சந்தானத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிய மாகாபா ஆனந்த்.!

சந்தானத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிய மாகாபா ஆனந்த்.!

santhanamவிஜய் டிவி சின்னத்திரை என்றாலும். இதன் மூலம் சிறந்த கலைஞர்களை பெரிய திரை பெற்றுள்ளது.

சந்தானம், ஜெகன் தொடங்கி, ரஜினி ஜீவா, ரோபா சங்கர், மா கா பா ஆனந்த் மற்றும் லொள்ளு சபா கலைஞர்கள் வரை அது நீள்கிறது.

இந்நிலையில் இன்று ஜீலை 7ஆம் தேதி ரம்ஜான் தினத்தை முன்னிட்டு சந்தானம் மற்றும் மா கா பா ஆனந்த் ஆகிய இருவரின் படங்கள் வெளியாக இருந்தன.

இவர்களின் தில்லுக்கு துட்டு மற்றும் அட்டி ஆகிய இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அட்டி படம் இன்று வெளியாகவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே தில்லுக்கு துட்டு, அட்ரா மச்சான் விசிலு, அர்த்தநாரி உள்ளிட்ட படங்கள் இன்று வெளியாகிறது.

சமுத்திரக்கனியின் தொண்டன் படத்தில் சசிகுமாருக்கு பதிலாக ஜெயம் ரவி

சமுத்திரக்கனியின் தொண்டன் படத்தில் சசிகுமாருக்கு பதிலாக ஜெயம் ரவி

Jayam Raviதமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் இணைந்தே பயணித்து வருபவர்கள்.

ஒருவர் நடித்தால், மற்றொருவர் இயக்குவதும், மற்றொருவர் நடித்தால் ஒருவர் தயாரிப்பதும் என தங்கள் கூட்டணி மூலம் தரமான படைப்புகளை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள தொண்டன் படத்தை சமுத்திரக்கனி இயக்கவுள்ளார்.

ஆனால் இக்கதையை சசிகுமாருக்காக எழுதியாக சமுத்திரக்கனியே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் அல்லேரி நரேஷ் நடிக்கிறாராம்.

இந்தாண்டு இறுதியில் தொண்டன் படத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தல 57 ஆரம்பம்… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தல 57 ஆரம்பம்… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

ajith in thala 57வேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்ற செய்தி மட்டுமே கடந்த சில மாதங்களாக பேசப்பட்டது.

ஆனால் இது தொடர்பாக பூஜையோ, அதிகாரப்பூர்வ அறிவிப்போ ஒன்றும் வெளியாகவில்லை.

இதனிடையில் ஆடி மாதம் தொடங்குவதற்குள் இப்படத்தின் பூஜை போடப்படும் என தகவல்கள் வந்தன.

இந்நிலையில் இன்று இப்படத்தின் பூஜை போடப்பட்டு கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

பாடல்களை கபிலன் எழுத அனிருத் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவை வெற்றியும் படத்தொகுப்பை ரூபனும் கவனிக்கிறார்கள்.

மற்ற கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

வெகுநாட்களாக காத்திருந்த அறிவிப்பு இன்று வெளியானதும் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

எப்போ வருதாம்…? சிம்புவின் ‘தாறுமாறு தக்காளிச்சோறு’

எப்போ வருதாம்…? சிம்புவின் ‘தாறுமாறு தக்காளிச்சோறு’

simbuசிம்பு தன் படங்கள் மட்டுமில்லாது மற்ற படங்களிலும் பாடி வருகிறார்.

அண்மையில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வீர சிவாஜி’ படத்திற்காக ‘தாறுமாறு தக்காளிச்சோறு’ என்ற பாடலை பாடினார்.

இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்பாடல் வருகிற ஜீலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இமான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கணேஷ் விநாயக் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ஷாம்லி நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜான் விஜய், ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

எஸ்.நந்தகோபால் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதன் வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

மா.கா.பா.வின் ‘அட்டி’ இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதா..?

மா.கா.பா.வின் ‘அட்டி’ இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதா..?

atti movie postersடிவி. நிகழ்ச்சியில் ஜொலித்து கொண்டிருக்கும் பலரும் இன்று சினிமாவில் பிஸியாகி வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது மா.கா.பா. ஆனந்தும் இணைந்துள்ளார்.

இவர் தனி நாயகனாக நடித்துள்ள அட்டி படம் நாளை வெளியாகிறது. நாயகியாக அஷ்மிதா நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் ராம்கி, மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளனர்.

சுராஜின் உதவி இயக்குனர் விஜய பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு சுந்தர்சி பாபு இசையமைத்துள்ளார்.

இப்படத்தை பார்த்த இசையமைப்பாளரே இப்படத்தின் விநியோகஸ்தராகவும் மாறிவிட்டாராம்.

தமிழகத்தில் மட்டும் சுமார் 125 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

சிவகார்த்திகேயனுக்கும் த்ரிஷாவுக்கும் இப்படியொரு கனெக்ஷனா?

சிவகார்த்திகேயனுக்கும் த்ரிஷாவுக்கும் இப்படியொரு கனெக்ஷனா?

sivakarthikeyan and trishaபாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள ரெமோ படத்தில் பெண் வேடமேற்று நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியானது முதல் ரெமோவின் எதிர்பார்ப்பு சற்றே எகிறியுள்ளது.

இந்த லேடீ கெட்டப் மேக்கப் அப்புக்காக மட்டும் கிட்டதட்ட 5 மணி நேரம் ஆனதாம்.

இதனைத் தொடர்ந்து த்ரிஷா நடித்துள்ள நாயகி படத்தின் மேக்கப் அப் தகவலும் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் த்ரிஷா இருவேடங்களில் நடித்துள்ளார்.

அதில் ஒன்று 16 வயது பெண்ணாக வருகிறாராம். அந்த வயதுக்கு 1980 கால கட்டத்தில் வரும் பெண்கள் போல மேக்கப் அப் போட்டு இருக்கிறார்கள்.

இதற்காக த்ரிஷாவும் தினமும் 5 மணி நேரம் மேக்கப் போட்டாராம்.

More Articles
Follows