தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முஸ்தபா முஸ்தபா என்ற பாடலை எப்படி மறக்க முடியாதோ அதுப்போன்று காதல் தேசம் படத்தையும் எவராலும் மறக்கமுடியாது.
இது எல்லாம் ஓகே. இப்போ இந்த படம் ரீமேக் ஆகிறதா? என்பதைதானே கேட்கிறீர்கள்.? ரீமேக் குறித்த பேச்சை இன்று ஒரு விழாவில் கிளப்பி விட்டுள்ளார் மிர்ச்சி சிவா.
திரைவண்ணன் இயக்கத்தில் பவர் ஸ்டாருடன் சிவா இணைந்துள்ள படம் அட்ரா மச்சான் விசிலு. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் சிவா பேசியதாவது…
“இது காமெடி படம் என்றாலும் இதுல ஒரு நல்ல மெசேஜ் இருக்கு. ஒரு நடிகருக்கு ரசிகர்கள் எந்த அளவுக்கு இருக்கணும்னு ஒரு நல்ல விஷயத்தை சொல்லியிருக்கோம்.
நான் சென்னை பையனாக இருந்தாலும் மதுரை பாஷை பேசி நடிச்சிருக்கேன்.
ஒரு காட்சியில் நடிக்கும்போது இப்படிதான் ரியாக்சன் கொடுக்கலாம்னு நமக்கு தெரியும். ஆனா இப்படி கூட ரியாக்சன் கொடுக்க முடியுமா? அப்படிங்கிறதை பவர் ஸ்டாரை பார்த்து நான் தெரிஞ்சுக்கிட்டேன்.
இந்தப்படத்துல பவர் ஸ்டாரோட தீவிரமான ரசிகனா நான் நடிச்சிருக்கன். அவருக்கு 22வது பிறந்த நாள் கொண்டாடுற மாதிரி ஒரு பாடல் படத்துல இருக்கு.
ஆனா இப்ப நேர்ல பார்த்தா, இவருக்கு 21 வயசு போல தெரியுது.
காதல் தேசம் அப்பாஸுக்கு செம போட்டியா இவரு இருக்காரு. அந்தப்படத்தை ரீமேக் செய்தால், நான் வினீத் ஆகவும் பவர் ஸ்டார் அப்பாஸாகவும் நடிக்க ரெடியா இருக்கோம்” என்று கலகலப்பாக பேசினார் சிவா.