இருக்க மாட்டான். அவனுள் இன்னொருத்தனும் இருக்கிறான். அது யார்? என்பது நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.

மாஸ்டர், ராஜா வேஷம் போட்டு நடிக்கும் போது அவர் பேசும் தமிழ் எப்படி இருக்கும்? என்பது எனக்கு சற்று சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அவர் ஜாலியாக.. ஸ்லாங்குடன் தமிழ் பேசுவார்.

“அவளை பார்த்ததற்கே… அவள் மீது உனக்கு ஆசை வந்துவிட்டது என்றால்.. அவளைத் தொட்டு.. என் விரல் பட்டு.. அவளை அணைத்து.. தூக்கி வந்த எனக்கு.. எப்படி இருக்கும்..? என்ற வசனத்தை அவர் எப்படி தமிழில் பேசுவார் என்று தயங்கினேன். ஆனால் அவர் அனைவரும் ஆச்சரியப்படும்படி பேசியிருக்கிறார். அதனை நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும்.

நான் எப்போதும் படத்தை தொடங்கும் போது கடவுளிடம் வேண்டுவேன். படம் வெளியாகும் போது திரையரங்கத்திற்கு சென்று மக்களான தெய்வங்களை வணங்குவேன்‌.

ஆஸ்கார் விருது வாங்கிய பிறகு அமைதியாக இரண்டாவது ரகுமானாக உட்கார்ந்திருக்கும் என்னுடைய இசையமைப்பாளர் கீரவாணிக்கும் வாழ்த்துக்கள்.

சந்திராயன் 3 விண்ணில் ஏவிய இந்திய விஞ்ஞானிகளுக்கு சந்திரமுகி 2 பட குழுவின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”என்றார்.

Not only Vettaiyan one more character is there says Vasu

அய்யனாரு கருப்பனுக்கு பிறகு என் குலதெய்வம் ‘லைகா’ சுபாஸ்கரன்.; வடிவேலு நெகிழ்ச்சி

அய்யனாரு கருப்பனுக்கு பிறகு என் குலதெய்வம் ‘லைகா’ சுபாஸ்கரன்.; வடிவேலு நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ், கங்கனா, வடிவேலு நடித்த படம் ‘சந்திரமுகி 2’. லைக்கா தயாரித்த இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார்.

செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற வைகைப்புயல்’ வடிவேல் பேசுகையில்…

” ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.

இதற்கு முதல் படம் மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி 2. இந்த ரெண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்க போற வடிவேலு வேற..

முதல்ல ஒரு விசயத்தை சொல்லிடுறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன வரவிடாம கதவை பூட்டு போட்டு சாவிய தூக்கிட்டு போயிட்டாங்க. உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க. அதுக்கு என்ன காரணம்கிறது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவிய கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் எங்க அண்ணன் சுபாஷ்கரன். நான் குலதெய்வமா கும்பிடுவது அய்யனாரு, கருப்பன். அந்த ரெண்டு தெய்வத்துக்கு பிறகு தெய்வமா நான் அண்ணன் சுபாஷ்காரன தான் வணங்குறேன். யாரு என்ன சொன்னாலும்.. என்ன மறுபடியும் சினிமால நடிக்க வைத்தவர் அண்ணன் சுபாஷ்கரன் தான். இதற்கு அன்புத்தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியா இருந்தாரு.

மாமன்னன் படத்த முடித்த பிறகு பெரிய டைரக்டரரான பி. வாசு சார் என்னை கூப்பிட்டார். அவர் படத்துல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அவருக்கு இப்போ 70 வயசு ஆகுது. வயசு தான் 70 ஆவது தவிர 35 வயசு மாதிரி இருக்காரு.

என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி, சந்திரமுகி 2 படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார்.

பொதுவா வாசு சார் யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன்லி லைனை மட்டும்தான் சொல்வார். இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதேயில்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படி ஆடிப் போய்விட்டேன்.

அப்புறம் இதனை நான் தமிழ் குமரனிடம் சொல்ல.. அவர் சுபாஷ்கரனிடம் சொல்ல.. சுபாஷ்கரன் இதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து கதையை கேட்டு ஓகே சொல்லி தொடங்கப்பட்ட படம் தான் சந்திரமுகி 2.

சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குரூப்பு மாறிடுச்சு.‌

இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். வாழ்த்துக்கள். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன் ” என்றார்.

