டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரிலீஸாகும் அடிமைப்பெண்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரிலீஸாகும் அடிமைப்பெண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mgr jayalalithaa adimai pennஇந்தாண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை புதுப்பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் ‘தி ரிஷிஸ் மூவீஸ்’ நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன்.கே. ஜூலை 7ம் தேதி வெளியிடுகிறார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும், எம்.ஜி.ஆரும் கடைசியாக நடித்த படம் இது.

இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருக்கிறார். வி.ராம்மூர்த்தி ஒளிப்பதிவு. கே.சங்கர் இயக்கி உள்ளார்.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கிய விதம் வியப்புக்குரிய விஷயமாகும்.

எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்திருக்கிறார். அவரது கட்டுமஸ்தான புஜங்களும், புடைத்த மார்புகளும், உருண்டு திரண்ட தொடைகளும் தெரியும்படியான அவரது அந்த தோற்றம்,

52 வயதிலும், அவர் அனைவரும் ரசிக்கும் அழகனாக இருந்தார் என்பதைக்காட்டுகிறது.

ஜெய்ப்பூர் அரண்மனையில் படப்பிடிப்பு, பாலைவனத்தில் ஒட்டகச் சண்டை, க்ளைமாக்ஸில் சிங்கத்துடன், எம்.ஜி.ஆர் நேருக்கு நேர் மோதும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி என பல கமர்ஷியல் அம்சங்களைக் கொண்ட படம் அடிமைப்பெண்.

சிங்கத்துடனான சண்டைக்காட்சிக்காக, எம்.ஜி.ஆர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார். பாம்பே சர்க்கஸிடம் இருந்து, சிங்கத்தை விலைக்கு வாங்கி, தன்னுடைய சத்யா ஸ்டுடியோவில் பிரத்யேக பயிற்சியாளர் உதவியுடன் ஆறு மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். இசைத்திலகம் கே.வி.மகாதேவன் ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை’ என்ற பாடல் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

இப்படி சுவாரஸ்யமான அம்சங்களுடனும், திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.

வசூலிலும், அந்த காலத்திலேயே இரண்டு கோடியே முப்பது லட்சம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதன் மதிப்பு 350 கோடியை தாண்டியிருக்கும் என்பது வியப்புக்குரிய விஷயம்.

இப்படி பல சிறப்பம்சங்களுக்கும் உரிய ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை 48 வருடங்களுக்குப் பிறகு வாங்கி அதிநவீன டிஜிட்டலில் மாற்றி வெளியிடுவதில் மகிழ்ச்சி என்கிறார் சாய் நாகராஜன்.கே.

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட, அடிமைப்பெண் திரைப்படம், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களையும், சினிமாத்துறையினரையும் தியேட்டருக்கு வரவைக்கும் என்பது நிச்சயம்.

MGR Jayalalitha starring Adimai Penn Digital version release soon

கமலை ரஜினியாக மாற்றிய டைரக்டர் வெங்கட்பிரபு

கமலை ரஜினியாக மாற்றிய டைரக்டர் வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabu motta bossகமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் நடைபெறும் கலாட்டக்களை பலர் பலர் விமர்சித்து வந்தாலும் தினமும் டிவியில் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான வெங்கட் பிரபு Black Ticket Company in Sneak Peak என்ற பெயரில் ஒரு வீடியோவை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் சில நிகழ்வுகளை கிண்டடிலத்துள்ளனர்.

அவரின் வழக்கமான சென்னை 28 டீம் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இதற்காக மொட்டை பாஸ் என்ற கெட்டப்புடன் வெங்கட் பிரபு வலம் வருகிறார்.

சிவாஜி படத்தில்  ரஜினிகாந்த் மொட்டை பாஸ் ஆக மாறியிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Are u guys ready!!! Here is the sneak peak!!!

இதோ அந்த வீடியோவின் பதிவு…

 

 

 

விஜய்-சிவகார்த்திகேயனை தவிர்த்தாரா அஜித் பட இயக்குனர்?

விஜய்-சிவகார்த்திகேயனை தவிர்த்தாரா அஜித் பட இயக்குனர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith siva spotசிறுத்தை என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறுத்தை சிவா என தமிழக ரசிகர்களால் அறியப்பட்டார்.

ஆனால் அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார்.

