EXCLUSIVE : அருண் பிரசாத் இயக்கத்தில் MS பாஸ்கர் – வெண்பா – விஸ்வாந்த் இணைந்த படம்

EXCLUSIVE : அருண் பிரசாத் இயக்கத்தில் MS பாஸ்கர் – வெண்பா – விஸ்வாந்த் இணைந்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அந்திரன்’ என்ற குறும்படத்தை எடுத்து தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் அருண் கே பிரசாத்.

இவர் தற்போது வெள்ளித்திரையில் தன் பயணத்தை தொடங்கியுள்ளார்.

அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் புதிய படம் உருவாகி உள்ளது.

வெண்பா

இதில் எம் எஸ் பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க இளம் ஜோடிகளாக ‘கபாலி’ புகழ் விஷ்வந்த் மற்றும் வெண்பா நடிக்கின்றனர்.

இவர்களுடன் நமோ நாராயணன், ஆகாஷ், ‘சார்பாட்டா’ கார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வேல்ராஜிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் ரிலீசான ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்திற்கு இசையமைத்த எஸ் ஆர் ஹரி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

வெண்பா

இப்படத்தின் சண்டை பயிற்சிகளை சரவெடி சரவணன் அமைத்துள்ளார். மணிகண்டன் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

‘குன்றம் ப்ரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக காஞ்சனா தேவி கார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த நிறுவனத்தின் முதல் படைப்பாகும்.

இன்னும் பெயரிடாத இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.

வெண்பா

MS Baskar Viswanth and Venba new movie update

ஹரிஷ் கல்யாண் & அதுல்யா நடித்துள்ள ‘டீசல்’ படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில்..!

ஹரிஷ் கல்யாண் & அதுல்யா நடித்துள்ள ‘டீசல்’ படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் திருமணம் செய்து கொண்டர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

இவர், தற்போது அதுல்யா ரவியுடன் இணைந்து ‘டீசல்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படத்தில் வினய் வில்லனாகவும், அவருக்கு ஜோடியாக அனன்யா நடிக்கிறார்.

மேலும், சாய் கிருஷ்ணா, கருணாஸ் மற்றும் தங்கதுரை ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

சண்முகம் முத்துசாமி இயக்கும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், தங்கதுரையுடன் இணைந்து ஒரு சிறிய வீடியோவில் “இறுதி அட்டவணையின் முடிவை நோக்கிச் செல்கிறோம்” என கூறி இருந்தார்.

Harish Kalyan Athulya starrer ‘Diesel’ in final shoot

5000 மாணவர்கள் மத்தியில் ‘என்ஜாய்’.; தயாரிப்பாளர் கே.ராஜன் பங்கேற்றார்.!

5000 மாணவர்கள் மத்தியில் ‘என்ஜாய்’.; தயாரிப்பாளர் கே.ராஜன் பங்கேற்றார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் #என்ஜாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேல்டெக் யுனிவர்சிட்டி பல்கலைகழகத்தில் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்ற கல்ச்சுரல் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

சென்னை விநியோகஸ்தர் சங்க தலைவரும் தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் கலந்துக் கொண்டு போஸ்டரை வெளியிட்டார்.

நிகழ்சியில் LNH கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் க. லட்சுமி நாராயணன், மற்றும் கல்லூரி நிற்வாகிகள், படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்துக் கொண்டனர்.

Producer K Rajan launches Enjoy first look

ஒரு கெத்து.. ஒரு குத்து.; ‘துணிவு’ பாடல்கள் பற்றி ஜிப்ரான் & கல்யாண் சூப்பர் அப்டேட்

ஒரு கெத்து.. ஒரு குத்து.; ‘துணிவு’ பாடல்கள் பற்றி ஜிப்ரான் & கல்யாண் சூப்பர் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க மஞ்சு வாரியார் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ‘நான் மிருகமாய் மாற’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார் ஜிப்ரன்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ‘துணிவு’ படத்தின் அப்டேட் கேட்டதற்கு….

” ஒரு அஜித் ரசிகனாக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து இருக்கிறேன்.

பாடல்கள் பக்கா மாஸாக வந்துள்ளது. குத்துப்பாடலும் இருக்கு.. கெத்தான பாடலும் இருக்கும்.. வேறு எதையும் கேட்க வேண்டாம்” என்று நைசாக நழுவி விட்டார் ஜிப்ரான்.

கூடுதல் தகவல்கள்.

இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் “சில்லா…. சில்லா… என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார்.

3 பாடல்களுக்குமே நடன இயக்குனர் கல்யாண் நடனம் அமைத்துள்ளார். இந்த அனைத்து பாடல்களுமே ஆட்டம் போடும் வகையில் இருக்கும் என கல்யாண் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Ghibran and Kalyan reveals about Thunivu Songs & Dance

போலீஸ் கேரக்டர் பண்ணக்கூடாது என இருந்தேன்.; கதிர் முடிவை மாற்றிய யூகி

போலீஸ் கேரக்டர் பண்ணக்கூடாது என இருந்தேன்.; கதிர் முடிவை மாற்றிய யூகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி இணைந்துள்ள படம் ‘யூகி’.

இப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கதிர் பேசியதாவது…

“சுழல் செய்து கொண்டிருக்கும் போது இந்தக்கதை வந்தது. போலீஸ் கேரக்டர் திரும்ப பண்ணக்கூடாது என இருந்தேன் ஆனால் கதை மிகவும் பிடித்திருந்தது.

நட்டி, ஆனந்தி, நரேன் என எல்லோரையும் திருப்தி செய்யக்கூடிய கதை. மிக சுவாரஸ்யமான திரைக்கதையாக இருக்கும். பரியேறும் பெருமாளுக்கு பிறகு கயல் ஆனந்தியோடு நடிக்கிறேன்.

ஆனால் இந்தப்படம் மிக வித்தியாசமாக இருக்கும். பாக்யராஜ் அட்டகாசமாக எழுதியுள்ளார். ஜாக் குழந்தை மாதிரி பேசி வேலை வாங்கி விடுவார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

திருமதி திலகவதி அவர்கள் பேசியதாவது…

மேடை இளம் திறமையாளர்களால் நிறைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் திறமையாளர்கள் இணைந்து வேலை செய்துள்ளார்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது. திரைப்படம் பார்ப்பவரிடத்தில் பெரும் பாதிப்பை தரும் ஒன்று. நல்ல கருத்துக்கள் கூறும் படங்கள் வர வேண்டும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

kathir speech at yugi movie audio launch

நான் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தேன்.; ‘கயல்’ ஆனந்தி ஓபன் டாக்

நான் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தேன்.; ‘கயல்’ ஆனந்தி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி இணைந்துள்ள படம் ‘யூகி’.

இப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கயல் ஆனந்தி பேசியதாவது…

கயல் படம் வந்து 8 வருடன் ஆகிறது. நீங்கள் காட்டி வரும் அன்புக்கு நன்றி. யூகி படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் இப்படம் பண்ணும் போது நான் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தேன்.

மிக மிக சுவாரஸ்யமான கதை. மிக அட்டகாசமாக எடுத்துள்ளார்கள். மிக திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

Kayal Anandhi speech at yugi movie audio launch

More Articles
Follows