நடிகர் சக்திவேல் பேசுகையில்…

‘ இந்தப் படத்தில் நான் பணியாற்றவில்லை. சந்திரமுகியின் ஆட்டத்தையே நம்மால் தாங்க முடியாது. தற்போது அவருடன் காஞ்சனாவும் கூட சேர்ந்திருக்கிறார். சந்திரமுகியும், காஞ்சனாவும் சேர்ந்தால் என்ன ஆகும்..? இதுதான் இந்தப் படத்தின் மீது எனக்கான மிகப் பெரிய நம்பிக்கை.

அப்பாவிடம் யாராவது சின்ன கோடு போட்டால் அவர் பெரிய ரோடே போடுவார். அப்படி போட்ட ரோடு தான் சந்திரமுகி. இது இரண்டாவது ரோடு. ரெண்டு ரோடுக்கும் இடையில் ஒரு பிரிட்ஜ் இருக்கிறது. அது நம் வடிவேலு அண்ணன். அடுத்த பாகத்திற்கும் அவர்தான் பிரிட்ஜ். சந்திரமுகி படத்தின் முதல் பாகம் எப்படி இயக்குநர் பி. வாசு படமாகவும்.. ரஜினி சார் படமாகவும்.. ஜோ மேடத்தின் படமாகவும்… வடிவேலின் படமாகவும்.. இருந்ததோ, அதேபோல் சந்திரமுகி 2 அப்பாவின் படமாகவும்.. மாஸ்டர் ராகவாவின் படமாகவும்.. கங்கனாவின் படமாகவும்.. அண்ணன் வடிவேலுவின் படமாகவும் இருக்கும்.

தலைவருக்குப் பிறகு தர்மத்தின் தலைவன் என்பது மாஸ்டருக்கு மட்டும் தான் பொருத்தமாக இருக்கும்.

தர்மத்தின் தலைவன் படத்தை நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும். அதில் உங்கள் தம்பியாக நான் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசையை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

Lyca Subaskaran is like my kuladeivam says Vadivelu

‘சந்திரமுகி’ படத்தில் லக.. லக..; ‘சந்திரமுகி 2’ படத்தில் லைக்கா.. லைக்கா.. – கீரவாணி

‘சந்திரமுகி’ படத்தில் லக.. லக..; ‘சந்திரமுகி 2’ படத்தில் லைக்கா.. லைக்கா.. – கீரவாணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட லைக்கா சுபாஷ்கரன் ராகவா லாரன்ஸ் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர். பாடல்கள், நடனம் என கோலாகலமாக இவ்விழா நடைபெற்றத

இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி பேசுகையில்,…

” இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா சுபாஷ்கரனுக்கும் முதலில் நன்றி. மீண்டும் என்னை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, தமிழ் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்ததற்காக நன்றி. சந்திரமுகி படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட். அதற்கு என்னுடைய நண்பர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் பணியாற்றிய பிறகுதான் இயக்குநர் வாசு சார் மிக நல்ல பாடகர் என்பது தெரிய வந்தது. மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டேன். அதனால் அடுத்த படத்தில் உங்களை பாட வைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய இசையில் நீங்கள் பாட வேண்டும். என்னுடைய அடுத்த பின்னணி பாடகர் நீங்கள் தான்.

இந்த திரைப்படத்தை முதல் முறை அனைவருக்காகவும் பார்ப்பீர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை.. படத்தில் நடித்திருக்கும் வடிவேலுவிற்காகவே… வடிவேலுவின் நடிப்பிற்காகவே அனைவரும் பார்ப்பார்கள்.

சந்திரமுகி படத்தின் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு பாடல்களை உருவாக்கிய பிறகு, இயக்குநர் வாசுவிடம் சந்திரமுகியாக நடிப்பது யார்? என்று கேட்டபோது, இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றார். இறுதியாக சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று நீங்கள் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தத் திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று வெளியாக வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாக தெரிவித்தது.

பொதுவாக பின்னணி இசையை ஒரே ஒரு தொழில்நுட்பக் கலைஞரை மட்டும் பிரதானமாக வைத்து பணியாற்றுவோம். ஆனால் இந்த படத்திற்காக ஏழு திறமையான புரோகிராமர்களை வரவழைத்து இப்படத்தின் பின்னணி இசையை அமைத்தோம். தரம் குறையாமலும் விரைவாகவும் உருவாக்கி இருக்கும் பின்னணி இசை எப்படி இருக்கிறது? என்று ரசிகர்களாகிய நீங்கள் தான் படத்தை பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.

சந்திரமுகி முதல் பாகத்தில் பிரபலமான வசனம் ஒன்று உண்டு ‘லக லக லக லக லக’. இந்த வசனத்தை பேசியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவர் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னது போல்… ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நீங்கள் கேட்கப் போவது ‘லைக்கா லைக்கா லைக்கா லைக்கா லைக்கா.” என்றார்.