இதில் விவேகம் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

இப்படத்தை முடித்து விட்டு, விஜய் அல்லது சிவகார்த்திகேயன் படங்களை சிவா இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அஜித் படத்தையே சிவா இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Siva going to join with Ajith after Vivegam

ஜிஎஸ்டியால் ‘இவன் தந்திரன்’ இயக்குனர் கண்ணீர்

ஜிஎஸ்டியால் ‘இவன் தந்திரன்’ இயக்குனர் கண்ணீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ivan thanthiran teamஆர். கண்ணன் தயாரித்து இயக்கிய இவன் தந்திரன் படம் நேற்று வெளியானது.

கவுதம் கார்த்திக், ஷ்ரத்தா, ஆர்.ஜே. பாலாஜி நடித்த இப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது.

இந்த வரியுடன் தமிழக அரசின் நகராட்சி வரியான 30% கேளிக்கை வரியையும் இணைந்துள்ளதால் தமிழக சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் ஜீலை 3ஆம் தேதி முதல் முதல் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.

இதனால் ‘இவன் தந்திரன்’ படத்தின் வசூல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தன் ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார் ஆர். கண்ணன். அதில் அவர் கூறியிருப்பதாவது:

வணக்கம். நான் டைரக்டர் ஆர்.கண்ணன் பேசுறேன். ‘இவன் தந்திரன்’ படத்தின் இயக்குனர். இப்ப படம் ரிலீஸ் ஆகி, சக்சஸ் புல்லா போயிட்டிருக்கு.

அதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு இயக்குனரா என் சகோதரர் பிரின்ஸ் உட்பட பலருக்கும் நன்றி. சில விஷயங்களை ஷேர் பண்ணலாம்னு ஆசைப்படறேன்.

வரும் திங்கட்கிழமை முதல் திடீர்னு ஸ்டிரைக்குன்னு சொல்றாங்க. எந்த முன்னறிவிப்பும் இல்லாம இப்படி திடீர்னு ஸ்டிரைக் அறிவிச்சா, எப்படி? இந்தப் படத்துக்காக வாங்குன கடனை எப்படி அடைக்கிறது?

எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. விக்ரமன் சார், செல்வமணி சார், சேரன் சார், சமுத்திரக்கனி ஏதாவது பண்ணுங்க. யாருகிட்ட போய் பேசறதுன்னு தெரியல. படம் நல்லாயிருக்குன்னு கொண்டாடுறாங்க.

நல்ல விமர்சனங்கள் வருது. இந்த நேரத்துல இப்ப திடீர்னு ஸ்டிரைக் வந்தா என்ன பண்றதுன்னு புரியல.

இவ்வாறு அழுதபடியே கண்ணீருடன் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Ivan Thanthiran director feel sad because of Theater Strike due to GST issue

ஜீலை 7ஆம் தேதி வருகிறார் ஏஜெண்ட் பைரவா

ஜீலை 7ஆம் தேதி வருகிறார் ஏஜெண்ட் பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay agent bairavaaபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு நடித்த பைரவா படம் கடந்த 2017 பொங்கல் அன்று வெளியானது.

இப்படம் தமிழகம் மற்றும் கேரளாவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் தற்போது தயாராகிவிட்டதாம்.

எனவே இதனை வருகிற ஜீலை 7ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையிட உள்ளனர்.

இப்படத்திற்கு தெலுங்கில் ஏஜெண்ட் பைரவா எனப் பெயரிட்டுள்ளனர்.

Vijay Keerthy Suresh starring Agent Bairavaa release on 7th July 2017

மீண்டும் பிரபாஸை இயக்கும் பிரபுதேவா

மீண்டும் பிரபாஸை இயக்கும் பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Once again Prabhu Deva going to Direct Prabhasஒரே படத்தின் மூலம் ஒரு நடிகரால் இந்தியளவில் பிரபலமாக முடியுமா? என்று கேட்டால், அது எப்படி? முடியும் என்பதே பலரின் பதிலாக இருக்கும்.

ஆனால் அதை சாதித்து காட்டியவர் பாகுபலி நாயகன் பிரபாஸ்.

அப்படம் இந்திய சினிமா வசூலில் ரூ. 1800 கோடியை நெருங்கியதால் பிரபாஸை இயக்க பலரும் காத்திருக்கின்றனர்.

இதனையடுத்து, சுஜீத் இயக்கத்தில் “சாஹே” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கமோஷி என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபுதேவா இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம் பிரபாஸ்.

இதற்குமுன்பே பிரபுதேவா இயக்கிய ஆக்ஷன் ஜாக்சன் என்கிற ஹிந்தி படத்தில் பிரபாஸ் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Once again Prabhu Deva going to Direct Prabhas

More Articles
Follows