2017 பொங்கல் ரேஸ்… விஜய்யுடன் மோதும் 5 ஹீரோக்கள்

bairavaa vijayபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் அடுத்த வருடம் 2017 பொங்கல் பண்டிகையொட்டி ரிலீஸ் ஆகிறது.

பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் மற்ற படங்கள் தங்களது வெளியீட்டை தள்ளிப் வைப்பார்கள்.

ஆனால் இம்முறை எவரும் எதிர்பாரா வகையில் அரை டஜன் படங்கள் இந்த பொங்கல் ரேஸில் குவிந்துள்ளன.

அவை பின் வருமாறு…

  1. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள குற்றம் 23 படம் வெளியாகிறது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
  2. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படம் வெளியாகிறது. படத்தின் நாயகனே இசையமைத்து இருக்கிறார்.
  3. ஜெய், பிரணித்தா நடித்துள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் படம். மகேந்திரன் ராஜா மணி இயக்கியுள்ள இப்படத்தில் அஞ்சலி கெஸ்ட் ரோலில் நடிக்க, சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.
  4. கிருஷ்ணா மற்றும் ஸ்வாதி இணைந்து நடித்துள்ள யாக்கை படமும் வெளியாகிறது. குழந்தை வேலப்பன் இயக்க, சத்யா இசையமைத்து இருக்கிறார்.
  5. இத்துடன் கலையரசன், ஜனனி ஐயர், ஷிவதா நாயர் ஆகியோர் நடித்துள்ள அதே கண்கள் படமும் இணைகிறது. ரோகின் வெங்கடேசன் இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
Overall Rating : Not available

Latest Post