தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லிங்கா பிரச்சினையால் ‘முடிஞ்சா இவன புடி’ படம் சிக்கலில் உள்ளது என்பதை நாம் முன்பே நம் தளத்தில் பார்த்தோம்.
தற்போது இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளதாவது…
“இப்படத்தின் தயாரிப்பாளர் ராம்பாபு ‘முடிஞ்சா இவன புடி’ படத்தில் ‘ரஜினி வழங்கும்’ என்றுதான் இப்படத்தின் பேனரில் டிசைன் செய்ய ஆசைப்பட்டார்.
ஆனால் ரஜினி சாரின் விருப்பம் இல்லாமல் அப்படிச் செய்யக்கூடாது என்று பின்னர் விட்டுவிட்டார்.
ராம்பாபுவின் நெருங்கிய நண்பர் ராக்லைன் வெங்கடேஷ் என்பதால்தான் அந்த நட்பின் காரணமாக பேனர்களில் அவரின் பெயரை போட்டார்.
ஆனால், அது வெங்கடேஷின் சொந்தப்படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது.
இதனால் ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் பணம்கேட்டு வந்தனர்.
நேற்று இரவே பணத்திற்கான செட்டில்மென்ட் முடிவடைந்து விட்டது.
எனவே, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 12-ம்தேதி (நாளை) ‘முடிஞ்சா இவன புடி’ ரிலீஸாகும்’ என்று தெரிவித்துள்ளார்.