ஜெயம் ரவி-ஜெய் உடன் மோதும் நயன்தாரா

ஜெயம் ரவி-ஜெய் உடன் மோதும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaலட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவி, அர்விந்த் சாமி நடித்துள்ள போகன் படம் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது.

இதே நாளில் மகேந்திரன் ராஜா மணி இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படங்களுடன் மோத தயாராகிவிட்டார் நயன்தாரா.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள டோரா படத்தில் இடம்பெற்றுள்ள ரா ரா ரா என்ற பாடலை பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம்.

விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சற்குணம் தயாரித்துள்ள இப்படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார்.

Nayantharas Dora Single track clash with Jayam Ravi and Jai movies

’எம்ஜிஆருக்கும் பாக்யராஜீக்கும் உள்ள ஒற்றுமைகள்..’ – பேரரசு பேச்சு

’எம்ஜிஆருக்கும் பாக்யராஜீக்கும் உள்ள ஒற்றுமைகள்..’ – பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Perarasu speech about MGR and Bhagyaraj at Ayyanar Veethi press meetஜிப்ஸி ராஜ்குமார் இயக்கத்தில் பாக்யராஜ், பொன்வண்ணன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் அய்யனார் வீதி.

சாட்டை யுவன் நாயகனாகவும், ஷாரா ரெட்டி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சிங்கம்புலி, மீரா கிருஷ்ணன், முத்துக்காளை உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

யு.கே.முரளி இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீசாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் ஐகோர்ட் நீதிபதி, நடிகர் ஜெய் ஆகாஷ், இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர்கள் தானு, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இதில் கலந்துக் கொண்ட இயக்குனர் பேரரசு பேசும்போது…

“எம்ஜிஆருக்கும் பாக்யராஜ்க்கும் சில ஒற்றுமைகள் உண்டு.

இருவரையுமே பெண்களுக்கு அதிகம் பிடிக்கும்.

பாக்யராஜை எம்ஜிஆர் தன் திரையுலக வாரிசாக அறிவித்தார்.

இதற்கு மற்றொரு காரணமும் இருக்கும் என நம்புகிறேன்.

எம்ஜிஆர் தன் படங்களில் தாயை உயர்வாக சித்திரித்து இருப்பார். அவரது பெரும்பாலான படங்களின் தலைப்புகளில் தாய் என்ற வார்த்தை இருக்கும்.

அதுபோல் பாக்யராஜ் தன் படங்களில் தந்தையை உயர்வாக சித்தரித்து இருப்பார். இதுவும் ஒரு காரணம் என நான் நம்புகிறேன்.” என்று பேசினார்.

Perarasu speech about MGR and Bhagyaraj at Ayyanar Veethi press meet

ஏப்ரல் மோதலுக்கு தயாராகும் சிம்பு-தனுஷ்-கார்த்தி

ஏப்ரல் மோதலுக்கு தயாராகும் சிம்பு-தனுஷ்-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi Simbu Dhanushமணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் காற்று வெளியிடை.

இதன் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இத்துடன் மோத அடுத்த வாரமே சிம்பு, தனுஷ் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (ஏஏஏ) படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிய வந்துள்ளது.

இதே நாளில் தனுஷ் இயக்கி தயாரித்து நடித்துள்ள பவர் பாண்டி படமும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

எனவே விடுமுறை தொடங்கியது முதல், ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Karthi Simbu Dhanush movies release in April 2017

ரஜினி படத்தயாரிப்பாளருடன் இணையும் மோகன்லால்-விஷால்

ரஜினி படத்தயாரிப்பாளருடன் இணையும் மோகன்லால்-விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohanlal vishalமோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியாகி கேரளாவை அதிர வைத்த படம் புலி முருகன்.

ரூ. 30 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் 150 கோடி வரை வசூலித்துள்ளது.

இதனையடுத்து, உன்னி கிருஷ்ணன் என்பவர் இயக்கும் புதுப்படத்தில் நடிக்கவிருக்கிறார் மோகன்லால்.

இதில் விஷால் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

இதன் மூலம் இவர் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ரஜினியின் லிங்கா படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறாராம்.

Vishal malayalam debut movie with Mohanlal

முறுக்கு மீசையுடன் விஜய் சுற்ற இதான் காரணமா?

முறுக்கு மீசையுடன் விஜய் சுற்ற இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay latest stillsபைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் என்பதை கலைஞர்கள் விவரத்துடன் பார்த்தோம்.

தற்போது இப்படம் எந்த மாதிரியான கதைக்களம் என்ற தகவல் கசிந்துள்ளது.

கிட்டதட்ட 40 வருடங்களுக்கு முன்பு உள்ள மதுரை கதைக்களத்தை கொண்டு உருவாக்கவிருக்கிறாராம் அட்லி.

எனவே தான் விஜய் அண்மை காலமாக முறுக்கு மீசையுடன் வலம் வருகிறாராம்.

மேலும் இக்கால கதையும் இதில் தொடர்பு கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.

Vijay getup changes in Thalapathy 61 movie

‘எல்லா இளைஞர்களையும் கூப்பிடுங்க நானும் வர்றேன்..’ லாரன்ஸ்

‘எல்லா இளைஞர்களையும் கூப்பிடுங்க நானும் வர்றேன்..’ லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrance wishes to invite Students for Jallikattu success interviewஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களை தமிழக இளைஞர்கள் மாணவர்கள் இணைந்து நடத்தி ஒரு புரட்சி செய்தனர்.

இதற்கு பல்வேறு வகைகளில் நடிகர் லாரன்ஸ் உதவியிருந்தார்.

போராட்டத்தின் கடைசி நாளில் சில வன்முறை ஏற்பட்ட போது லாரன்ஸ் தலையிட்டு சமாதானம் பேசி மாணவர்களுக்காக குரல் கொடுத்தார்.

இந்நிலையில் போராட்டம் வெற்றி குறித்து பேச லாரன்ஸை பல ஊடகங்கள் அழைக்கின்றனர்.

ஆனால் என்னை மட்டும் அழைக்காதீர்கள்.

இந்த வெற்றிக்கு காரணமான மாணவர்களையும் அழையுங்கள். நானும் அவர்களோடு கலந்து கொள்கிறேன். என்று தெரிவித்து இருக்கிறாராம்.

Raghava Lawrance wishes to invite Students for Jallikattu success interview

More Articles
Follows