ரஜினியுடன் கம்பேர் பண்ணாதீங்க.. கூல் சுரேஷால் அப்டேட் பண்ணிக்கிறேன் – பி.வாசு

ரஜினியுடன் கம்பேர் பண்ணாதீங்க.. கூல் சுரேஷால் அப்டேட் பண்ணிக்கிறேன் – பி.வாசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சந்திரமுகி 2’ ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பி வாசு பேசுகையில்…

”இந்த விழாவிற்கு வருகை தந்து அமராமல் நின்று கொண்டே அயராது உற்சாகம் அளித்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர்கள், நடிகர் -நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்களைத்தான் என்னுடைய குடும்பமாக கருதுகிறேன்.

இந்த படம் வெற்றி அடையும் போது 50 சதவீதம் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், 50 சதவீதம் நடிகர் நடிகைகளுக்கும் அந்த வெற்றி சேரும்.

என்னிடம் அடிக்கடி வளர்ந்து விட்ட டெக்னாலஜியை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்பார்கள். அதற்கு ஒரே உதாரணம் கூல் சுரேஷ். அவரைப் போன்ற பலரைப் பார்த்து என்னை நான் அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். அவர் இயக்குநர் இல்லை.

இருப்பினும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கிறார். இவரை போன்ற கலைஞர்களை பாராட்டுவது தான் என் போன்றோரின் கடமை.

அதே போல் தான் நான் இயக்குநராக பணியாற்றும்போது ராகவா லாரன்ஸ் என்னிடம், ‘நான் நான்காவது வரிசையில் ஆடிக் கொண்டிருக்கிறேன். ஒரு வரிசை முன்னேறி மூன்றாவது வரிசையில் ஆட மாட்டேனா என ஏங்குகிறேன் சார்’ என்பார்.

நான்காவது வரிசையிலிருந்து முதல் வரிசையில் ஆடி நடன உதவியாளராகி நடன இயக்குநராகவும் கடின உழைப்பால் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு என்னுடைய இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியவர். அதன் பிறகு கதாநாயகனாகி.. நல்ல செயல்களை செய்து.. அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.

அவருடைய முயற்சியில்.. அவருடைய உழைப்பில்.. இந்த இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறார். தன்னிடம் இருப்பதை மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்கும் நல்ல மனதுள்ள மனிதர்.

இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லாரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் பற்றியும் நீங்கள் பேசுவீர்கள். ஏனெனில் அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.

எங்களுக்கு கிடைத்த அருமையான முதலாளி சுபாஸ்கரன். அவரைப் பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்.. அவரால் பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்கிறது.

ஆனால் இது எதுவும் தெரியாமல் இருப்பவர்தான் சுபாஸ்கரன். நான் என்னுடைய உதவியாளர்களுக்கும், பணியாற்றுபவர்களுக்கும் இவரைப் பற்றி சொல்வதுண்டு. முதலாளி எங்கேயோ இருந்து.. சம்பாதித்து..

நமக்காக அனுப்புகிறார். அவர் நமக்கு தயாரிப்பாளராக கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம். நமக்கு மட்டுமல்ல தமிழ் திரையுலகத்திற்கே மிகப்பெரும் பாக்கியம். அவருடைய நம்பிக்கையை பெற்ற ஒரே நபர் நம் ஜி.கே.எம் தமிழ் குமரன் தான்.

ஆடியோ வெளியிட்டு விழாவில் என் அருகில் அமர்ந்திருந்தார் சுபாஸ்கரன். மாற்றுத்திறனாளி கலைஞர்கள் மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது தமிழ்குமரனை அழைத்து ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார். உடனடியாக அவர்களுக்கு மேடையிலேயே ஒரு கோடி ரூபாய் நன்கொடையை வழங்கியதுடன் மட்டுமல்லாமல் அவர்களுடன் அமர்ந்தார்.

நல்ல மனிதர். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் அது இந்த படத்தின் வெற்றியிலும் தெரியும்.

‘சந்திரமுகி’ படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்து திருப்தியுடன் சென்றீர்களோ… அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘சந்திரமுகி 2’ படத்தை காண வாருங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இன்னொரு விசயத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன். சூப்பர் ஸ்டாருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். புரட்சி நடிகர் எம் ஜி ஆர் மட்டும்தான்… நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான்… விஜய், அஜித் என ஒவ்வொருத்தருக்கும் உலக அளவில் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது.

அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதற்கு உண்டான பலனை மக்கள் அளிக்கிறார்கள். அதேபோல் அதற்கு உண்டான பட்டத்தையும் மக்களே வழங்குவார்கள். அதனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை. நன்றி” என்றார்.

P Vasu speech at Chandramukhi 2 Trailer launch

முதன்முறையா காமெடி ஹாரர் படம்.; ரசம் சாதம் புடிக்கும்.; கங்கனா லக லக லக..

முதன்முறையா காமெடி ஹாரர் படம்.; ரசம் சாதம் புடிக்கும்.; கங்கனா லக லக லக..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது.

பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.

ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ‘சந்திரமுகி 2’ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கே எம் தமிழ் குமரன், இயக்குநர் பி. வாசு, ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், குழந்தை நட்சத்திரங்கள் மானசி, தீக்ஷா, நடிகர்கள் ரவி மரியா, விக்னேஷ், கூல் சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில்,…

‘ நான் முதன்முதலாக ‘சந்திரமுகி 2’ என்ற காமெடி ஹாரர் படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் இந்தி பதிப்பில் நான் பின்னணி பேசி இருக்கிறேன். பின்னணி பேசும்போது கடினமாகவும், சவாலாகவும் இருந்தது.

குறிப்பாக லக லக லக பேசும்போது. இந்தப் படத்தில் நடனம் ஆடி இருக்கிறேன். பேயாயாகவும் நடித்திருக்கிறேன்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை எனக்கு ரசம் சாதம் மிகவும் பிடிக்கும்.

ராகவா லாரன்ஸ் என்னை ‘ஹாய் கங்கு’ என்று அழைத்ததால், நான் அவரை ‘ஹாய் ராகு’ என அழைக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸ் செய்யும் சில குறும்புகள் ரசிக்கும் படி இருக்கும்.

ஜோக்குகள், குட்டிக்கதை என சொல்லி கலகலப்பாக வைத்திருப்பார். இந்தப் படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். மறக்க இயலாது ” என்றார்.

Kangana Ranawat speech at Chandramukhi 2 Trailer launch

‘காவல்துறை உங்கள் நண்பன்’ பட கூட்டணி மீண்டும் இணைந்தது

‘காவல்துறை உங்கள் நண்பன்’ பட கூட்டணி மீண்டும் இணைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் வித்தியாசமாக புதிய காமெடி டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியுள்ளது.

கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது.

முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர் சுரேஷ் ரவி நடித்த “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சக ரீதியாக தரமான திரைப்படமென பெரும் பாராட்டுக்களை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இதே தயாரிப்பு நிறுவனமும் நடிகர் சுரேஷ் ரவியும் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்போதைக்கு Production No. 2 என்று அழைக்கப்படுகிறது.

இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்து காட்டும் வகையில், சுரேஷ் ரவி, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் கலக்கலான காமெடி டிராமாவாக இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தினை இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


,
இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபா, பாலு, பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா, கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

தொழில் நுட்ப குழு விபரம்…

இயக்கம் – K பாலையா
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
இசை – N R ரகுநந்தன்
படத்தொகுப்பு – தினேஷ் போனுராஜ்
கலை – C S பாலச்சந்தர்
ஆடை வடிவமைப்பாளர் – N J சத்யா
PRO – Sathish (AIM)

Kavalthurai Ungal Nanban Producer & Actor Collaborate Again

ஜெயம் ரவி – நயன்தாரா ஜோடியின் உறைய வைக்கும் ‘இறைவன்’

ஜெயம் ரவி – நயன்தாரா ஜோடியின் உறைய வைக்கும் ‘இறைவன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார்.

2 நிமிடம் 35 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லர் ஒரு மனநோயாளி கொலையாளியின் (ராகுல் போஸ் நடித்துள்ளார்) இருண்ட உலகத்தையும், கதாநாயகனின் (ஜெயம் ரவி) வருகையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

நேர்மையும் கோபமும் கொண்ட இளம் காவல் துறை அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார்.