Keeravani speech at Chandramukhi 2 audio launch

மாணவர்களுக்காக ‘கடைசி விவசாயி’.; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த சௌந்தரராஜா

மாணவர்களுக்காக ‘கடைசி விவசாயி’.; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரஜின் நாயகனாக நடித்துள்ள படம் ‘அக்கு’. இந்த படத்தின்ய பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்றார் நடிகர் சௌந்தரராஜா. இவர் மேடையில் பேசும்போது…

“இந்தப் படத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை ஆனால் ப்ரஜின் நண்பராக நான் வந்துள்ளேன். 2002 ஆம் ஆண்டில் சின்னத்திரைகளில் ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்பட்டவர் பிரஜின்.

அப்போது முதலே அவர் சினிமாவில் தீவிரம் காட்டி நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நாங்கள் நட்புடன் இருக்கிறோம். அவருக்கான களம் இன்னும் சரியாக அமையவில்லை. ஆனாலும் போராடிக் கொண்டே இருக்கிறோம்.

நீங்கள் கேட்கலாம்.. போராட்டம் போராட்டம் என்கிறீர்களே அப்படி ஏன் ஒரு வாழ்க்கை ? என கேட்கலாம்.. மக்களை மகிழ்விக்க மட்டுமே நாங்கள் போராடிக் கொண்டிருக்கும். மக்களின் கைத்தட்டலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசி கொள்ளும்போது எம்ஜிஆர் மற்றும் விக்ரம் ஆகிய இருவரைதான் நாங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். (அவர்களுக்கும் 40 வயதுக்கு மேல் தான் சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் உருவானது)

பிரஜினுக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்.. இத்துடன் நான் மேலும் ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்.

சமீபத்தில் 69ஆவது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்ற அனைத்து கலைஞருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மேலும் மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ என்ற படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. இதன் மூலம் நான் தமிழக அரசிற்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.

‘கடைசி விவசாயி’ படத்தில் விவசாயின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருந்தனர். மேலும் விவசாயம் இல்லை என்றால் நாம் இல்லை. இந்த கருத்து மாணவர்களிடையே சென்று சேர வேண்டும்.

எனவே பள்ளி மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காட்ட வேண்டும்.. இந்த படம் வியாபார ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் உலக அளவில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது முக்கியமாக குழந்தைகள் மற்றும் மாணவர்களை சென்றடைய வேண்டும் என்பதால் இந்த படத்தை மாணவர்களுக்காக திரையிட்டு காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார் சௌந்தரராஜா.

Soundararaja request Tn Govt to screen Kadaisi Vivasayi for students

புது மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா.; யுவன் – எலன் – கவின் கூட்டணி அப்டேட்

புது மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா.; யுவன் – எலன் – கவின் கூட்டணி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுவன் சங்கர் ராஜா தன் YSR ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்து இசையமைத்திருந்த படம் ‘பியார் பிரேமா காதல்’.

ஹரிஷ் கல்யாண் நடித்திருந்த இந்த படத்தை எலன் என்பவர் இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணையுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக கவின் நடிக்க உள்ளார்.

‘டாடா’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு கவின் நடிக்கும் படமாக இது உருவாகிறது. மேலும் சமீபத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தான் கவினுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தப்பட டைட்டில் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் கவின் யுவன் எலன் ஆகிய மூவரும் இணைந்துள்ளனர்.

இதற்கான டிசைன் ஆங்கில பத்திரிக்கை போல டிசைன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுவன் - எலன் - கவின்

Yuvan Kavin Elan join hands together for new venture

ரஜினியின் ‘தலைவர் 170’ படப்பூஜை.; அமிதாப் – பஹத் – மஞ்சு பங்கேற்பு.?

ரஜினியின் ‘தலைவர் 170’ படப்பூஜை.; அமிதாப் – பஹத் – மஞ்சு பங்கேற்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வந்தது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 530 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த படம் உருவான நேரத்திலேயே ‘லால் சலாம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2024 ஜனவரியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படங்களை முடித்துவிட்டு ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கப்பட உள்ளது என கூறப்பட்டு வரும் நிலையில் இன்று ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னையில் பிரபலமான ஒரு இடத்தில் தலைவர் 170 பட பூஜை நடைபெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை மஞ்சுவாரியர் ஆகியோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

Rajinis Thalaivar 170 movie pooja happened

More Articles
Follows