‘ரஜினி – நயன்தாரா தான் என் பேவரைட்டு…’ ‘அட்ரா மச்சான் விசிலு’ நைனா சர்வார்

‘ரஜினி – நயன்தாரா தான் என் பேவரைட்டு…’ ‘அட்ரா மச்சான் விசிலு’ நைனா சர்வார்

actress naina sarwarதிரைவண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அட்ரா மச்சான் விசிலு. சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது.
கன்னடத்தில் பிரபலமான நைனா சர்வாருக்கு இதுதான் முதல் தமிழ் படம்.

இந்நிலையில், தனது சினிமா அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட போது கூறியதாவது… “நான் பி காம் ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன். சொந்த ஊரு பெங்களூரு.

இப்படத்தில் எனக்கு நகைச்சுவையுடன் கூடிய பப்ளியான கேரக்டர். உடனே ஒப்புக் கொண்டேன். ஹீரோ சிவாவுடன் நடிக்கும்போது கன்வீனியன்டாக இருந்தது. தமிழைப் புரிந்து கொள்வேன். ஆனால் பேச தெரியாது.

நானும் இயக்குனரும் சிவா மூலம்தான் பேசிக் கொள்வோம். இப்படத்தில் பவர் ஸ்டாருடன் எனக்கு காட்சிகள் கிடையாது. அவருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் தயக்கம் இல்லாமல் நடிப்பேன்.

என் பேவரைட் ஹீரோ எவர்கிரீன் ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான். ஹீரோயின் நயன்தாராதான்” என்றார்.

ரெமோ ஆன்ட்டி பற்றிய தன் மகள் கேள்விக்கு பதில் சொல்லாத சிவகார்த்திகேயன்…!

ரெமோ ஆன்ட்டி பற்றிய தன் மகள் கேள்விக்கு பதில் சொல்லாத சிவகார்த்திகேயன்…!

remo movie stillsநடிகர் சிவகார்த்திகேயன் தன் உறவுக்கார பெண் ஆர்த்தியை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

தற்போது இத்தம்பதியருக்கு ஆராதனா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

அதுவும் பெண் வேடம் குறித்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதனிடையில் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அதில் ஆங்கிலத்திலேயே பேசி அசத்தியிருக்கிறார்.

அதில்… ‘என் மகளுக்கு ரெமோ டீசர் மிகவும் பிடித்துவிட்டது. அடிக்கடி பார்ப்பாள்.

அந்த அம்பு பட்டவுடன் நீங்க ரெமோ ஆன்ட்டியாக மாறிடுவீங்களாப்பா? என் கேட்பாள்.

எனக்கு என்ன பதில் என்ன சொல்வதென்றே தெரியாது’ என என்று தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் அடுத்த படத்தலைப்பு வெளியானது..!

நயன்தாராவின் அடுத்த படத்தலைப்பு வெளியானது..!

actress nayantharaமாயா என்ற த்ரில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே போன்ற ஒரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

இப்படத்தை இயக்குனர் சற்குணம் தயாரிக்கிறார்.

தாஸ் இயக்கும் இப்படத்திற்கு தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு டோரா (#Dora) என பெயரிடப்பட்டுள்ளது.

இத்தகவலை அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் காஷ்மோரா, திருநாள், இருமுகன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

AAA படத்தில் சிம்புவின் ஜோடி யார்? ஸ்ரேயா-த்ரிஷா..?

AAA படத்தில் சிம்புவின் ஜோடி யார்? ஸ்ரேயா-த்ரிஷா..?

shriya and trishaஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

மூன்று கேரக்டர்களையும் வேறுபடுத்தி காட்ட கடும் உடற்பயிற்சி செய்து தன் உடல் அமைப்பை மாற்றி வருகிறார்.

இதில் ஒரு கேரக்டர் கொஞ்சம் வயதான கேரக்டராம்.

அந்த கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம்.

இந்த கேரக்டர் அம்மா கேரக்டர் என்றும் ஸ்ரேயா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை சிம்புவும் ஸ்ரேயாவும் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சிமா மோகன் விஷாலுடன் நடிக்கிறாரா? இல்லையா..?

மஞ்சிமா மோகன் விஷாலுடன் நடிக்கிறாரா? இல்லையா..?

manjima mohan stillsலிங்குசாமி இயக்கும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் விஷால், ராஜ்கிரண் இருவரும் நடிக்கின்றனர்.

நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார் என்ற செய்தி இணையத்தளங்களில் வெளியானது. ஆனால் இந்த செய்தியை மஞ்சிமா மறுத்துள்ளார்.

‘சண்டக்கோழி 2’ படத்தில் நான் நடிக்கிறேனா? என்று என்னிடம் பலர் விசாரித்தனர். ஆனால் இது தொடர்பாக அப்படக்குழுவினர் யாரும் என்னை சந்திக்கவில்லை. அச்செய்தி முற்றிலும் வதந்தியே” என்றும் தெரிவித்துள்ளார்.

கபாலி கிரெடிட் கார்டு… திரையுலகையே ஆச்சரியப்படுத்தும் ரஜினி..!

கபாலி கிரெடிட் கார்டு… திரையுலகையே ஆச்சரியப்படுத்தும் ரஜினி..!

kabali credit card(1)ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் விளம்பரங்கள் மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்திய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

ஏர் ஏசியா விமானங்களில் ரஜினியின் கபாலி படம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது ஏர் ஏசியா.

இவற்றை தொடர்ந்து மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் கைகோர்த்துள்ளதை பார்த்தோம்.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் ரஜினியின் ‘கபாலி’ உருவத்தை எமோடிக்கானாக (emoticons) வைத்துள்ளதாம்.

இந்தியாவில் தற்போது வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை உள்ளது.

மேலும் கபாலிக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிட்டி பேங்க் நிறுவனமும் விளம்பரத்தில் குதித்துள்ளது.

இந்த வங்கி ‘கபாலி’ கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இது மாதிரியான விளம்பரங்கள் இல்லை என்பதால் அனைவரும் ரஜினியின் புகழை இன்னும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

More Articles
Follows