இயக்குநர் அகமதுவின் முந்தைய படங்களான ‘மனிதன்’, ‘என்றென்றும் புன்னகை’ ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு, புதிய ஜானரில் தனது இயக்கத் திறமையை நிரூபிக்கும்படி டிரெய்லர் அமைந்திருப்பது பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இதில் ஜெயம் ரவியுடன் நயன்தாராவின் கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது. ராகுல் போஸ், நரேன், விஜயலட்சுமி, ஆஷிஷ் வித்யார்த்தி, பக்ஸ் மற்றும் பல பிரபலமான நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

‘இறைவன்’ படம் செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

*தொழில்நுட்ப குழு விவரம்:*

தயாரிப்பு : சுதன் சுந்தரம் & ஜெயராம் . G,
எழுத்து மற்றும் இயக்கம்: ஐ. அகமது,
இசை : யுவன் சங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: ஹரி.கே.வேதாந்த்,
எடிட்டர் : ஜே.வி.மணிகண்ட பாலாஜி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஜாக்கி,
நிர்வாக தயாரிப்பாளர்: அருணாசலம்
சண்டைப் பயிற்சி: டான் அசோக்,
வசனம்: சச்சின், கார்த்திகேயன் சேதுராஜ்,
உடைகள்: அனு வர்தன் (நயன்தாரா),
பிரியா கரண் & பிரியா ஹரி,
விளம்பர வடிவமைப்புகள்: கோபி பிரசன்னா

Jayam Ravi Nayanthara starrer Iraivan trailer goes viral

மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றங்கள் நிகழும்.; நம்பிக்கையில் தங்கர்பச்சான்

மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றங்கள் நிகழும்.; நம்பிக்கையில் தங்கர்பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை பார்க்க நினைத்தாலும் குடும்பத்தினருடன் பார்ப்பதற்கு வசதி இல்லாத படி காலை காட்சியும் இரவு காட்சிகளுமே முக்கால்வாசி திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டு இருந்தன.

படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவிப்பதாலும் இரண்டாவது தடவை பார்க்க தொடங்கி விட்டதாலும் ஒவ்வொரு நாளும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றன.

இதனால் நேற்று பல திரையரங்கங்கள் நிரம்பி இருக்கின்றன.

இன்றிலிருந்து கூடுதலான காட்சிகளை ஒதுக்கியதுடன் அதிகப்படியான காட்சிகளை குடும்பத்தினருடன் காண்பதற்கு வசதியாக 2.30, 6.30 காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை திரையிடாத பல ஊர்களிலும் நேற்றிலிருந்து புதிய அரங்கங்களில் படத்தை திரையிடத் தொடங்கி விட்டனர்.

எத்தகைய மாற்றங்களும் மக்கள் நினைத்தால் மட்டுமே நிகழும். ‘கருமேகங்கள் கலைகின்றன’ இப்பொழுது படம் பார்ப்பவர்களின் கைக்கு சென்றுவிட்டது.

யாருக்காக இப்படைப்பு உருவாக்கப்பட்டதோ அவர்கள் இனி இதைக் கொண்டு சென்று அனைவருக்கும் சேர்த்து விடுவார்கள் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது.

– தங்கர் பச்சான்

தங்கர்பச்சான்

Change happens only when people think says thankarbachan

இதற்கு ஏன் இவ்வளவு பில்டப்.? சிவகார்த்திகேயனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

இதற்கு ஏன் இவ்வளவு பில்டப்.? சிவகார்த்திகேயனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபகாலமாகவே நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட ‘மாவீரன்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தலையில் தலைப்பாகை அணிந்திருந்தார்.

அப்போதே அவர் இது ‘எஸ் கே 21’ படத்திற்கான கெட்டப் என்று கூறி வந்தார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக தான் இந்த புதிய கெட்டப் என்று கூறி வந்தார். இதன் ஷூட்டிங் கடந்த சில தினங்களாகவே காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீர் சூட்டிங் முடிவடைந்தது என தெரிவித்திருந்தது படக்குழு.

அப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். அப்போது சிவகார்த்திகேயன் தலைப்பாகை அணியவில்லை. மிலிட்டரி மேனாக சிவகார்த்திகேயன் நடிப்பதால் அதற்காக தலைமுடியை ஒட்ட வெட்டி உள்ளார்.

இதற்காகத்தான் இத்தனை நாள் இவ்வளவு பில்டப் கொடுத்தாரா சிவகார்த்திகேயன்? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Why so buildup for Sivakarthikeyan 21 movie getup

More Articles
Follows