தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற ‘பார்க்கிங்’ படத்தில் தன் அசத்தலான நடிப்பை வழங்கியவர் எம்.எஸ். பாஸ்கர்.
தற்போது இவர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. அருண் கே.பிரசாத் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் அவரது மகள்களாக வெண்பா, பிரியதர்ஷினி நடித்துள்ளனர்.
இவர்களுடன் ‘கபாலி’ விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ், பிரேம் குமார், கார்த்திக் சந்திரசேகர் நடித்துள்ளனர். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.ஹரி இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து அருண் கே.பிரசாத் கூறும்போது…
அக்கரன் என்றால் நிலையானவன், அழிக்க முடியாதவன், கடவுள் என்று பல அர்த்தங்கள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி எம்.எஸ்.பாஸ்கரின் மகள்கள் வெண்பா & பிரியதர்ஷனி..
மகள்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இச்செயலை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். தந்தை எம்.எஸ்.பாஸ்கர் தன் புத்தி சாதுர்யத்தால் எப்படி அவர்களை கண்டுபிடித்து பழிவாங்குகிறார் என்பதுதான் கதை. மார்ச் மாதம் படம் திரைக்கு வருகிறது” என்றார்.
மார்ச் 1ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா திரை உலக பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
MS Baskar Venba Vishwanth starring Akkaran