தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார்.
இப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. எனவே பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் இயக்குநர் மோகன்ராஜா.
அவர் பேசியதாவது….
ஒரு காலத்தில் ரீமேக் படங்களை இயக்குவதால் என்னை ரீமேக் ராஜா என்றார்கள். ஆனால் அதே மீடியா என்னுடைய தனி ஒருவன் படம் வந்தபோது கொண்டாடியது.
படத்தின் முதல்நாளே நீங்கள் கொடுத்த வரவேற்புதான் என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
என்னை பார்த்த பொதுமக்கள் பலரும் பாராட்டி பேசும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
நாளை மறுநாள் வேலைக்காரன் படம் ரிலீஸ். படம் வந்தபிறகும் உங்களை சந்திக்கிறேன்.
அப்படத்தில் சமூக பிரச்சினைகளை சொல்லியிருக்கிறேன். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.
சிவகார்த்திகேயன் இல்லையென்றால் இந்த படம் வந்திருக்காது.” என்றார்.