ரஜினி விலகியதால் படையெடுக்கும் சிபிராஜ்-சிவா..!

Sibiraj and Shiva's Movie to Release on July 1st !ரஜினி நடித்து, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கபாலி வருகிற ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

எனவே இப்படத்தின் வருகையால் பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டன.

ஆனால் தற்போது கபாலி தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், மற்ற படங்கள் வரிசைக் கட்ட ஆரம்பித்து விட்டன.

எனவே அன்றைய தினத்தில் ‘ஜாக்சன் துரை’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பர்மா’ படத்தை தொடர்ந்து தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதனைத் தொடர்ந்து திரைவண்ணன் இயக்கியுள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படமும் ஜூலை-1ல் ரிலீஸ் ஆகிறது.

மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், நைனா சர்வார், சென்ட்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா, ராஜ்கபூர், செல்வபாரதி உட்பட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி படத்தை…
...Read More
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “…
...Read More
தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர்…
...Read More

Latest Post