‘சிவாவும் பவர் ஸ்டாரும் ரீடேக் எடுக்க நானே காரணம்.’- காசி விஸ்வா..!

Cinematographer Kasi Vishwa opens up about 'Adra Machan Visiluமிர்ச்சி சிவா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் இணைந்து நடித்துள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் ஜூலை-7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கச்சேரி ஆரம்பம் புகழ் திரைவண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தன் அனுபவம் குறித்து, இப்படத்தின் ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா தெரிவித்துள்ளதாவது..

“நானும் திரைவண்ணனும் நல்ல நண்பர்கள். ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தில் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதால், இப்படத்திற்கு முன்பே திட்டமிட்டோம்.

தயாரிப்பாளர் கோபி நாங்கள் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்தார்.

சென்னை, மதுரை பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சுமார் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.

சிவாவும் பவர்ஸ்டாரும் ஸ்பாட்டில் இருந்தாலே ஒரே கலாட்டாவாக இருக்கும். இருவரும் சேர்ந்து நடிக்கும் போது என்னை அறியாமலேயே சிரித்துவிடுவேன்.

அப்போது கேமரா ஷேக்காகி விடும். என்னாலேயே சிலமுறை ரீடேக் எடுக்கும் சூழ்நிலையும் உருவானது.

டான்ஸ் என்றால் சிவா கொஞ்சம் கூச்சப்படுவார். ஆனால் அவரை தைரியப்படுத்தி டான்ஸ் ஆடவைத்துள்ளோம்.

பவர்ஸ்டார் டான்சும் பட்டையை கிளப்பும்.

இயக்குனர் திரைவண்ணனை பொறுத்தவரை தான் நினைத்ததை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். அதற்கு நான் உறுதுணையாக இருந்து இருக்கிறேன் என்பதை உறுதியாக சொல்வேன்.

ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்தப்படம் அமையும்” என்றார் காசி விஸ்வா.

Overall Rating : Not available

Related News

விஜய் டிவி சின்னத்திரை என்றாலும். இதன்…
...Read More
மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன்…
...Read More
ரஜினி நடித்து, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும்…
...Read More

Latest Post